திருப்பதி தரிசனம் மிஸ் ஆனதா? பக்தர்களுக்கு குட் நியூஸ் அளித்த தேவஸ்தானம்

பக்தர்களுக்கு சூப்பர் வாய்ப்பை வழங்கியுள்ளது திருப்பதி தேவஸ்தானம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 23, 2021, 11:06 AM IST
திருப்பதி தரிசனம் மிஸ் ஆனதா? பக்தர்களுக்கு குட் நியூஸ் அளித்த தேவஸ்தானம் title=

வடகிழக்கு பருவமழை திருமலை திருப்பதியை புரட்டிப் போட்டுள்ளது. அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. வாகனங்கள், விலங்குகள் என பாரபட்சமின்றி தண்ணீரால் அடித்துச் செல்லப்படுகின்றன. திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசிக்க திட்டமிட்டிருந்த பக்தர்கள் தங்களது பயணத் திட்டத்தை ஒத்தி வைத்துள்ளனர்.

அத்தகைய பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை தேவஸ்தானம் (Tirumala Tirupati Devasthanams) அறிவிக்கிறது. அதன்படி திருப்பதியில் நிலைமை சீரடைந்து வருவதால், திருமலை மலைப்பாதையிலும், அலிபிரி நடைபாதை மார்க்கத்திலும் பயணிக்க, பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் நவம்பர் 18 முதல் 30ம் தேதி வரையிலான நாட்களில், ஏழுமலையான் தரிசனத்திற்கு டிக்கெட் முன்பதிவு செய்து, திருப்பதி திருமலைக்கு வர முடியாத பக்தர்களுக்கு, மற்றொரு நாளில் தரிசிப்பதற்கான வாய்ப்பை தேவஸ்தானம் வழங்குகிறது. 

ALSO READ | காவாளம்: திருப்பதி உண்டியல் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள்

இதற்காக சிறப்பு மென்பொருளை உருவாக்கப்பட உள்ளது. அவர்கள், ஆறு மாதங்களுக்குள் மீண்டும் தரிசனம், வாடகை அறை உள்ளிட்டவற்றை முன்பதிவு செய்து கொள்ள முடியும். 

இலவச சர்வதரிசனம், 300 ரூபாய் விரைவு தரிசனம், வர்ச்சுவல் சேவை, ஸ்ரீவாணி அறக்கட்டளை சேவை உள்ளிட்டவற்றுக்கு முன்பதிவு செய்தவர்கள் அனைவருக்கும் இது பொருந்தும். மேலும், கடந்த சில நாட்களில், தரிசனத்திற்கு வர இயலாத பக்தர்கள், 30ம் தேதிக்குள் தரிசனத்திற்கு வந்தால், அவர்களை தரிசனத்திற்கு அனுமதித்து, லட்டு பிரசாதம் வழங்கவும் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. 

வரும், 30ம் தேதிக்கு பிறகு தரிசனத்திற்கு வருவதாக இருந்தால், புதிய மென்பொருள் உருவான பின், அதன் வாயிலாக முன்பதிவு செய்து தான் வரவேண்டும் என்று திருப்பதி தேவஸ்தானம் கூறியுள்ளது.

ALSO READ | TTD: திருப்பதிக்கு காணிக்கையாக கிடைத்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் நிலை என்ன

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News