உஜ்ஜீவன் சிறு நிதி வங்கி அதன் சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை திருத்தியுள்ளது. இந்த மாற்றத்தை வங்கி வியாழக்கிழமை அன்று அறிவித்தது. அதன்படி தற்போது வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்புக் கணக்கில் அதிகபட்சமாக 7 சதவீத வட்டியைப் பெறுவார்கள். இது தவிர ரூ.1 லட்சம் வரையிலான சேமிப்பு கணக்குகளுக்கு இந்த வங்கி 3.5 சதவீத வட்டியை தொடர்ந்து வழங்கும்.
அதேபோல் 1-5 லட்சம் வரையிலான சேமிப்பிற்கு வங்கி 6 சதவீத வட்டி அளிக்கும். அதே சமயம் ரூ.5 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை சேமிப்பு உள்ள வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சமாக 7 சதவீத வட்டி கிடைக்கும். 1-10 கோடி சேமிப்பு உள்ள வாடிக்கையாளர்களுக்கு 6 சதவீத வட்டி மட்டுமே கிடைக்கும். 10 கோடிக்கு மேல் சேமிப்புக் கணக்கில் 6.75 சதவீத வட்டி கிடைக்கும். அதன்படி வங்கியின் பெரும்பாலான சேமிப்புக் கணக்கு வாடிக்கையாளர்கள் இனி அதிகபட்ச வட்டி விகிதமான 7 சதவிகிதத்தைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு அதிர்ச்சி: வட்டி விகிதத்தை அதிகரித்தது HDFC வங்கி
முன்னதாக வங்கி 1 முதல் 25 லட்சம் வரையிலான சேமிப்புக் கணக்கில் 7 சதவீத வட்டியை வழங்கியது. அதேசமயம், 25 லட்சம் மற்றும் 10 கோடி ரூபாய்க்கு மேல் சேமிப்புக் கணக்கில், 6 சதவீத வட்டி வழங்கப்பட்டது. அதேபோல் மூத்த குடிமக்களுக்கு வங்கி சிறப்பு வட்டி விகிதத்தை வழங்குவதில்லை. உங்கள் சேமிப்புக் கணக்கில் ரூ.1,20,000 இருந்தால், ரூ.1 லட்சத்துக்கு 3.5 சதவீதமும், ரூ.20,000க்கு 6 சதவீதமும் வட்டி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் விகிதங்களையும் மாற்றியது
உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியும் மே 19 முதல் ரூ. 2 கோடிக்குக் குறைவான எஃப்டிகளுக்கான நிலையான வைப்புகளுக்கான வட்டி விகிதங்களை மாற்றியுள்ளது. இப்போது வாடிக்கையாளர்களுக்கு 2.90 முதல் 7.10 சதவீதம் வரை வட்டி வழங்கப்படும். எனினும் 990 நாட்கள் முதிர்வு கொண்ட ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு அதிகபட்ச விகிதம் 7.10 கிடைக்கும். இந்த நாளுக்கு மேலான ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு, வட்டி 6-6.25 சதவீதமாக இருக்கும். மூத்த குடிமக்களுக்கு வங்கி கூடுதல் .50 சதவீத வட்டி அளிக்கும்.
கீழே குறிப்பிடப்பட்டுள்ள வட்டி விகிதங்கள்
வட்டி தொகை | விகிதம் |
1 லட்சம் வரை | 3.50% |
ரூ. 1 லட்சம் மேல் ரூ. 5 லட்சம் வரை | 6.00% |
ரூ. 5 லட்சம் மேல் 1 கோடி வரை | 7.00% |
ரூ. 1 கோடிக்கு மேல் ரூ. 10 கோடி வரை | 6.00% |
ரூ. 10 கோடிக்கு மேல் | 6.75% |
மேலும் படிக்க | ஆர்பிஐ அதிரடி முடிவு, வட்டி விகிதங்கள் உயர்ந்தன: வீடு, வாகன கடன் இஎம்ஐ அதிகரிக்கலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR