சூரிய கிரகணத்தால் பாதிக்கப்படும் சனியின் நட்பு நட்சத்திரங்களே உஷார்

குருவின் பார்வை பெற்றிருப்பவர்கள் இந்த சூரிய கிரகணத்தின்போது சற்று கவனமாக இருக்க வேண்டும். அதுவே சனி புதனுடன் சேர்ந்திருந்தால் சிக்கல் இல்லை

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 21, 2022, 12:32 PM IST
  • சூரியனின் கிரகணத்தால் பாதிப்பு ஏற்படக்கூடிய ராசிகள்
  • சனிக்கு நட்பு ராசிகள் கவனமாக இருக்கவேண்டும்
  • சூரிய கிரகணத்தால் பாதிக்கப்படாத ராசிகள்
சூரிய கிரகணத்தால் பாதிக்கப்படும் சனியின் நட்பு நட்சத்திரங்களே உஷார் title=

புதுடெல்லி: ஜாதகத்தில் சனி கேதுவின் நட்சத்திரங்களான அஸ்வினி, மகம் அல்லது மூலம் நட்சத்திரத்தில் இருந்து குருவின் பார்வை பெற்றிருப்பவர்கள் இந்த சூரிய கிரகணத்தின்போது சற்று கவனமாக இருக்க வேண்டும். எந்த கிரஹங்களின் சேர்க்கையும் பெறாது அமைந்தும், சூரியன் ராகுவின் நட்சத்திரங்களில் ஏதேனும் ஒன்றில் அமர்ந்து புதனுடன் சேர்ந்திருந்தால் அவர்களுக்கு சிக்கல் இல்லை.

இந்த துல்லியமான கணக்கு தெரிந்திருக்க ஜாதகத்தை எடுத்து பார்க்க வேண்டும். ஆனால், சுலபமாக இந்த சூரிய கிரகணத்தால் பாதிக்கப்படும் ராசிகள் எவை என்று தெரிந்துக்கொண்டால் போதும்.

எனவே, இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் பாதிப்பை ஏற்படுத்தும் 3 ராசிக்காரர்கள் யார் என்பதைத் தெரிந்துக் கொண்டு கவனமாக இருந்தால் போதும்.  

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் சனிக்கிழமை அதாவது 30 ஏப்ரல் 2022 அன்று நிகழ உள்ளது. இந்த கிரகணம் சனி அமாவாசை அன்று நடைபெறுவதாலும் அதற்கு ஒரு நாள் முன்னதாக சனி தனது ராசியை மாற்றிக் கொண்டிருப்பதாலும் மிகவும் முக்கியமானது.

மேலும் படிக்க | மதுரா கிருஷ்ண ஜன்ம பூமியில் ஒலி குறையும் பஜனை

மேஷம்
இந்த சூரிய கிரகணம் மேஷ ராசியில் நடப்பதால் இந்த ராசிக்காரர்களுக்கு இதன் தாக்கம் அதிகபட்சமாக இருக்கும். மன அழுத்தம் அதிகரிக்கும் என்பதால், முடிந்த அளவு வாக்குவாதத்தைத் தவிர்க்கவும். எதிரிகளால் பாதிப்பு ஏற்படலாம். விபத்து நேரலாம்.எனவே, எதிலும் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். சூரிய கிரகணம் ஏற்படும்போது, பயணம் செய்வதை தவிர்க்கவும்.
 
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் கௌரவ இழப்பை சந்திக்க நேரிடும். சிந்தனையுடன் பேசுங்கள், சர்ச்சைகள் வராமல் எச்சரிக்கையாக இருங்கள். எதிரிகள் தீங்கு செய்ய முயற்சி செய்யலாம். செலவுகள் அதிகரிக்கும்.

கடகம்

ராசிக்கு அதிபதி சந்திரன், ராகுவுடன் சேர்ந்து மேஷ ராசியில் வருவார். இந்த நிலை இந்த ராசிக்காரர்களுக்கு சரி என்று சொல்ல முடியாது. நீங்கள் மன அழுத்தத்திற்கு பலியாகலாம். எதிர்மறை, தெரியாதது ஆதிக்கம் செலுத்தும். செலவுகள் அதிகரிக்கும். இந்த நேரத்தை பொறுமையாக எடுத்துக்கொள்வது நல்லது.

மேலும் படிக்க | ஆண்டின் முதல் சூரிய கிரகணம், இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஜாக்பாட்

சூரிய கிரகணத்தின் பாதிப்பை தவிர்க்கும் வழிகள்
சூரிய கிரகணத்தின்போது, காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பது நல்லது. கிரகணத்தின் போது செரிமான அமைப்பு சரியாக வேலை செய்யாது என்பதால் அந்த சமயத்தில் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது ஒருபுறம் என்றால், நமது சிந்தனை ஆக்கப்பூர்வமாக இருப்பது, நம்மை நாமே நெறிப்படுத்திக் கொள்ளும் ஒரு முயற்சியாகும்.

குல தெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும் கிரஹன நேரத்தில் வழிபடுவது நல்லது. கிரகண சமயத்தில் கோவில்கள் அனைத்தும் மூடியிருக்கும். மனதில் தெய்வ சிந்தனை இருந்தால் போதும். கிரகணம் முடிந்ததும் குளித்த பிறகு பூஜை செய்யவும். 

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி நள்ளிரவு 12:15 மணிக்கு தொடங்கி அதிகாலை 04:08 மணி வரை இருக்கும். மேஷ ராசியில் சூரியன், சந்திரன், ராகு மூவரும் இணைகின்றனர். இந்த நிலை மேஷம், விருச்சிகம் கடகம் என 3 ராசிக்காரர்களுக்கு நல்லதல்ல என்பதால் கவனமாக இருந்தால் போதும். 

மேலும் படிக்க | 'KGF'- ல நம்ம தினேஷ் கார்த்திக்கா?! - நெட்டிசன்ஸின் வேற லெவல் கண்டுபிடிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News