வரும் வாரம் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்பட உள்ளன

ஜனவரி 14ஆம் தேதி சூரியன் மகர ராசியில் சஞ்சரிக்கிறார். இதன் பிறகு ஜனவரி 16-ம் தேதி செவ்வாய் கிரகம் தனுசு ராசிக்குள் சஞ்சரிக்கிறார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 9, 2022, 06:11 PM IST
வரும் வாரம் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்பட உள்ளன title=

Weekly Horoscope: இந்த வாரம் அனைத்து ராசிக்காரர்களுக்கும் சிறப்பானதாக இருக்கும். உண்மையில், ஜனவரி 14 அன்று, சூரியன் மகர ராசியில் சஞ்சரிக்கிறார். இது தவிர ஜனவரி 16-ம் தேதி செவ்வாய் தனுசு ராசியில் பிரவேசிக்கிறார். இதனுடன் செல்வத்தின் அதிபதியான சுக்கிரனும் சஞ்சரிக்கப் போகிறார். அதன்படி வரும் வாரம் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம் கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிக்காரர்களின் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்: இந்த வாரம் சிறப்பானது. பணியில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எழுத்து, இலக்கியம், படைப்பாற்றல் போன்றவற்றைச் செய்பவர்கள் தங்கள் படைப்பில் புதுமையைப் புகுத்த முயற்சி செய்வார்கள். ஆரோக்கியம் மேம்படும். செலவுகள் குறையும். 

ரிஷபம்: இந்த வாரம் உங்கள் பேச்சின் பலத்தால் நல்ல பணம் வரவு தரும். குடும்பத்தாருடன் உங்கள் ஒற்றுமை நன்றாக இருக்கும். புதிய வருமான பெற முயற்சி செய்ய வேண்டிய உகந்த நேரம்.

மிதுனம்: இந்த வாரம் குடும்பத் தேவைகளுக்காகச் செலவுகள் அதிகமாகும். பணத்தை சேமிக்க முயற்சி செய்யுங்கள், அது எதிர்காலத்தில் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். உடல்நலப் பிரச்சனைகள் வரலாம்.

கடகம்: இந்த வாரம் உங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் தேவை. இந்த வாரம் அறிவார்ந்த பணிகளில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தம் ஏற்படும். தொழிலை முன்னெடுத்துச் செல்ல புதுமையான வழிகளை யோசிக்க வேண்டும்.

சிம்மம்: இந்த வாரம் களத்தில் சவால்கள் அதிகரிக்கும். உங்கள் நம்பிக்கைக்குரியவர்களுடன் நீங்கள் பணிபுரிந்தால், நீங்கள் நெருக்கடியை சமாளிப்பீர்கள். இந்த வாரம் தேவையற்ற பணச் செலவுகளைத் தவிர்க்கவும். இல்லற வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

கன்னி: இந்த வாரம் குடும்பத்திற்கு உகந்ததாக இருக்கும். உங்கள் மனதுக்கும் எண்ணங்களுக்கும் இடையில் இணக்கம் இருக்காது. வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும்.

துலாம்: தொழிலதிபர்கள் வேலையை விரிவுபடுத்துவதற்கான திட்டத்தை உருவாக்க வேண்டும் மற்றும் வேலை செய்பவர்கள் நிதி நன்மைகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு, ஆனால் எதிர்காலத்தில், நீங்கள் விரிவான திட்டத்தை உருவாக்க வேண்டும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்: இந்த வாரம் மங்களகரமானதாக இருக்கும். குடும்பத்தில் உறவுகள் நன்றாக இருக்கும். மாணவர்கள் தங்கள் தொழிலில் கவனம் செலுத்த வேண்டும். வேலை செய்பவரின் தற்போதைய வேலையில் மாற்றம் ஏற்படுவதற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளன. வியாபாரம் பாதிக்கப்படும். அதிக வேலைப்பளு காரணமாக உடல் பலவீனமாக உணரலாம்.

தனுசு: இந்த வாரம் மகிழ்ச்சியான வாரமாக்கும். பெற்றோரின் உடல்நிலையில் அக்கறை காட்ட வேண்டி வரும். மாணவர்களுக்கு கடினமான மற்றும் சவாலான நேரமாக இருக்கும். பொருளாதார முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உள்ளன.

மகரம்: இந்த வாரம் கவனமாக நடந்துக்கொள்ள வேண்டும். தகராறு ஏற்படலாம். வேளையில் கவனமாக இருங்கள். குறிப்பாக நிதி விஷயங்களில் அதிக கவனம் தேவை. 

கும்பம்: இந்த வாரம் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சமநிலையை அடையும் நேரம். இல்லற வாழ்க்கை இனிமையாக இருக்கும். இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். சொத்து, வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும்.

Trending News