Happy Pongal 2023: பொங்கலோ பொங்கல் என சூரியனுக்கு படையலிடும் கலாச்சார பண்டிகை

Tamil Cultural Pongal Festival: இந்தியா முழுவதும் ஒரு நாள் கொண்டாட்டமாக இருக்கும் பொங்கல் பண்டிகை, நமது தமிழ்நாட்டில் தொடர் பண்டிகையாக மூன்று நாட்களாக கொண்டாடப்படுகிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 13, 2023, 02:44 PM IST
  • சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் பொங்கலோ பொங்கல்
  • விலங்குகளுக்கு நன்றி சொல்லும் மாட்டுப் பொங்கல்
  • வீரத்தை வெளிகாட்டும் ஜல்லிக்கட்டு
Happy Pongal 2023: பொங்கலோ பொங்கல் என சூரியனுக்கு படையலிடும் கலாச்சார பண்டிகை title=

தை மாத பிறப்பான 2023 ஜனவரி 15ம் நாள், தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான 'தைத்திருநாள்' கொண்டாடப்படுகிறது. இந்த நாளை இந்தியா முழுவதுமே வெவ்வேறு பெயர்களால் கொண்டாடுகின்றனர். மகர சங்கராந்தி, லோஹ்ரி (Lohri), சுகாரத், பொகாலி பிகு (bogali bihu) என இந்தியக் கலாச்சாரத்தில் மிகவும் முக்கியமான பண்டிகையாக பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்தியா முழுவதும் ஒரு நாள் கொண்டாட்டமாக இருக்கும் பொங்கல் பண்டிகை, நமது தமிழ்நாட்டில் ஒரு நாள் அல்ல, மூன்று நாட்கள் தொடரும் தொடர் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. 

போகி
தமிழ்  மாதமான தை பிறப்பதற்கு முதல் நாள், அதாவது மார்கழி மாத இறுதிநாளை போகிப் பண்டிகையாக கொண்டாடுகிறோம். பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதன் அடிப்படையில், தேவையில்லாதவற்றை வீட்டில் இருந்து களைந்து, வீட்டை சுத்தமாக்கி, போகி நாளன்று, அந்தி சூரியனை வழியனுப்பி வைப்போம்.

தை மாதம் பிறப்பு
தை மாதத்தின் முதல் நாள் சூரியன் பொங்கல் கொண்டாடுகிறோம். தனது திசையை மாற்றி சஞ்சரிக்கும் சூரியனுக்கு வரவேற்பு வழங்கும் நாளாக, தமிழர்களின் தை மாதப் பிறப்பு கொண்டாடப்படுகிறது.

பயிர்கள் செழித்து வளர உதவும் இயற்கைக்கும், சூரியனுக்கும் நன்றி தெரிவிக்கும் அறுவடைத் திருநாளாகவும் பொங்கலைக் கொண்டாடுகிறோம்.

மேலும் படிக்க | உங்க கணவன்/மனைவி ‘இந்த’ ராசியா! அப்ப உங்களை மாதிரி லக்கி யாருமே இல்லை! 

மாட்டுப் பொங்கல்

தை மாதம் பிறந்த அன்று சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் பொங்கல் திருநாளாக அமைந்தால், அதற்கு அடுத்த நாள், விவசாயத்திற்கும், வேளாண்மைக்கும் உயிர்நாடியாக விளங்கி, மனிதர்களுக்கு உதவும் விலங்குகளுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாக மலர்கிறது. மாடுகளை அலங்கரித்து, அவற்றிற்கு பூஜை செய்து நன்றி செலுத்தும் தினம் மாட்டுப் பொங்கல் என்று அழைக்கப்படுகிறது.

தமிழகத்திலேயே, பல பெயர்களால், அழைக்கப்படும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று, உறவினர்களின் வீடுகளுக்கு சென்று அனைவரையும் கண்டு மகிழும் காணும் பொங்கலும் கொண்டாடப்படுகிறது. 

அதாவது, பொங்கல் என்பது, நமக்கும், நமது வாழ்க்கைக்கும் உதவும் இயற்கை மற்றும் உற்றார் உறவினர், நண்பர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் சந்தர்ப்பம் ஆகும். 

மேலும் படிக்க | பழனி கோவில் முருகரின் நவபாஷாணம் மற்றும் கருவறை சிலைகள் ஆய்வு

ஜல்லிக்கட்டு
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி நடத்தப்படுகிறது. இந்த வீர விளையாட்டிற்கென ஒரு தொன்மையான மரபு இருக்கிறது. 

இந்தியா மட்டுமில்லாமல் தெற்காசிய நாடுகளான இந்தோனேசியா, தாய்லாந்து, லாவோஸ், நோபாளம், மியான்மர், இலங்கை போன்ற நாடுகளில் வசிக்கும் இந்து மக்களும் இந்த நன்றி தெரிவிக்கும் பண்டிகையான பொங்கலை கொண்டாடுகின்றனர்.

தை மாதத்தை வெகுவிமர்சையாக கொண்டாடி வரவேற்கும் நாளான பொங்கல் என்பது தமிழ் நாட்டின் பாரம்பரிய சிறப்பு பண்டிகைகளின் முக்கியமான ஒன்றாகும்.

மேலும் படிக்க | ஸ்ரீநாத்ஜி கோவிலின் ஒற்றை அரிசியை வீட்டில் வைத்தால் நீங்கள் பில்லியனர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News