தை அமாவாசை: முன்னோர்களின் ஆசி கிடைக்க செய்ய வேண்டியது என்ன..!!

இந்து தர்மம் வலியுறுத்தும் விஷயம் நீத்தார் வழிபாடு. இறந்தவர்களை நினைவு கூர்ந்து வழிபடுதல் என்பது நம்முடன் வாழ்ந்து மறைந்த நம் முன்னோர்களுக்கு நாம் ஆற்றவேண்டிய கடமையாகும்.அதில், தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை ஆகியவை மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 31, 2022, 10:18 AM IST
தை அமாவாசை: முன்னோர்களின் ஆசி கிடைக்க செய்ய வேண்டியது என்ன..!! title=

இந்து தர்மம் வலியுறுத்தும் விஷயம் நீத்தார் வழிபாடு. இறந்தவர்களை நினைவு கூர்ந்து வழிபடுதல் என்பது நம்முடன் வாழ்ந்து மறைந்த நம் முன்னோர்களுக்கு நாம் ஆற்றவேண்டிய கடமையாகும். இறந்தபின் ஒரு குறிப்பிட்ட காலம் வரை நம் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுப்பது அவசியம்.

ஒவ்வொரு மாதமும் அமாவாசை திதி அன்று நமது பித்ருக்களை அதாவது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்வோம். அமாவாசை தர்ப்பணத்தை பொறுத்தவரை, மாதம் மாதம் வரும் அமாவாசையில், தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை ஆகியவை மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்நிலையில், மறைந்த முன்னோர்களுக்கும்,பித்ருக்களுக்கும்  திதிக்கொடுத்து வழிபட்டு அவர்களின் ஆசியை பெற வழிபட வேண்டிய்நாளாக கருதப்படும் தை அமாவாசையை ஒட்டி இன்று காசிக்கு நிகராக கருதப்படும் வரலாற்று சிறப்பு மிக்க திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தின் கமலாலய தீர்த்த குளத்தில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி வாழைக்காய், கீரை, அரசி, தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை பாக்கு ,எள் இவற்றை வைத்து மறைந்த தங்களது முன்னோர்களுக்கும், பித்ருக்களுக்கும்  திதி கொடுத்தும்,தர்பணம் செய்து   அவர்களின் ஆசி கிடைக்க வழிப்பட்டனர்.

அதே போன்று, தை அமாவாசை தினமான இன்று குற்றாலத்தில் புனித நீராடி மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.  தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் காலையிலிருந்தே பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

முக்கிய அருவியில் பொதுமக்கள் புனித நீராடி  தங்கள் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். தென்காசி சுற்றுவட்டார பகுதி மக்கள் குற்றாலத்திற்கு வந்து தர்ப்பணம் கொடுத்ததால் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

தை அமாவாசை தினமான நாளை, நமது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, பின்  காகத்திற்கு உணவு படைத்து, அது சாப்பிட்ட பின்னரே வீட்டில் உள்ளவர்கள் சாப்பிட்டு விரதத்தை முடிப்பார்கள். காகங்கள் நாம் படைத்ததை எடுத்துக்கொண்டால் முன்னோர்களின் ஆசி கிடைக்கிறது என்பது நம்பிக்கை.

ALSO READ | Spiritual Information: வீட்டின் எந்தெந்த இடங்களில் தீபம் ஏற்ற வேண்டும்

முன்னோர்களுக்கு திதி கொடுப்பதன் மூலம் அவர்களது ஆசி கிடைத்து, தீராத பிரச்சனைகள் தீரும். சனீஸ்வர பகவானின் வாகனமான காகம் எமலோகத்தின் வாசலில் இருக்கும் என்றும், எமனின் தூதுவனான காகத்துக்கு சாதம் வைத்தால் நமது முன்னோர்கள் மன அமைதியடைந்து நமக்கு ஆசி வழங்குவார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

அனைவரும் தங்கள் வசதிக்கேற்ப தங்களின் குடும்ப முறைப்படி வீட்டில்,  நதிக்கரையில், அல்லது  சமுத்திரக் கரைக்கு சென்று முன்னோருக்குச் செய்யவேண்டிய வழிபாட்டினை செய்யலாம். இல்லை என்றால், குறைந்தபட்சம் எள்ளும் தண்ணீரும் விட்டு வேண்டிக்கொள்வது அவசியம். தை அமாவாசை தினத்தில் புண்ணிய ஸ்தலங்களுக்கு வருவதால் சகல ஐஸ்வரியமும் கிடைக்கப்பெறும் என்பது மக்களின் நம்பிக்கை.

நமது வாழ்வில் வரும்  இன்பங்கள், இன்னல்கள் யாவும் நாம் எமது முன் ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியத்துக்கு ஏற்ப  அமைகிறது. அதில் பித்ருக்களுக்கான காரியமும் ஒன்றாகும். எனவே, முன்னோர்களின் ஆசிகளை முழுமையாக பெற சிரத்தையுடன் அவர்களுக்கான காரியங்களை செய்ய வேண்டும். அதில் தவறினால் பித்ருக்களின், அதாவது முன்னோர்களின் கோபத்துக்கு ஆளாவோம் என ஜோதிட சாஸ்திரம் கூறுகின்றது.

ALSO READ | கஜமுகன் கணபதி முழுமுதற் கடவுளான வரலாறு 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News