விமான கட்டணத்தை 25% தள்ளுபடி செய்த ஸ்பைஸ் ஜெட்; ரூ.899 முதல்

ஐந்து நாட்களுக்கு மெகா விற்பனையை அறிவித்த ஸ்பைஸ் ஜெட் நிறுவனம்.`

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 5, 2019, 02:33 PM IST
விமான கட்டணத்தை 25% தள்ளுபடி செய்த ஸ்பைஸ் ஜெட்; ரூ.899 முதல்  title=

ஸ்பைஸ் ஜெட் 4 நாட்கள் ஒரு மெகா விற்பனை வெளியிட்டுள்ளது. இந்த மெகா விற்பனையின் கீழ், நீங்கள் வெறும் 899 ரூபாயில் விமான பயணத்தை அனுபவிக்க முடியும். ரூ.899 விமான கட்டணத்தில் உள்நாட்டிலும், ரூ 3699 விமான கட்டணத்தில் சர்வதேச விமானத்திலும் செல்ல முடியும். உள்நாட்டு விமானத்தில் பயணம் செய்ய ஒரு கிலோமீட்டர் ரூ .1.75 ஆகவும் சர்வதேச விமானத்தில் பயணம் செய்ய ரூ. 2.5 கட்டணமாகவும் செலுத்த வேண்டும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

அதாவது ரூ.899 உள்நாட்டு விமான கட்டணத்திலும், ரூ 3699 சர்வதேச விமான கட்டணத்திலும் வரிகள் உள்ளடக்கியது. நீங்கள் வரிக்கு என தனியாக பணம் செலுத்த தேவையில்லை. இந்த மெகா விற்பனை பிப்ரவரி 5ம் தேதி முதல் துவங்கி பிப்ரவரி 9ம் தேதி வரை என மொத்தம் ஐந்து நாட்கள் இருக்கும். இந்த டிக்கெட்டில் செப்டம்பர் 25, 2019 வரை நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் பயணம் செய்யலாம். எஸ்.பி.ஐ. கிரெடிட் கார்ட் மூலம் டிக்கெட் வாங்கினால் 10% கேஸ்-பேக் கிடைக்கும். 

தள்ளுபடி சலுகை ஒரு புறத்திற்க்கான விமான பயணத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படும். நேரடியாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் போது மட்டும் சலுகை செல்லுபடியாகும். கணடிங் விமானத்திற்கு இந்த சலுகை செல்லாது எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. 

Trending News