குழந்தை பிறக்காது என்ற கூறிய டிரான்ஸ்ஜென்டருக்கு ஆண் குழந்தை பிறப்பு!!

கர்ப்பமாக இருக்க முடியாது என்று மருத்துவர்கள் கூறிய டிரான்ஸ்ஜென்டர் மனிதனுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது!!

Last Updated : Mar 10, 2019, 01:51 PM IST
குழந்தை பிறக்காது என்ற கூறிய டிரான்ஸ்ஜென்டருக்கு ஆண் குழந்தை பிறப்பு!!  title=

கர்ப்பமாக இருக்க முடியாது என்று மருத்துவர்கள் கூறிய டிரான்ஸ்ஜென்டர் மனிதனுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது!!

உலகில் மனிதனாய் பிறந்த அனைவருக்கும் தங்களுக்கு என்ற தனித்திறமை இருக்கும். சிலர் அந்த திறமையை வெளிப்படுத்துகின்றனர், இன்னும் சிலர் அது வெளிப்படுத்துவதில்லை. ஆனால், நாம் அனைவரின் மனதிலும் ஆங்கில திரைப்படங்களில் வருகின்ற அட்டகாசமான திறைமைகளை உடைய நிறைய கதா நாயகர்கள் மனதில் வைத்திருப்போம். குறிப்பாக, ஹல்க், சூப்பர் மேன், ஸ்பைடர் மேன், ஐயன் மேன் ஆகிய கதா பத்திரங்கள் அனைத்தும் நீங்கா இடத்தை பெற்றிருக்கும். 

நாம் அனைவரும் இது போன்ற ஒரு சக்தி நமக்கும் கிடைக்காதா என ஏங்கியதும் உண்டு. இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த வைலே சிம்ப்சன் என்பவளுக்கு ஆணாக மாறவேண்டும் என்பது ஆசை. அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள சான் அண்டோனியோ பகுதியைச் சேர்ந்தவர் வைலே சிம்ப்சன். தற்போது 28 வயதாகும் இவர் தனது 21 வயதில் பெண்ணாக இருந்து ஆணாக மாறினார். இதையடுத்து, அவர் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின்னர் ஸ்டீபன் கீத் என்பவருடன் ஒன்றாக வாழ்ந்து வருகிறார். 

சிம்ப்சனுக்கு மாதவிடாய் சுழற்சி இல்லாததால், குழந்தை பிறக்க வாய்ப்பே இல்லை என்று டாக்டர்கள் கூறிய நிலையில், கடந்தாண்டு பிப்ரவரி மாதம் அவர் கர்ப்பமானார். மீசை, தாடி தோற்றத்துடன் வயிற்றில் குழந்தையை சுமந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது. தற்போது, 6 மாத குழந்தையுடன் சிம்ப்சன் - கீத் ஜோடி மகிழ்ச்சியோடு வசித்து வருகின்றனர். அறுவை சிகிச்சை மூலமாக சிம்சனுக்கு பிரசவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

Trending News