துவைக்கப்படாத அழுக்கு ஆடைகளில் இருந்து வரும் துர்நாற்றத்தினை போக்க புதிய யுக்தி அறிமுகமாகியுள்ளது!
22-லிருந்து 37-வயதுக்கு இடைப்பட்டவர்களில் சுமார் 60% பேர் தங்களது ஆடைகளை துவைப்பதில் சலிப்பு காட்டி வருகவதாக ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கின்றது. புத்தாடைகளின் வண்னம் பாழாகிவிடும், துணிகளின் மெடுக்கு குறைந்துவிடும் என பல காரணங்களை அவர்கள் கூறினாலும், அவர்களது சோம்பேரி தனம் தான் இதற்கு முக்கிய காரணம் என்பதினை மறுக்க முடியாது.
இந்நிலையில் இவர்களுக்காவே இந்த புதவித திரவியம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆம்... DAY 2 என்னும் இந்த திரவியம் துர்நாற்றம் கொண்ட ஆடைகளை நறுமணம் வீசும் ஆடைகளாக வெறும் 15 நிமிடத்தில் மாற்றி விடுகின்றது.
இந்த திரவியம் குறித்து பலரும் நல்ல கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். எனினும் இந்த திரவியம் தற்போதைக்கு இந்தியாவில் சந்தைப் படுத்தப்படவில்லை என்பது வேதனை...
விரைவில் இந்தியாவில் அறிமுகம் ஆகும் பட்சத்தில் பல இளைஞர்கள் ‘துணி துவைத்தல்’ என்னும் பாரத்தில் இருந்து தப்பிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.