சூரியனின் சஞ்சாரத்தால் குபேரனாகப் போகும் 3 ராசிக்காரர்கள்

கிரகங்களின் ராஜாவான சூரியன் இன்னும் சில நாட்களில் தனது ராசியை மாற்றுகிறார். சூரியனின் பெயர்ச்சி 12 ராசிகளையும் பாதித்தாலும், சிலரின் வாழ்வு பிரகாசமாகும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 4, 2022, 09:04 PM IST
  • ஏப்ரல் 14-ம் தேதி சூரியன் சஞ்சாரம்
  • 3 ராசிக்காரர்களுக்கு அபரிதமான பலன் கிடைக்கும்
  • தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்
சூரியனின் சஞ்சாரத்தால் குபேரனாகப் போகும் 3 ராசிக்காரர்கள் title=

புதுடெல்லி: கிரகங்களின் ராஜாவான சூரியன் சில தினங்களில் தனது ராசியை மாற்றுகிறார். வெற்றி, தன்னம்பிக்கை, ஆரோக்கியம், மரியாதைக்கு காரணகர்த்தாவான சூரியனின் பெயர்ச்சி அனைத்து 12 ராசிகளையும் பாதிக்கிறது. 

ஏப்ரல் 14ஆம் தேதி சூரியன் ராசி மாறப் போகிறார். சூரியன் தற்போது மீனத்தில் இருக்கிறார், 14 ஏப்ரல் 2022 அன்று அவர் மேஷ ராசிக்குள் நுழைகிறார். சூரியனின் இந்த ராசி மாற்றம் 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையப் போகிறது.

மிதுனம்: மேஷ ராசியில் பிரவேசித்த பிறகு சூரியன் மிதுன ராசிக்கு 11ஆம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இது வருமானம் மற்றும் லாபத்திற்கான இடம் ஆகும். இந்நிலை இந்த ராசிக்காரர்களுக்கு வருமானத்தை அதிகரிக்கும். திடீர் பண ஆதாயத்தைப் பெறுவார்கள். 

வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். ரியல் எஸ்டேட் சம்பந்தப்பட்டவர்கள் ஆதாயமடைவார்கள். மிதுன ராசிக்கு அதிபதியான புதனும் சூரியனும் நட்பு கிரகங்கள் என்பதால் இந்த சஞ்சாரத்தின் போது பூர்வீகம் பேச்சின் அடிப்படையில் பல வேலைகளை செய்து முடிப்பீர்கள்.

மேலும் படிக்க | குரு உதயத்தால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் வீடு தேடி வரும்

கடகம்: மேஷ ராசியில் சூரியனின் சஞ்சாரம் கடக ராசிக்காரர்களுக்கு தொழிலில் வெற்றியைத் தரும். அவர்களுக்கு புதிய வேலை கிடைக்கலாம். பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கலாம். வியாபாரிகளுக்கு லாபம் ஏற்படும்.

மொத்தத்தில், கடக ராசிக்காரர்களுக்கு எல்லா வகையிலும் பயனளிக்கும் சூரியனின் பெயர்ச்சி இது. வருமானம் அதிகரிப்பதால் பொருளாதார நிலை வலுப்பெறும். புதிய கார் அல்லது வீடு வாங்கலாம்.

மேலும் படிக்க | மகாலட்சுமியின் அருள் வேண்டுமா? தனலட்சுமியின் பணம் வேண்டுமா?

மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு சூரியனின் சஞ்சாரம் நன்மை தரும். திடீரென்று பணம் கிடைக்கும். செய்யும் முதலீடும் லாபகரமாக இருக்கும். கலைஞர்களின் திறமை பளிச்சிடும்.

வியாபாரிகளுக்கு இந்த நேரம் மிகவும் சாதகமாக இருக்கும். ஒட்டுமொத்தமாக, இந்த நேரம் மீன ராசிக்காரர்களின் வாழ்க்கையில் வளம் சேர்க்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும்.

மேலும் படிக்க | இன்று இந்த ராசிக்காரர்களுக்கு நல்லதே நடக்கும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News