‘இந்த’ அறிகுறிகள் இருந்தால் தவறான காதல் உறவில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்!

சிலருக்கு காதல் உறவு தவறானதாக இருக்கும். அது தவறானது என கண்டுபிடிக்க முடியாமல் பலர் தவிப்பர்.  

Written by - Yuvashree | Last Updated : Dec 15, 2023, 06:07 PM IST
  • தவறான காதல் உறவில் இருக்கிறீர்களா?
  • அதற்கு சில அறிகுறிகள் இருக்கின்றன.
  • அவை என்னென்ன தெரியுமா?
‘இந்த’ அறிகுறிகள் இருந்தால் தவறான காதல் உறவில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்! title=

காதல் என்பது, ஆரம்பத்தில் சிறிய உணர்வாக ஆரம்பித்து பின்னர் அது ஒரு உறவாக மாறும். அந்த உறவில், பல கடினமான தருணங்கள் ஏற்படும், அதை இருவரும் ஒன்றாக எதிர்கொள்ள வேண்டும். காதலித்து விட்டோம் என்பதற்காக மட்டுமே, ஒரு சிலர் அந்த உறவை சரிப்படுத்த முயற்சி செய்து கொண்டா இருப்பர். இது, அவர்களை மனதளவில் பெருமளவு பாதிக்கும். ஆனால், நீங்கள் தவறான காதல் உறவில் இருக்கிறீர்களா இல்லையா என்பதை எப்படி கண்டுபிடிப்பது? இங்கே பார்க்கலாம்.

சிறு சிறு பிரச்சனைகள்:

காதல் உறவில் ஏற்படும் சிறு சிறு மோதல்களே, பிற்காலத்தில் பெரிய பிரச்சனைகளுக்கு வழிவகுத்து விடும். தவறான காதல் உறவில் இருக்கும் இருவருக்கும், அவர்களின் கருத்துக்களுக்குள் மோதல் இருக்கும். இது, சிறிய பிரச்சனைகளுக்கும் கூட பெரிய விவாதமாக மாற வழிவகுத்து விடும். இந்த உறவு, நீங்கள் நினைக்கும் அளவிற்கு நல்ல உறவாக இருக்காது. நல்ல உறவில், நீங்கள் சண்டையிட்டாலும் விவாதம் மேற்கொண்டாலும் அதில் உங்களது கருத்துக்களை தெரிவிப்பதற்கு இடம் இருக்கும். நீங்கள் உறவில் இருப்பவர்களுடன் எப்போதும் தேவையற்ற விவாதம் செய்து கொண்டிருந்தால் அது நல்ல உறவே கிடையாது என்பதை புரிந்து கொள்ளுங்கள். 

உணர்ச்சிகள் சோர்வுற்றது போன்ற உணர்வு..

தவறான உறவில் இருப்பவர்களுக்கு அவர்கள்ன் உணர்ச்சிகள் எப்போதும் காயப்பட்டது போன்ற உணர்வு இருக்கும். அதனால், தான் என்ன நினைக்கிறோமோ அதை பெரும்பாலான சமயங்களில் சம்பந்தப்பட்ட நபர்களிடம் கூற தயங்குவர். எதையும் எடுத்துறைக்கவே அவர்களுக்கு ஆற்றல் இல்லாதது போல தோன்றும். உங்களுக்கு நடந்த மகிழ்ச்சியான விஷயங்களை கூட அவரிடம் கூற நீங்கள் தயங்குவீர்கள். ஒரு உறவில் இருக்கிறீர்கள் என்றால், அது நீங்கள் நீங்களகாக இருக்க உதவி செய்ய வேண்டும். ஆனால், உங்களை பற்றிய விஷயங்களை நீங்கள் பயந்து மறைக்கிறீர்கள் என்றால், அது சரியான உறவா என்பதை யோசித்துக்கொக்ள்ளுங்கள். 

மேலும் படிக்க | விமானத்தில் பயணம் செய்யும் போது செய்யக்கூடாத தவறுகள்!

உங்கள் துணையை சீர்ப்படுத்த வேண்டும் என்ற எண்ணம்..

ஒரு சிலர், தங்களுக்கு ஏற்றார் போல தனது காதலர்/காதலியை மாற்ற வேண்டும் என்று நினைப்பர். இது, நீங்கள் சரியானவர் இல்லை என்ற உங்களின் உள்ளுணர்வின் வெளிபாடாகும். உறவுகள் கண்டிப்பாக உங்களை நல்ல மனிதராக மாற்ற உதவும். ஆனால், உங்களுக்கு துணையாக இருக்கும் நபரை திருத்த வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், அப்போது நீங்கள் உங்கள் உறவு குறித்து ஆழ்ந்து யோசிக்க வேண்டும். 

உடல் ரீதியான பாதிப்புகள்:

பல சமயங்களில், நீங்கள் தவறான உறவுகளில் இருந்தால் அது உங்களுக்கு உள்ளூர பல உணர்வுகளை கொடுக்கும். நாம் இப்படி ஏற்படும் உணர்வுகளை பல சமயங்கலில் மறுத்துவிட்டு, நம்மிடம் நாமே பொய் கூறிக்கொள்வோம். இந்த உணர்வுகள், நமது உடல் வாயிலாகவும் வெளிவரும். காரணமே இன்றி செரிமான பிரச்சனை ஏற்படுவது, ஞாபக மறதி ஏற்படுதல், திடீர் உடல் எடை குறைவது, உடல் எடை ஏறுவது என பல மாற்றங்கள் ஏற்படும். இது போன்ற மாற்றங்கள், தவறான உறவுகளாலும் ஏற்படும். 

தனிமை உணர்வு..

காதல் உறவில் இருக்கும் போதே பலருக்கு தனிமை உணர்வு ஏற்படும். இதுவும், நீங்கள் உறவுகளின் ஆரம்பத்திலேயே கவனிக்க வேண்டிய விஷயங்களுள் ஒன்று. உங்களது பார்ட்னர் உங்களை விட்டு சென்று விட்டால் என்ன செய்யவது என்ற பயம் இருந்தாலும், அது சரியான உறவா என சிந்திக்க வேண்டும்.

மேலும் படிக்க | காலையில் வெறும் வயிற்றில் நடைப்பயிற்சி செய்தால் இவ்வளவு நன்மைகளா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News