Qualities That A Leader Must Have : வருடா வருடம், அக்டோபர் 2ஆம் தேதி மகாத்மா காந்தியின் பிறந்தநாளன்று காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. 1869ஆம் ஆண்டு பிறந்த மகாத்மா காந்தி, இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைப்பதில் பெரும்பங்காற்றியவர். அதுவும், ஆயுதம் ஏந்தாமல் அகிம்சை வழியலும் அன்பு வழியிலும் சுதந்திரம் வாங்கிக்கொடுத்த இவரை, இன்னும் எவ்வளவு வருடம் ஆனாலும் இந்தியர்கள் மறக்க மாட்டார்கள். காந்தி, தான் வாழ்ந்த வருடங்களில் பல விஷயங்களை பின் வருவோர்களுக்காக கூறிவிட்டு சென்றிருக்கிறார். அப்படி, அவர் நல்ல தலைவருக்கு இருக்க வேண்டிய தகுதிகள் குறித்து பேசியிருப்பதை இங்கு பார்ப்போம்.
1.ஒருமைப்பாடு:
ஒரு நல்ல தலைவராக இருப்பவர் நேர்மை குணம் நிறைந்தவராக இருக்க வேண்டும் என்று கூறுகிறார், காந்தி. தனது அறமும் நெறியும் மாறாது யார் ஒருவர் நடந்து கொள்கிறாரோ, அவர்தான் பிறருக்கு நல்ல முன்னுதாரணமாக விளங்க முடியும் என்று கூறும் இவர், அவர்தான் நல்ல தலைவராக தகுதி கொண்டவர் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
2.இரக்கம்:
நல்ல தலைவருக்கு, நேர்மை குணம் இருந்தாலும் பிறரை புரிந்து கொள்ளும் தன்மையும் இருக்க வேண்டும் என கூறுகிறார் காந்தி. அப்போதுதான் அவரால் பிறர் எந்த மாதிரியான சிரமங்களை எதிர்கொள்கிறார் என்பதை புரிந்து கொண்டு, அவர்களின் தேவையை அறிந்து நடந்து கொள்ள முடியும் என்று கூறுகிறார். பிறரின் மனதை புரிந்து கொள்ள தகுதியற்றவர்கள், நல்ல தலைவராக விளங்க முடியாது என்பது காந்தியின் கூற்ராகும்.
3.தைரியம்:
தாங்கள் எடுக்கும் முடிவிலும், பேசும் விஷயத்திலும் தைரியமாக யார் நிற்கிறார்களோ, அவர்களே நல்ல தலைவராக விளங்க தகுதியுடவர்கள் என கூறுகிறார் காந்தி. துன்பம் நேரும் போதும், எந்த காலக்கட்டத்திலும் தன்னிலை மாறாது யார் தைரியமாக இருக்கிறார்களோ, அவர்களுக்கே இந்த உலகம் சொந்தம் என்பது காந்தியின் கருத்து.
மேலும் படிக்க | மகாத்மா காந்தியின் அரிய புகைப்படங்கள் - ஒரு தொகுப்பு!
4.சுய ஒழுக்கம்:
நல்ல தலைவர்கள், சுய ஒழுக்கும் மற்றும் சுய கட்டுப்பாட்டுடன் இருப்பார்களாம். பிறர், தன்னை பார்த்து செயல்பட வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இல்லாமல், தன் மனதையும் இச்சைகளையும் கட்டுப்படுத்த தெரிந்தவர்கள் நல்ல தலைவராக விளங்க முடியும் என்பது காந்தியின் நம்பிக்கை.
5.சேவை:
நல்ல தலைவர்களாக இருப்பவர்கள், தான் ஒரு நல்ல தலைவர் என்பதை தாண்டி சேவை செய்ய வேண்டும் என்ற மனப்பான்மை கொண்டவர்களாக இருக்க வேண்டும். கையில் பதவி, பொருள், புகழ் கிடைக்க வேண்டும் என்பதற்காக இல்லாமல் பிறர் நலனுக்காக நல்லது செய்பவர்கள், நல்ல தலைவர்களாவர் என்று காந்தி கூறுகிறார்.
6.தெளிவான பார்வை:
நல்ல தலைவர்களுக்கு அடுத்து எப்படி காய் நகர்த்த வேண்டும், அடுத்து எந்த அடி எடுத்து வைக்க வேண்டும் என்பது குறித்த தெளிவான பார்வை இருக்க வேண்டுமாம். ஒரே இலக்கை நோக்கி அனைவரையும் பயணிக்க வைப்பது அவரது நோக்கமாக இருக்கும்.
7.வன்முறை அற்ற மனநிலை:
நல்ல தலைவராக இருப்பவர், ஒரு விஷயத்தை ஜெயிக்க வேண்டும், அல்லது ஒன்றை பிறருக்கு நிரூபிக்க வேண்டும் என்பதற்காக வன்முறையை ஒரு நாளும் கையில் எடுக்க கூடாது. எதுவாக இருப்பினும், அதை அகிம்சை முறையில் பெற வேண்டும் என்பது அவர்களின் நோக்கமாக இருக்க வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ