கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் ஊராட்சி ஒன்றிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அழகில் தற்போது உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலி பணியிட விவரம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் ஊராட்சி ஒன்றிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அழகில் ஜீப் ஓட்டுநர் பணிக்கு ஒரு பணியிடம் மற்றும் அலுவலக உதவியாளர் பணிக்கு 4 பணியிடங்கள் என மொத்தமாக 05 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கல்வித் தகுதி:
ஜீப் ஓட்டுநர்:
ஜீப் ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் கட்டாயம் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். அவர்கள் அனைவரும் அவசியம் LMV ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
அலுவலக உதவியாளர்:
அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் கட்டாயம் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரருக்கு அவசியம் மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
முன் அனுபவம்:
ஜீப் ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட வாகனம் ஓட்டுவதில் குறைந்தது 5 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
01.07.2022ஆம் தேதியின்படி, விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 18 வயது பூர்த்தியடைந்த்திருக்க வேண்டும். அதிகபட்ச வயதாக 32 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரர்கள் அவசியம் 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
ஓட்டுநர் பணிக்கு தேர்வாகும் நபருக்கு குறைந்தபட்சம் ரூ.19,500 முதல் அதிகபட்சம் ரூ.62,000வரையும் ஊதியம் வழங்கப்படும்.
மேலும் படிக்க | DA Hike: தமிழக நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு 28 சதவிகிதமாக உயர்ந்தது அகவிலைப்படி
அதேபோல் அலுவலக உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.15,700 முதல் அதிகபட்சம் ரூ.50,000வரையும் ஊதியம் அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்பட்டும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் இந்த இணையதளத்திற்கு சென்று விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து சரியாக பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு 05.07.2022ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சேர்க்க வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR