பாஸ்போர்ட் இல்லாமல் உலகம் சுற்றும் ‘அந்த’ 3 பேர்..! யார் யார் தெரியுமா..?

உலக நாடுகளுக்கு பாஸ்போர்ட் இன்றி மூன்று பேர் மட்டும் பயணம் செய்ய முடியும். யார் அந்த மூன்று பேர்?   

Written by - Yuvashree | Last Updated : Oct 8, 2023, 01:02 PM IST
  • பிற நாடுகளுக்கு செல்வதற்கு பாஸ்போர்ட் முக்கியம்.
  • ஒரு சிலர் மட்டும் பாஸ்போர்ட் இன்றி பயணம் செய்யலாம்.
  • அவர்கள் யார்? இங்கே பார்ப்போம்.
பாஸ்போர்ட் இல்லாமல் உலகம் சுற்றும் ‘அந்த’ 3 பேர்..! யார் யார் தெரியுமா..? title=

இந்தியா மட்டுமன்றி, உலகில் உள்ள நாடுகளில் இருக்கும் மூத்த தலைவர்களில் இருந்து கடைக்கோடி குடிமகன் வரை யார் எந்த நாட்டிற்கு செல்ல வேண்டும் என்றாலும், பாஸ்போர்ட் பெற்ற பிறகே செல்ல முடியும். இந்த பாஸ்போர்ட் முறை தொடங்கி 100க்கும் மேற்பட்ட ஆண்டுகள் ஆகிவிட்டன. அதிலிருந்து ஒருவர் இன்னொரு நாட்டிற்குள் நுழைய வேண்டுமென்றால் கண்டிப்பாக அதற்கான பாஸ்போர்ட் இருக்க வேண்டும் என்பதுதான் முறை. இது, உலக தலைவர்கள் உள்பட அனைவருக்கும் பொருந்தும். ஆனால், உலகின் முக்கியமான ‘அந்த’ மூன்று பேருக்கு மட்டும், பாஸ்போர்ட் இன்றி உலகம் சுற்றலாம் என்ற அனுமதி உண்டு. 

அந்த மூன்று பேர், வெளிநாடுகளுக்கு பயணம் செய்தால் இவர்களிடம் பாஸ்போர்ட் கேட்கப்பட மாட்டாது. அதற்கு பதிலாக இவர்களுக்கு ராஜ மரியாதைதான் கிடைக்கும். இவர்கள் செல்லும் நாட்டில் உள்ள தலைவர்களே இவர்களை நேராக வந்து சந்திப்பர். சாதாரண குடிமகன் முதல், மக்களை ஆட்சி செய்யும் இடத்தில் இருக்கும் அதிபர் மற்றும் பிரதமர்கள் வரை அனைவரிடமும் கேட்கப்படும் பாஸ்போர்ட் இவர்களுக்கு மட்டும் தேவைப்படுவதில்லை. அப்படி அந்த மூன்று பேர் எந்த மாதிரியான பதவியை சேர்ந்தவர்கள்? இங்கு பார்க்கலாம். 

‘அந்த’மூன்று பேர்...!

பிரிட்டன் மன்னர், ஜப்பான் ராஜா மற்றும் ராணி ஆகிய மூவருக்கும்தான்உலகில் பாஸ்போர்ட் இன்றி எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்ற சலுகை வழங்கப்பட்டுள்ளது. 

பிரிட்டன் மன்னர்:

பிரிட்டனின் மன்னராக தற்போது பதவியில் இருப்பவர் சார்லஸ். இவருக்கு முன்னர் மறைந்த ராணி எலிசபெத்திடம் இந்த சலுகை இருந்தது. ஆனால், பிரிட்டன் மன்னருக்கு இருக்கும் இந்த சலுகை அவரது மனைவிக்கு இந்த சலுகை இல்லை. மனைவி மட்டுமன்றி, மன்னருடன் செல்லும் அனைவருமே அவரவர்களின் பாஸ்போர்டுகளை வைத்துக்கொள்ள வேண்டும். இருப்பினும், பிரிட்டன் அரச குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு விமான நிலையங்களில் தனி மரியாதை உண்டு. அவர்கள் செல்லும் நாடுகளிலும் அவர்களுக்கு தனி விருந்தோம்பல் வழங்கப்படுகிறது. 

மேலும் படிக்க | Travel Tips: “மறக்காதீங்க..வருத்தப்படுவீங்க..” சுற்றுலா செல்கையில் கவனத்தில் கொள்ள வேண்டியவை

ஜப்பான் பேரரசர் மற்றும் பேரரசி:

ஜப்பான் நாட்டில் பேரரசர் மற்றும் பேரரசிக்கும் எந்த நாட்டிற்கு சென்றாலும் பாஸ்போர்ட் இல்லாமல் செல்ல அனுமதி உண்டு. தற்போது, ஜப்பான் நாட்டின் பேரரசராக இருப்பவர் நருஹிட்டோ. அவரது மனைவி மசாகோ ஓவாடா ஜப்பானின் பேரரசியாக இருக்கிறார். இவரது தந்தை அகிஹிட்டோவை அடுத்து அவர் அந்த பதவியை ஏற்றுக்க்கொண்டார். அகிஹிட்டோ பேரரசராக இருந்த வரை அவருக்கும் எந்த நாட்டிற்கு சென்றாலும் பாஸ்போர்ட் தேவையில்லை என்ற சலுகை இருந்தது. இவர்களுக்கு இந்த சலுகை 1971ஆம் ஆண்டில் இருந்து இருப்பதாக கூறப்படுகிறது.  ஜப்பானிய அரசர் மற்றும் அரசிக்கு இந்த சலுகை இருப்பினும் அவர்களுடன் செல்லும் அரச தூதர்கள் தங்களுக்கான ஆவணங்களை வைத்திருத்தல் அவசியம். 

நாட்டின் தலைவர்களுக்கு இருக்கும் சலுகைகள்:

உலக நாடுகளில் இருக்கும் பிரதமர்கள் மற்றும் ஜனாதிபதிகளும் பிற நாடுகளுக்கு செல்லும் போது அவரவர் பாஸ்போர்டுகளை வைத்திருத்தல் அவசியம். இவர்களின் பாஸ்போர்டுகள் தூதரக பாஸ்போர்டுகளாக இருக்கும். இவர்களுக்கு பாதுகாப்பு சோதனைகள் மற்றும் பிற சோதனை நடைமுறைகளில் இருந்து விலக்கு அளிக்கப்படும். இந்தியாவை பொறுத்த வரை குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர் ஆகியோருக்கு இந்த சலுகை உண்டு. 

இந்தியா, மூன்று ரக பாஸ்போர்டுகளை வழங்குகிறது. சாதாரண மக்களுக்கு நீல நிற பாஸ்போர்டும், அரசாங்கத்தில் உயர் பதவி வகிக்கும் அதிகாரிகளுக்கு மெரூன் கலர் பாஸ்போர்டும் வழங்கப்படும். மூன்றாவதாக, ஜனாதிபதி மற்றும் நாட்டின் பிரதமர் ஆகியோருக்கு உயர் ரக பாஸ்போர்ட் வழங்கப்படும். இதில் உச்சபட்ச சலுகைகள் வழங்கப்படும். 

மேலும் படிக்க | இந்தியாவில் செல்ல பிராணிகளுடன் ரயிலில் பயணம் செய்யலாமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News