கிரெடிட் ஸ்கோர் என்பது உங்கள் கடன் வாங்கும் தகுதியை நிர்ணயிக்கிறது. கிரெடிட் ஸ்கோர் கம்மியாக இருக்கும் பட்சத்தில் உங்கள் கடன் நிராகரிக்கப்படலாம். கிரெடிட் ஸ்கோர் அதிகம் இருந்தால், கடன் தொகையும் அதிகரிக்கும், அதே சமயம் வட்டியும் குறையும். வாங்கிய கடனை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்துவதன் மூலமும், நல்ல கடன் வரலாற்றை வைத்திருப்பதன் மூலமும் நல்ல கிரெடிட் ஸ்கோரை வைத்து இருக்கலாம். உங்கள் கிரெடிட் ஸ்கோரை அதிகப்படுத்த கிரெடிட் கார்ட் உதவிகரமாக இருந்தாலும், கிரெடிட் கார்டு இல்லாமல் உங்கள் கிரெடிட் ஸ்கோரை அதிகமாக வைத்திருக்கலாம். அத்திற்கான வழிகளை தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | கோடீஸ்வரனாகும் எளிய வழி... ‘இந்த’ 5 விதிகளை கடைபிடிக்கவும்...!
கிரெடிட் கார்டு இல்லாமல் உங்கள் கிரெடிட் ஸ்கோரை அதிகப்படுத்துவது எப்படி?
நிலையான வேலையில் இருங்கள்: பல தனிநபர் கடன் தரும் நிறுவனங்கள் உங்கள் வேலையை வைத்தே கடனை தருகின்றனர். உங்களிடம் கூடுதல் வருமான ஆதாரங்கள் அல்லது முதலீடுகள் இருந்தாலும், உங்கள் வேலையைத் தக்கவைத்துக்கொள்வது நல்லது. ஏனெனில் கடன் வழங்குபவர்கள் மற்ற வருமான ஆதாரங்களின் மீது குறைந்த நம்பகத்தன்மை கொண்டுள்ளன. மாத வருமானம் கொண்டவர்களை குறிவைத்தே கடன்கள் வழங்கப்படுகிறது.
பணத்தை திருப்பி செலுத்துதல்: உங்கள் மாத வீட்டு வாடகை மற்றும் பிற பில் தொகைகளை சரியான நேரத்தில் கட்டுங்கள். இப்படி சரியான நேரத்தில் கட்டுவது உங்கள் கிரெடிட் ஸ்கோரை அதிகரிக்க உதவும். குறிப்பிட்ட தேதிகளில் பணத்தை செலுத்தாமல் இருப்பது கிரெடிட் மதிப்பீட்டில் பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். எனவே, பணம் செலுத்துவதற்கான காலக்கெடுவை தவறவிடுவதை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. சரியான நேரத்தில் பில்களை செலுத்தி நிலையான வரலாற்றை பராமரிப்பது உங்கள் கிரெட் ஸ்கோரை உயர்த்தும்.
வாடகை கட்டணங்கள்: நீங்கள் வாடகை வீட்டில் குடி இருந்தால் உங்கள் மாதாந்திர வாடகை தொகையை சரியான தேதியில் செலுத்தி வாருங்கள். இது நீங்கள் சரியான பணத்தை திருப்பி செலுத்துவீர்கள் என்ற நம்பிக்கையை வங்கிகளுக்கு ஏற்படுத்தும். மேலும், மாதாந்திர தொகையை ஆன்லைனில் செலுத்தி இருந்தால் மட்டுமே உங்கள் கிரெடிட் ஸ்கோர் உயரும்.
கடன் வாங்குங்கள்: உங்கள் பண தேவைகளை பூர்த்தி செய்ய வங்கி அல்லது வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். வாங்கிய கடன் தொகையை சரியான நேரத்தில் திருப்பி கட்டுவது உங்கள் கிரெடிட் ஸ்கோரை கணிசமாக உயர்த்தும். ஒவ்வொரு மாதம் தொடங்கி, கடைசி EMI முடியும் வரை பேமெண்ட்டுகளை தவறவிடாமல் கட்டுவது மிகவும் முக்கியம். ஒருவேளை குறிப்பிட்ட தேதியில் EMI தொகை கட்டவில்லை என்றால் உங்கள் கிரெடிட் ஸ்கோர் குறைய வாய்ப்பு உள்ளது.
பியர்-டு-பியர் கடன்: பியர்-டு-பியர் (P2P) கடன் என்பது வங்கி அல்லது NBFC கடன்களுக்கு மாற்றாக உள்ள கடன் வாங்கும் முறை ஆகும். கடன் வாங்குபவர்களை ஆன்லைன் தளங்கள் மூலம் கடன் கொடுப்பவர்களுடன் இணைப்பது ஆகும். வழக்கமான கடன் வழங்கும் நிறுவனங்களுடன் சில நேரங்களில் சிக்கல் எழும். இந்த சிக்கல்களை தவிர்க்க விரும்பினால், P2P கடன் கடனை பெறுவதைக் கருத்தில் கொள்ளுங்கள். இருப்பினும், உங்கள் கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்த, உங்கள் கடனை சரியான முறையில் திரும்பி செலுத்துவது நல்லது. இந்த உத்திகளை பயன்படுத்தி, கிரெடிட் கார்டைப் பயன்படுத்தாமலேயே நல்ல கிரெடிட் ஸ்கோரை பராமரிக்கவும் முடியும்.
மேலும் படிக்க | பிஎஃப் கணக்கில் அதிரடி ஏற்றம், வந்தது கூடுதல் தொகை: இப்படி செக் பண்ணுங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ