சூரிய பகவான் அருளால் ஆடி மாதம் செல்வ மழையில் நனையும் ‘5’ ராசிகள்

Lucky Zodiac Signs: ஆடி மாதத்தில் சூரியபகவான் எந்தெந்த ராசிகளுக்கு கருணை காட்டுவார் என்பதை தெரிந்து கொள்வோம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 21, 2022, 09:01 PM IST
  • அரசு வேலையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கும் இது மிகவும் நல்ல நேரம்.
  • பதவி உயர்வுக்கான வாய்ப்புகளையும் பெறலாம்.
  • திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
சூரிய பகவான் அருளால் ஆடி மாதம் செல்வ மழையில் நனையும் ‘5’ ராசிகள் title=

இந்து மதத்தில் ஆடி மாதத்திற்கு அதிக முக்கியத்துவம் உண்டு. பொதுவாக ஒவ்வொரு மாதமும் சிறப்பு வாய்ந்த மாதங்கள் தான். ஆனால், ஒரு சில இறைவனுக்கு உகந்த விசேஷமான மாதங்கள். அதில் ஒன்றுதான் இந்த ஆடி மாதம்.  ஆடி மாதம் இறைவனை வழிபடுவதற்காகவே ஒதுக்கப்பட்ட மாதம் என்பதாலும், இறைவனை வழிபடுவதில் கவனம் சிதறல்கள் கூடாது என்பதால் தான் திருமணம் உள்ளிட்ட பல்வேறு சுப நிகழ்ச்சிகள் இந்த மாதத்தில் நடத்தப்படுவதில்லை. இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த மாதத்தில் சூரிய பகவான் கடகத்தில்  வீற்றிருப்பார். இதனால்,  இந்த  மாதத்தில் 5 ராசிக்காரர்களுக்கும் செல்வம் பெருகும் என ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஜோதிடக் கணக்கீடுகளின்படி, சில ராசிக்காரர்களுக்கு ஆடி மாதத்தில் சூரிய பகவானின் ஆசீர்வாதங்களை முழுமையாக கிடைக்க உள்ளது. ஆடி மாதத்தில் சூரியபகவான் எந்தெந்த ராசிகளுக்கு கருணை காட்டுவார் என்பதை தெரிந்து கொள்வோம்.

ரிஷப ராசி

ரிஷ ராசிக்காரர்கள் எடுத்த காரியத்தில்,  வெற்றி பெறுவார்கள்.கல்வித் துறையுடன் தொடர்புடைய மக்களுக்கு, இந்த நேரம் வரப்பிரசாதமாக இருக்கும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடுங்கள். கௌரவம், பதவி உயர்வு இருக்கும்.

மேலும் படிக்க | Lucky Numbers of 22 July: இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு நாளை சிறப்பு நாள் 

மிதுன ராசி

பரிவர்த்தனைகளுக்கு நல்ல நேரம்.  இந்த நேரத்தில் முதலீடு செய்வது நன்மை தரும். எதிர்பாராத பண வரவு இருக்கும். இதன் காரணமாக நிதி நிலை வலுவாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பொதுவாக மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அதிர்ஷ்டம் நிறைந்த மாதமாக இருக்கும்.

கன்னி ராசி

எதிர்பாராத பண வரவு  காரணமாக நிதி நிலை வலுவாக இருக்கும். வேலை மற்றும் வணிகத் துறையில் இருப்பவர்களுக்கு இந்த மாதம் ஒரு வரம் எனலாம்.புகழ் அதிகரித்து, கௌரவம் உயரும் வாய்ப்புகள் உண்டு.
பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடனான உறவு சுமுகமாக இருக்கும். உங்கள் கடின உழைப்பிற்கான முழு பலனை  பெறுவீர்கள். உங்கள் மனைவியுடன் நேரத்தை செலவிடுங்கள்.

துலா ராசி

சூரிய பகவானின் அருளால் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும். அரசு வேலையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கும் இது மிகவும் நல்ல நேரம். இந்த நேரத்தில், பதவி உயர்வுக்கான வாய்ப்புகளையும் பெறலாம். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் பணியை அனைவரும் பாராட்டுவார்கள்.

மீன ராசி

போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு நல்ல நேரம். உங்கள் மனைவியுடன் நேரத்தை செலவிடுங்கள். கடினமாக உழைத்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் பணியை அனைவரும் பாராட்டுவார்கள். மதம் மற்றும் ஆன்மீக நிகழ்ச்சிகளில் ஈடுபடும் வாய்ப்பு கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | குரு வக்ர பெயர்ச்சி: ஜூலை 29 முதல் இந்த ராசிகளுக்கு எச்சரிக்கை காலம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News