கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் மகர விளக்கு மற்றும் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது. இதற்காக, ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு சென்று வருவதால் அவர்களின் வசதிக்காக கேரள அரசு சிறப்பு பேருந்துகள் இயங்க ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
சபரிமலையில் இருந்து கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிற்றனர். இந்நிலையில், வழிபாடுக்கு பின் 40 பக்தர்கள் ஒன்றிணைந்து கேட்டால் அவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் தனிபேருந்துகள் இயக்கவும் கேரள அரசு முடிவு செய்துள்ளது.
மும்பையில் இருந்து குமுளிக்கு ரூ.8,700, பழனிக்கு ரூ.21,550, தென்காசிக்கு ரூ.12,900, கோவைக்கு ரூ.24,800, கன்யாகுமாரிக்கு ரூ.19,880, மதுரைக்கு ரூ.19,300, என்ற கட்டணத்தில் தனி தனி பெரிந்துகள் இயக்கப்படும் என்று கேரளா அரசு தெரிவித்துள்ளது.
மேலும் விபரங்களுக்கு மும்பையில் உள்ள கேரள போக்குவரத்துக்கழக தகவல் மையம் 04735-203445 என்ற என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.