Work From Home: அதிர்ச்சிகரமான உடல் மற்றும் மன நல பாதிப்புகள் என்ன...!!!

COVID-19 தொற்று பரவல் காரணமாக, வொர்க் ஃப்ரம் ஹோம் என்பது அவசியமான, தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 26, 2020, 02:36 PM IST
  • Work From Home தொடர்பான பழக்க வழக்கங்கள் பல வகையான உடல் மற்றும் மன பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
  • வீட்டில் இருந்து வேலை செய்யும் போது, உடல் நலம் பாதிக்கப்படாமல் இருக்க திட்டமிட்டு பணியாற்ற வேண்டும்.
  • அலுவலகத்தில் செய்வதை போலவே இடையில் ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும்.
Work From Home: அதிர்ச்சிகரமான  உடல் மற்றும் மன நல பாதிப்புகள் என்ன...!!! title=

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, வொர்க் ஃப்ரம் ஹோம் அதாவது வீட்டில்  இருந்து கொண்டே அலுவலக பணியை மேற்கொள்வது என்பது  தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.  இதனால், சில நினைத்து பார்க்க முடியாத உடல் மற்றும் மன நல பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பது உங்களுக்கு வியப்பை ஏற்படுத்தலாம். 

இவற்றை எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அவை நம் வாழ்க்கையை நரகமாக்கலாம்.  மேலும் நீங்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாத வழிகளில் உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கின்றன.

COVID-19 நெருக்கடி உள்ள நிலையில், இந்த கடினமான நேரத்தில் கூட வர்த்தக நடவடிக்கைகளை தொடர, வீட்டிலிருந்து வேலை செய்வது ஒரு அற்புதமான மாற்றாகும். இதில் சந்தேகம் ஏதும் இல்லை.  இதனால், வீட்டில் இருந்து கொண்டே, நமது பணிகளை எளிதாக நிறைவேற்ற முடிகிறது.  இது இதன் சிறப்பு.

ALSO READ | பின் தூங்கி பின் எழும் பழக்கம் உள்ளவரா…. ஆஸ்துமா, அலர்ஜி வரும் ஜாக்கிரதை..!!!

ஆனால்,  அதே சமயத்தில் இதனால், பல பாதிப்புகளும் உள்ளன. இங்கே நாம் வொர்க் ஃபரம் ஹோம் தொடர்புடைய சில பழக்கங்களினால் ஏற்படும் முக்கியமான 5 பாதிப்புகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.  

காலையில் விழித்தவுடன் லாப்டாப்பை ஆன் செய்வது

உங்கள் தூக்கத்தின் போதும், நீங்கள் வேலையைப் பற்றி சிந்திக்கும்போது இது பெரும்பாலும் நிகழ்கிறது. சிலர் தங்கள் வேலை நேரம் தொடங்கும் வரை தூங்க வேண்டும் என நினைக்கிறார்கள். எனவே, அவர்கள் தூங்கி எழுந்தவுடன், Laptop-ஐ ஆன் செய்கிறார்கள். இந்த பழக்கம் உங்கள் கண்களை பெரிதும் பாதிக்கும். தூங்கி எழுந்தவிடன் கண்களின் லாடாப்பின் நீல ஒளி கண்ணில் படுவது உங்கள் கண்பார்வையை பாதிப்பதோடு,  மன அழுத்தமும் ஏற்படும். இது உங்கள் துக்கத்தையும் பாதிக்கும்.

படுத்துக் கொண்டே வேலை செய்வது

உங்களுக்கு முதுகுவலி ஏற்பட  இது மிக முக்கிய காரணம். படுக்கையில் உட்கார்ந்து அல்லது படுத்துக் கொண்டு பல மணிநேரம் வேலை செய்வது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் பழக்கமாகும். நீங்கள் அதை உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டும்.  படுக்கையில் பல மணி நேரம் உட்கார்ந்திருப்பது உங்கள் உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, உங்கள் செயல்திறனையும் பாதிக்கிறது. இது உங்களை மிகவும் சோம்பேறியாக ஆக்குகிறது.  இதனால், உங்களால், 100 % செயல் திறனை கொடுக்க இயலாது.

ASO READ அழகான மாசு மரு இல்லாத சருமத்திற்கான எளிய வீட்டுக் குறிப்புகள் இதோ..!!!

நாள் முழுவதும் வேலையில் ஈடுபடுவது 

சிலர் நாள் முழுவதும்  வேலையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். அவர்கள்  தொடர்ச்சியாக வலை தளங்களை பார்த்துக் கொண்டு,  அலுவலகம் நிமித்தமாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு இருப்பார்கள் . இந்த பழக்கம்  மன ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. வேலை முக்கியம் தான், ஆனால் உங்கள் உடல்நலனை விட அதிக முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல. வேலையைப் பற்றி  மட்டுமே சிந்தித்து கொண்டிருப்பது,  உங்கள் குடும்பத்திலிருந்து உங்களை விலக்கி விடும்.

வேலைக்கு நடுவில் ப்ரேக் எடுத்து கொள்ளாமல் இருத்தல்

உங்கள் மனதை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளவும், செயல் திறன் அதிகரிக்கவும், வேலைக்கு நடுவில் ப்ரேக் எடுத்துக் கொள்வது முக்கியம். வீட்டில் இருப்பதே ஒரு ப்ரேக் தான் என்று நினைக்க வேண்டாம். அது அப்படி அல்ல. நீங்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் போது, ​​நீங்கள் உங்கள் அலுவலகத்தில் இருப்பதைப் போல நடந்து கொள்ளுங்கள்.  ப்ரேக் எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கேற்ப  நடவடிக்கைகளை பழக்க வழக்கங்களை திட்டமிடுங்கள்.

ALSO READ | தினமும் கொஞ்சம் தேங்காய் போதும்… நெருங்கி வர அஞ்சி நோய்  ஓடும்…. !!!!

அழைப்புகளை தவற விட்டு விடிவோமோ என்ற பயம் மற்றும் கவலை

முக்கிமான தொலைபேசி அழைப்புகளை தவற விட்டுவிடுவோமோ என்ற பயம் ஒரு கட்டத்திற்குப் பிறகு உங்களை பைத்தியமாக்கி விடும். அலுவலக விஷயங்கள் குறித்து அறிந்து கொள்வது முக்கியம், ஆனால் எல்லாவற்றையும் நீங்களே செய்ய வேண்டும் என  முயற்சிப்பது மற்றும் வேலையில் அதிகமாக ஈடுபடுவது உங்கள் மனநிலையை பெரிதும் பாதிக்கும். எனவே, உங்கள் உடல்நலம் பாதிக்காத வகையில் திட்டமிட்டு வேலை செய்யவும், உங்களால் முடிந்தவரை செய்யவும்.

Trending News