ஆஸ்திரேலியா மலைசிகரத்தில் ஏறி தெலுங்கானா சிறுவன் சாதனை!

ஆஸ்திரேலியாவின் உயரமான மலைச் சிகரத்தில் ஏறி தெலங்கானாவைச் சேர்ந்த 8 வயது சிறுவன் சாதனைப் படைத்துள்ளார்!

Last Updated : Dec 23, 2018, 11:41 AM IST
ஆஸ்திரேலியா மலைசிகரத்தில் ஏறி தெலுங்கானா சிறுவன் சாதனை! title=

ஆஸ்திரேலியாவின் உயரமான மலைச் சிகரத்தில் ஏறி தெலங்கானாவைச் சேர்ந்த 8 வயது சிறுவன் சாதனைப் படைத்துள்ளார்!

தெலங்கானாவின் ஐதராபாத் பகுதியை சேர்ந்தவர் சமன்யு பொத்துராஜ்(8). இவர் மற்றும் இவரது தாய் உள்பட 5 பேர் கொண்டு குழுவாக கடந்த டிசம்பர் 12-ஆம் நாள் ஆஸ்திரேலியாவின் மிக உயரமான மலை சிகரமான கொஸ்கியஸ்கோவின் மீது ஏறி சாதனை படைத்துள்ளார்.

ஏற்கனவே, தான்சானியாவில் இருக்கும் கடல் மட்டத்தில் இருந்து 5,895 அடி உயரம் கொண்ட மலைச் சிகரத்தில் ஏறி இந்த சிறுவன் சாதனை படைத்திருந்தார்.

மேலும் தென் ஆப்பிரிக்காவின் உயர்ந்த மலைச் சிகரமான கிளிமன்ஜாரோவின் மீதும் கடந்த ஏப்ரல் மாதம் ஏறி சமன்யு சாதனை படைந்திருந்தார். இதுவரை நான்கு மலைச் சிகரங்களில் ஏறி உள்ள சமன்யு பொத்துராஜ் அடுத்து 3,776 மீட்டர் உயரம் உள்ள ஜப்பானின் புஜி மலையில் ஏற விருப்பம் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் விமானப் படை அதிகாரியாக ஆக வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டுள்ள இச்சிறுவனின் தாய் லாவண்யா இதுகுறித்து தெரிவிக்கையில்... ‘ஒவ்வொரு முறையும் ஏதாவது நோக்கத்தோடு மலை ஏறுகிறான். இந்த முறை கைத்தறி நெசவாளர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக ஏறியுள்ளான்’ என குறிப்பிட்டுள்ளார்.

Trending News