திருப்பதி திருமலைக்கு நாள்தோறும் உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அங்கு பக்தர்கள் தங்குவதற்கு ஏற்ப குறைந்த கட்டணத்தில் தங்கும் விடுதிகளை திருப்பதி தேவஸ்தானம் வாடகைக்கு விட்டுவருகிறது. இதுவரை மிக குறைந்த கட்டணத்தில் இருந்த திருப்பதி திருமலை தங்கும் விடுதிகளுக்கு அண்மையில் கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தியது திருப்பதி தேவஸ்தானம். இது ஏழுமலையானை தரிசக்க செல்லும் பக்தர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
30 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகை உயர்த்தப்படாததால், இப்போது தங்கும் விடுதிகளின் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதாக தேவஸ்தான நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதனால், அங்கு செல்லும் பக்தர்கள் உயர்த்தப்பட்ட தங்கும் விடுதிகளுக்கான கட்டணங்கள் எவ்வளவு என்பதை தெரிந்து கொண்டு செல்வது அவசியம்.
திருப்பதியில் நாள்தோறும் சுமார் 30 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். அவர்கள் இலவச தரிசனம், சிறப்பு தரிசனம் ஆகியவற்றில் தரிசனம் மேற்கொள்ளலாம். ஏற்கனவே இருக்கும் தரிசன கட்டணங்களில் திருப்பதி தேவஸ்தானம் எந்த மாற்றமும் செய்யவில்லை. ஆனால், திருமலையில் இருக்கும் பல்வேறு தங்கும் விடுதிகளுக்கான கட்டணம் மட்டும் பன்மடங்கு உயர்த்தியுள்ளது.
திருப்பதி தங்கும் விடுதி பட்டியல்:
1. திருப்பதி ஸ்ரீனிவாசம் வளாகம்
2. திருப்பதி விஷ்ணு நிவாசம்
3. திருப்பதி செரினிவாசம் வளாகம்
4. திருப்பதி மாதவம் விருந்தினர் மாளிகை
விலைப்பட்டியலுக்கு ஏற்பட சாதாரண அறை மற்றும் ஏசி, ஏசி அல்லாத அறைகள் திருப்பதி திருமலையில் இருக்கின்றன. இந்த விருந்தினர் மாளிகைகள் மற்றும் காட்டேஜ்களுக்கான வாடகை சுமார் 10 மடங்கு திருப்பதி தேவஸ்தானம் உயர்த்தியுள்ளது. சரியான விலைப் பட்டியலை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணைய பக்கமான TTD -க்கு சென்று முழுமையான விவரத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | திருப்பதி கோவிலுக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை அளித்த சென்னை இஸ்லாமிய தம்பதிகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ