10 வருடம் வாடகை வீட்டில் இருந்தால், அந்த வீடு நமக்கு சொந்தமா? உண்மை என்ன?

வீட்டின் வாடகை எப்போது வேண்டுமானாலும் உயர்த்தப்படும் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தால் வீட்டின் உரிமையாளர் எப்போது வேண்டுமானாலும் வாடகையை உயர்த்தலாம்.  

Written by - RK Spark | Last Updated : Nov 14, 2022, 11:08 AM IST
  • வேலைதேடி செல்பவர்கள் பலரும் வாடகை வீட்டில் தான் குடிஉள்ளனர்.
  • வீட்டின் உரிமையாளர் மற்றும் குடியிருப்பவர்களுக்கு சம உரிமை உண்டு.
  • சில விதிகளின் படி வீட்டு உரிமையாளர் வீட்டை காலி செய்ய சொல்லலாம்.
10 வருடம் வாடகை வீட்டில் இருந்தால், அந்த வீடு நமக்கு சொந்தமா? உண்மை என்ன? title=

பல தொழில்களை விட வாடகைக்கு வீடு கொடுப்பது நிலையான வருமானத்தை தரும் ஒன்றாக பார்க்கப்படுகிறது, கம்மியான இடத்தில் கூட அடுக்கடுக்காக வீடுகளை கட்டி வாடகைக்கு விடுகின்றனர்.  பணி நிமித்தம் காரணமாக சொந்த ஊரை விட்டு இடம்பெயரும் மக்கள் அவர்கள் செல்லும் ஊரில் வாடகைக்கு தான் வீட்டை தேடுகின்றனர்.  எப்படி ஒவ்வொன்றிற்கும் சட்டம் வகுக்கப்பட்டுள்ளதோ அதேபோன்று வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கென்றும் சில சட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது, வாடகைதாரர்கள் பலரும் அவர்களுக்கான சட்டங்கள் குறித்து முழுமையாக தெரிந்து வைத்திருக்க வாய்ப்பில்லை.  வாடகை வீட்டில் நீண்ட காலத்திற்கு வசித்தால் வாடகைதாரருக்கே அந்த வீடு சொந்தம் என்கிற விஷயத்தை பலரும் கேள்விப்பட்டிருப்போம், ஆனால் அதன் உண்மை நிலை குறித்து கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்கமாட்டோம்.    

மேலும் படிக்க | மாதந்தோறும் வருமானத்தை அள்ளித்தரும் அஞ்சல் அலுவலகத்தின் அசத்தலான திட்டம்!

நீங்கள் வாழ்நாள் முழுவது வாடகை வீட்டிலேயே கழித்தாலும் அந்த வீடு உங்களுக்கு எப்போதும் சொந்தமாகாது, ஒரு வருட காலம் அதாவது 12 மாதங்கள் மாதந்தோறும் வாடகை எதுவும் செலுத்தாமல் ஒரு வீட்டில் நீங்கள் வசித்து வரும் பட்சத்தில் அந்த வீட்டை சொந்தமாக்க நீங்கள் உரிமைகோரலாம், மற்றபடி மாதந்தோறும் வாடகை கொடுத்து குடியிருப்பவர்களில் எத்தனை வருடங்களானாலும் வீட்டை உரிமைகோர முடியாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.  வீட்டிற்க்கு நாம் அட்வான்ஸ் பணம் கொடுப்பதிலும் சில சட்டங்கள் உள்ளது, அதாவது ஒவ்வொரு வீட்டின் உரிமையாளரும் குறிப்பிட்ட தொகையை வாடகைதாரரிடம் இருந்து முன்பணமாக பெறுகின்றனர்.  ஆனால் சட்டப்படி ஒரு மாத வாடகை தொகை தான் முன்பணமாக வசூலிக்கப்பட்ட வேண்டும்.

rent

வீட்டின் வாடகை எப்போது வேண்டுமானாலும் உயர்த்தப்படும் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தால் வீட்டின் உரிமையாளர் எப்போது வேண்டுமானாலும் வாடகையை உயர்த்தலாம்.  அப்படியில்லாமல் திடீரென்று வாடகையை உயர்த்தினால் வாடகைதாரர் நீதிமன்றத்தில் முறையிடலாம்.  மேலும் வீட்டின் உரிமையாளர் வாடகையை உயர்த்துவதற்கு தகுந்த காரணங்கள் இருக்கும் பட்சத்தில் அதற்கு வாடகைதாரர் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் உரிமையாளர் நீதிமன்றத்தில் முறையிடலாம்.  மேலும் வாடகைதாரர் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை தொந்தரவு செய்பவராக இருந்தாலோ அல்லது வீட்டில் தங்காமல் 4 மாதங்களுக்கு வீட்டை பூட்டியிருந்தாலோ அல்லது ஏதேனும் சட்ட விரோதமான செயல்கள் எதையும் வீட்டில் செய்வது தெரிந்தாலோ அவர்களை வீட்டை விட்டு காலி செய்யலாம்.  இதேபோல வீட்டில் சரியான முறையில் தண்ணீர் வசதி, மின்சார வசதி போன்ற அத்தியாவசியமான வசதிகளில் குறைபாடு இருந்தாலோ அல்லது வசதி நிறுத்தப்பட்டாலோ அல்லது காரணமே இல்லாமல் வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்ய சொன்னாலோ வாடகைதாரர்கள் உரிமையியல் நீதிமன்றத்தில் முறையிட்டு உரிமையாளரிடமிருந்து இழப்பீட்டு தொகையை பெறலாம்.

மேலும் படிக்க | ரூ.199க்கு இவ்வளவு ஆபர்களா? அசத்தும் ஏர்டெல்லின் புதிய பிளான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News