இந்த வருடத்தின் முதல் சந்திர கிரகணம் வரும் 31-ம் தேதி நிகழ்கிறது. இந்த முழு சந்திர கிரகணமானது சிவந்த நிலா என்ற பெயரில் அழைகப்படுகிறது.
வரும் 31 நிலா உதிக்கும்போதே பூமியின் நிழலால் மறைக்கப்பட்டு உதிக்கும். அந்த சமயத்தில் சூரிய ஒளி நிலவின் மேல் நேரடியாக படாது. ஆனால் நமது வளிமண்டலத்தால் சிதறடிக்கப்படும் ஒளி, நிலவின் மேல் படும். குறைந்த அலைநீளமுள்ள ஒளிக் கதிர்கள் வளிமண்டலத்தால் சிதறடிக்கப்பட்டு, அதிக அலை நீளமுள்ள சிவப்பு நிறம் மட்டும் நிலாவை அடைகிறது. இதுதான் சிவப்பு நிலாவாக தோன்றுகிறது.
மாலை 5.18 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்கும். 6.21 மணி முதல் இரவு 7.37 மணி வரை முழு சந்திர கிரகணம் இருக்கும். 7.37 மணி முதல் நிழல் விலக ஆரம்பித்து 8.41 மணிக்கு முழுமையாக விலகிவிடும். இந்த சிவப்பு நிலா 152 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும்.
சந்திர கிரகணத்தை பார்க்க மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நாமக்கல் பூங்கா சாலை, ராசிபுரம் ஆகிய இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 1886 ஆம் ஆண்டு இந்த "ப்ளூ மூன் "சந்திர கிரகணம் நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.