இன்றைய (27-06-2018) முக்கிய செய்திகள் ஒரு பார்வை!!

இன்றைய முக்கிய செய்திகள் என்னென்ன? கிழ் உள்ள தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளவும்!

Written by - Vijaya Lakshmi | Edited by - Shiva Murugesan | Last Updated : Jun 27, 2018, 07:51 PM IST
இன்றைய (27-06-2018) முக்கிய செய்திகள் ஒரு பார்வை!! title=

இன்றைய முக்கிய செய்திகள் என்னென்ன? கிழ் உள்ள தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளவும்!

 

> விவசாயிகள் கோரிக்கை ஏற்று வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு

45041 ஏக்கர் நிலங்களுக்கு, நாள் ஒன்றுக்கு 900 கனஅடி வீதம் 45 நாட்களுக்கு முழுமையாகவும் 75 நாட்களுக்கு முறைவைத்தும் மொத்தம் 120 நாட்களுக்கு 6739 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்கப்படும்.

> சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்கள் கொண்ட நடிகையின் ஃபிகினி

சாரா கான் தனது பிக்னி படங்களை இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் 'எனக்கான நேரம்' என போட்டு ஷேர் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

> மகளிரை பாதுகாப்பது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை

ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவின் நிலையே இப்படி என்றால், தமிழகத்தின் நிலையை நினைத்துப் பார்க்கவே கவலையாக உள்ளது. 

> மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தளுக்கு மம்தா பானர்ஜி-க்கு ஆதரவு அளித்த காங்கிரஸ்

மூன்றாவது அணி சார்பாக மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுகேந்த் சேகர் ராய் வேட்பாளருக்கு ஆதரவளிக்க காங்கிரஸ் தயார்

> சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் நடிகையின் நடன வீடியோ!

இணையதளம் தற்போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான அனுபவத்துடன் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

> ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மனித உரிமைகள் மீறப்படுவதாக ஐ.நா. அறிக்கைக்கு இந்திய ராணுவ தளபதி கண்டனம்

அனைவருக்கும் தெரியும், இந்தியா இது போன்ற செயல்களில் ஈடுபடுவதில்லை. ஐ.நா., அறிக்கையில் கூறப்பட்டிருப்பது எந்தவிதத்திலும் உண்மை இல்லை. அந்த அறிக்கை உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டு உள்ளது.

வெளியானது நயன்தாரா - அதரவாவின் இமைக்கா நொடிகள் டிரைலர்!

இமைக்கா நொடிகள் படத்தின் அனைத்து பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. 

> 18 MLAs தகுதி நீக்க வழக்கு! 3-வது நீதிபதியாக சத்யநாராயணா நியமனம்!

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் விமலாவுக்கு பதில் எம். சத்யநாராயணா விசாரிக்க உச்ச நீத்திமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், உச்ச நீதிமன்றமே வழக்கை விசாரிக்க கோரிய டிடிவி தரப்பு கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. 

> பள்ளி பாடத்திட்டத்தில் அரசியலமைப்பு சட்டம்: அமைச்சர் செங்கோட்டையன்

6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடங்களில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் சில அம்சங்களை சேர்க்க நடவடிக்கை.

வங்கிக் கடனை திரும்ப செலுத்த முயற்ச்சி! விஜய் மல்லையா மீண்டும் ட்விட்!

விஜய் மல்லையா தற்போது, 2016-முதல் தாம் வாங்கிய வங்கிக் கடனை திரும்ப செலுத்த தாம் முயற்ச்சி செய்து வருவதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்!

ஆகஸ்டில் தொடங்குகிறது சுந்தர்.சி-ன் 'சங்கமித்ரா' படப்பிடிப்பு!

வரலாற்று கதையை அடிப்படையாக கொண்டு சுந்தர்.சி இயக்கும் ‘சங்கமித்ரா’ படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் முதல் ஆரம்பிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கின்றன. 

கோவை குற்றாலம் அருவிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு 2ம் நாளாக தடை!

கனமழை, பலத்த காற்று வீசுவதால் பாதுகாப்பு கருதி கோவை குற்றால அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல 2ம் நாளாக வனத்துறை தடை விதித்துள்ளது! 

> Amarnath Yatra: பலத்த பாதுகாப்புக்கு இடையே யாத்திரை தொடங்கியது!

அமர்நாத் புனித யாத்திரையின் முதல் குழு பாகல்காம் மற்றும் பல்தல் அடிவார முகாம்களில் இருந்து வாகனங்களில் புறப்பட்டு சென்றது.

> அமர்நாத் யாத்திரிகள் எங்களின் விருந்தாளிகள்: ஹிஸ்புல் தீவிரவாத அமைப்பின் வைரல் வீடியோ!  

அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்கள் எங்களது குறி கிடையாது. அமர்நாத் யாத்திரிகளை நாங்கள் என்றுமே தாக்கியது கிடையாது. எங்கள் போர் இந்தியாவுடன் தான். இந்திய மக்களுடன் கிடையாது என ஹிஸ்புல் தீவிரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.

> டெல்லியில் இன்று அதிகாலை முதல் திடீர் ஜில்-ஜில் மழை: மக்கள் மகிழ்ச்சி!

டெல்லி நகரின் பல இடங்களில் திடீரென மழை பெய்வதால் கோடை வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்!

> FIFA 2018: 1-2 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்தை முறியடித்து குரேஷியா!

உலக கோப்பை கால்பந்து லீக் போட்டியில் அர்ஜெண்டினா அணியை 1-2 என்ற கோல் கணக்கில் குரோஷியா வீழ்த்தியது!  

நான் யாருமில்ல! வெளியானது தமிழ் படம் 2 அறிமுக பாடல்!

அமுதன் இயக்கத்தில் சிவா நடிப்பில் உருவாகி இருக்கும் `தமிழ்படம் 2' படத்தின் அறிமுக பாடல் ஒன்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. 

> FIFA World Cup 2018:  நைஜீரியாவை வீழ்த்தி அர்ஜெண்டீனா வெற்றி!

உலக கோப்பை கால்பந்து லீக் போட்டியில் நைஜீரியா அணியை 1-2 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டீனா வீழ்த்தியது!

Trending News