மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் அல்லது SCSS (Senior Citizen’s Savings Scheme) தொடர்பான விதிகளை அரசாங்கம் மாற்றியுள்ளது. இந்த மாற்றங்கள் 9 நவம்பர் 2023 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. அதன் பிறகு இந்த திட்டம் மூத்த குடிமக்களுக்கு சிறந்ததாக மாறியுள்ளது. முன்னதாக, இந்தத் திட்டத்தில் முதலீட்டு வரம்பு ஏப்ரல் 1, 2023 முதல் ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டது.
அரசாங்கத்தின் அனைத்து சிறுசேமிப்பு திட்டங்களிலும் (small savings schemes), தற்போது அதிக வட்டி SCSS இல் மட்டுமே உள்ளது. நடப்பு அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் இந்தத் திட்டத்தின் வட்டி 8.2 சதவீதமாக உள்ளது. ஏப்ரல்-ஜூன் 2023 காலாண்டிலிருந்து இந்தத் திட்டத்தின் வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை.
அக்டோபர்-டிசம்பர் 2022 காலாண்டிற்கான வட்டி விகிதம் 7.4 சதவீதத்தில் இருந்து 7.6 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது அடுத்த காலாண்டில் அதாவது ஜனவரி-மார்ச் 2023க்கு 8 சதவீதமாகவும், ஏப்ரல்-ஜூன் 2023 காலாண்டில் 8.2 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்டது.
ஏப்ரல் 2020 முதல் செப்டம்பர் 2022 வரை, இந்தத் திட்டத்தின் வட்டி 7.4 சதவீதத்தில் நிலையானதாக இருந்தது, அதேசமயம் ஏப்ரல் 2019 முதல் மார்ச் 2020 வரை, இந்தத் திட்டத்திற்கு அரசாங்கம் 8.6 சதவீத வட்டியை அளித்தது.
SCSS உட்பட மற்ற சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை ஒவ்வொரு காலாண்டிலும் அரசாங்கம் தீர்மானிக்கிறது.
மேலும் படிக்க | பணத்தை வாரி வழங்கும் சூப்பரான SBI Sarvottam FD திட்டம்...வாய்ப்பை நழுவ விட்ராதீங்க
ஆபத்து இல்லாத முதலீடு, அதிக வட்டி விகிதங்கள் மற்றும் காலாண்டு வட்டி செலுத்தும் வசதி போன்றவற்றால், மூத்த குடிமக்கள் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய மிகவும் ஆர்வமாக உள்ளனர். இப்போது புதிய மாற்றங்களைப் பற்றி தெரிந்துக்கொள்வோம்.
இந்தத் திட்டத்தில் யார் முதலீடு செய்யலாம்?
இந்த திட்டம் மூத்த குடிமக்களுக்கு மட்டுமே. இந்தத் திட்டத்தில், 60 வயது அல்லது அதற்கு மேல் உள்ள எவரும் தனிநபர் அல்லது கூட்டுக் கணக்கைத் தொடங்கலாம். கூட்டுக் கணக்கில் கூட்டு வைத்திருப்பவரின் வயது தொடர்பாக எந்தத் தடையும் இல்லை.
மேலும், 55 முதல் 60 வயது வரையிலான ஓய்வூதியத் திட்டம் (Voluntary Retirement Scheme or VRS) அல்லது ஓய்வு பெறுபவர்கள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட ஓய்வு பெற்ற பாதுகாப்புப் பணியாளர்களும் இதில் முதலீடு செய்யலாம். ஆனால் புதிய விதிகளுக்கு முன், இவர்கள் ஓய்வூதிய பலன் பெற்ற ஒரு மாதத்திற்குள் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வது அவசியம்.
புதிய விதிகளின்படி, ஓய்வூதியப் பலனைப் பெற்ற மூன்று மாதங்களுக்குள் அத்தகையவர்கள் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
அரசு ஊழியர் பணியில் இருக்கும்போது இறந்தால்
மனைவி கணக்கைத் திறக்கலாம்: மற்றொரு மாற்றத்தின்படி, 50 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய அரசு ஊழியர் (ஓய்வுப் பலன்கள் அல்லது இறப்பு இழப்பீடு பெறும் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள்) சேவைக் காலத்தில் இறந்தால், அவர்களின் மனைவி (கணவன் அல்லது மனைவி) இந்தக் கணக்கைத் தொடங்கலாம்.
இந்த திட்டத்தின் மெச்சூரிட்டி காலம் 5 ஆண்டுகள் ஆகும். புதிய விதிகளின்படி, மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில், தற்போது கணக்கு தொடங்க ஒரு மாதத்திற்கு பதிலாக மூன்று மாதங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள விதியின் கீழ், ஒருவர் ஓய்வு பெற்ற ஒரு மாதத்திற்குள் முதலீடு செய்ய வேண்டும். கணக்கு வைத்திருப்பவர்கள் எத்தனை பிளாக்குகளாக வேண்டுமானாலும் கணக்கை நீட்டிக்கலாம். ஒவ்வொரு பிளாக்கும் மூன்று ஆண்டுகள் நீடிக்கும். முன்னதாக, அதன் நீட்டிப்பு ஒரு முறை மட்டுமே அனுமதிக்கப்பட்டது.
கணக்கு வைத்திருப்பவர் இறந்த பிறகும் கணக்கைத் தொடரலாம்:
கூட்டுக் கணக்கு அல்லது மனைவி மட்டுமே நாமினியாக இருந்தால் - இந்த வழக்கில், கணக்கு வைத்திருப்பவர் இறந்துவிட்டால், புதிய விதிகளின்படி, மனைவி முன்பு இருந்த அதே விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி கணக்கைத் தொடர அனுமதிக்கப்படுவார். இந்த திட்டத்திற்கு அவர் தகுதியானவர். முன்னதாக இதுபோன்ற சந்தர்ப்பங்களில் மனைவி இதை செய்ய அனுமதிக்கப்படவில்லை.
இந்தத் திட்டத்தில், மூத்த குடிமக்கள் ஒரே முறையில் வெறும் ரூ.5 லட்சத்தை டெபாசிட் செய்து, ஒவ்வொரு காலாண்டிலும் ரூ.10,250 சம்பாதிக்க முடியும். வட்டியில் இருந்து மட்டும் 5 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் வரை சம்பாதிக்கலாம். இதற்கான முழு கணக்கீட்டை இங்கே தெரிந்து கொள்ளலாம். ஒன்றாக டெபாசிட் செய்யப்படும் பணம்: ரூ. 5 லட்சம், வைப்பு காலம்: 5 ஆண்டுகள், வட்டி விகிதம்: 8.2%, முதிர்வுத் தொகை: ரூ.7,05,000, வட்டி வருமானம்: ரூ 2,05,000, காலாண்டு வருமானம்: ரூ 10,250. இந்த சேமிப்பு திட்டம் இந்திய அரசால் நடத்தப்படுகிறது. முதலீட்டிற்கான நம்பகமான மற்றும் பாதுகாப்பான விருப்பங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
வருமான வரிச் சட்டம் பிரிவு 80C-ன் கீழ், முதலீட்டாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் ரூ. 1.5 லட்சம் வரை வரி விலக்குப் பலனைப் பெறுகிறார்கள். - இந்த தபால் அலுவலகத் திட்டத்தின் கணக்கை நாட்டில் உள்ள எந்த மையத்திற்கும் மாற்றலாம். இத்திட்டத்தின் கீழ் 3 மாதங்களுக்கு ஒருமுறை வட்டி வழங்கப்படும். இந்த கணக்கை திறக்க, ஏதேனும் தபால் அலுவலகம் (Post Office) அல்லது அரசு/தனியார் வங்கியில் கணக்கு தொடங்கலாம். கணக்கை திறக்க விரும்பும் நபர்கள் பால் அலுவலகம் அல்லது அரசு/தனியார் வங்கிக்கு சென்று ஒரு படிவத்தை நிரப்ப வேண்டும்.
2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், அடையாளச் சான்றிதழ் மற்றும் பிற KYC ஆவணங்களின் நகல்களை படிவத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். வங்கிக் கணக்கைத் திறப்பதன் நன்மை என்னவென்றால், டெபாசிட் செய்யப்பட்ட தொகையில் பெறப்பட்ட வட்டியை நேரடியாக வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யலாம்.
மேலும் படிக்க | Kisan Credit Card: குறைந்த வட்டியில் 3 லட்சம் வரை கடன்! விவசாயிகளுக்கு முன்னுரிமை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ