Personality by Zodiac Sign: தலைமைத்துவ குணம் மிகவும் முக்கியமானது. ஒரு நபரின் வெற்றி மற்றும் தோல்வியில் அது பெரும் பங்கு வகிக்கிறது. பெரும்பாலான துறைகளில் உயர் பதவிகளை அடைய தலைமைத்துவம் இருப்பது மிகவும் அவசியம். அது இல்லாமல் வெற்றியை அடைவது கடினமாகவே கருதப்படுகின்றது.
இந்த பண்பைப் பெற மக்கள் பல்வேறு தலைமைத்துவ பயிற்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார்கள். ஆனால் சிலருக்கு தலைமைத்துவ குணம் பிறவியிலேயே இருக்கும். இந்த நபர்கள் அனைத்து வேலைகளையும் திறமையாகச் செய்வதோடு அனைத்து வகையான சூழ்நிலைகளையும் எளிதாக நிர்வகிக்கும் திறன் கொண்டிருப்பார்கள்.
இந்த ராசிக்காரர்கள் பிறப்பிலிருந்தே தலைமைத்துவ பண்புகளை கொண்டிருப்பார்கள்
மேஷம்: மேஷத்தின் அதிபதி செவ்வாய் ஆகும். செவ்வாய் இந்த ராசிக்காரர்களை (Zodiac Sign) அறிவாளிகளாக, வலிமை மிக்கவர்களாக, திறமையான அரசியல்வாதிகளாக மாற்றுகிறது. மேஷ ராசிக்காரர்கள் அரசியல் தவிர நிர்வாகம், பாதுகாப்புத் துறை, பெரு நிறுவனம் போன்ற அமைப்புகளில் உயர் பதவிகளை அடைகிறார்கள். எனினும் சில சமயம் இந்த ராசிக்காரர்கள் தங்களது ஈகோவால், தாங்களே தீங்கு விளைவித்துக் கொள்வார்கள்.
சிம்மம்: சிம்ம (Leo) ராசிக்கு அதிபதி சூரியன். சிம்ம ராசிக்காரர்கள் நம்பிக்கை அதிகம் உள்ளவர்களாக, பிறப்பு முதலே தலைமைப் பண்பு கொண்டவர்களாக, வலிமை மிக்கவர்களாக இருப்பார்கள். வெற்றியைத் தரும் கிரகம் சூரியன். எனவே சூரியனின் அருளால் சிம்ம ராசிக்காரர்கள் அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவார்கள். இவர்கள் முக்கியமான பதவிகளைப் பெறுவதோடு, மரியாதையையும் பெறுவார்கள். அச்சமற்ற உணர்வு அவர்களது சிறப்பம்சம். ஆனால் இதன் காரணமாக சில நேரங்களில் அவர்கள் சிலரிடம் கொடூரமாகவும் நடந்துகொள்கிறார்கள்.
விருச்சிகம்: விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய். ஆகையால், விருச்சிக ராசிக்காரர்களும் தைரியமானவர்களாக பிறப்பிலிருந்தே தலைமைத்துவ பண்புகள் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
ALSO READ:சூரிய கிரகணத்தின் போது மறந்தும் இவற்றை செய்யாதீர்கள்: செய்தால் அவதிதான், ஜாக்கிரதை!!
அவர்கள் எந்தத் துறையில் சென்றாலும் எப்போதும் முன்னிலையில் இருப்பார்கள். ஆனால், அவர்களுக்குள் கோபம், ஆணவம் அதிகரித்தால், குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கான சாத்தியக்கூறுகளும் அதிகரிக்கின்றது.
மகரம்: மகர ராசிக்கு அதிபதி சனிபகவான். நீதியின் கடவுள் சனி. இந்த ராசிக்காரர்கள் நியாயமானவர்களாக இருப்பதோடு மட்டுமல்லாமல், மற்றவர்களின் உரிமைகளுக்காகப் போராட எப்போதும் தயாராக இருப்பார்கள். தலைமைத்துவத் திறன் அவர்களுக்கு இயல்பாகவே இருக்கும். பொதுவாக, இந்த ராசிக்காரர்கள் தலைவர்கள், அதிகாரிகள், நீதிபதிகள், வணிகர்கள், மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகளாக இருப்பார்கள்.
கும்பம்: கும்பத்தின் (Aquarius) அதிபதியும் சனிபகவான்தான். கும்ப ராசிக்காரர்கள் உள்ளார்ந்த தலைமைத்துவ திறன்களைப் பெற்றிருப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் திறமையான புத்திசாலிகள். அவர்களை வெற்றிகரமான தலைவர்களாக மாற்றும் அனைத்து குணங்களும் அவர்களிடம் இருக்கும். வாழ்க்கையில் போராட வேண்டியிருந்தாலும் அதற்கு இவர்கள் அஞ்சுவதில்லை.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)
ALSO READ:செவ்வாய் பெயர்ச்சி: இந்த 6 ராசிகாரர்களுக்கு பணம் வந்து கொட்டும், மகிழ்ச்சி ஏற்படும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR