SBI New Rule: வாடிக்கையாளர்களுக்கு முக்கிய செய்தி, இந்த விதியை மாற்றியது வங்கி!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, வாடிக்கையாளர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, முக்கியமான மாற்றங்களை செய்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 26, 2021, 02:53 PM IST
  • SBI Yono செயலியின் ஒரு முக்கிய செயல்முறையில் மாற்றம் செய்துள்ளது வங்கி.
  • வாடிக்கையாளர் பாதுகாப்பு குறித்து இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
  • வங்கி இது குறித்து ட்வீட் மூலம் தெரிவித்தது.
SBI New Rule: வாடிக்கையாளர்களுக்கு முக்கிய செய்தி, இந்த விதியை மாற்றியது வங்கி!! title=

SBI Latest News: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, வாடிக்கையாளர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, முக்கியமான மாற்றங்களை செய்துள்ளது. இனி, எஸ்பிஐ யோனோ செயலியில், வாடிக்கையாளர்கள் வங்கியில் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணைக் கொண்டுள்ள போனிலிருந்து மட்டுமே லாக் இன் செய்ய முடியும்.

ஆன்லைன் வங்கி மோசடியில் இருந்து வாடிக்கையாளர்களைப் பாதுகாக்க எஸ்.பி.ஐ வங்கி (SBI) இப்படிச் செய்துள்ளது.

ஆன்லைன் வங்கி மோசடியிலிருந்து பாதுகாப்பு
இந்த நாட்களில் ஆன்லைன் மோசடி வழக்குகள் (Banking Fraud) மிக வேகமாக அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக, இந்த புதிய மேம்படுத்தல் யோனோ செயலியில் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் பாதுகாப்பான வங்கி அனுபவத்தைப் பெறுவது மட்டுமல்லாமல், ஆன்லைன் மோசடிகளுக்கு ஆளாவதையும் தவிர்க்க முடியும்.

வங்கியே தகவலை வழங்கியது

வாடிக்கையாளர் தங்கள் வங்கிக் கணக்கில் பதிவு செய்துள்ள அதே போனை புதிய பதிவுக்கு பயன்படுத்த வேண்டும் என வங்கி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் தெரிவித்துள்ளது. அதாவது, இப்போது எஸ்பிஐ யோனோ (SBI Yono) கணக்கு வைத்திருப்பவர்கள் வேறு மொபைல் எண்ணில் லாக் இன் செய்ய முயற்சித்தால், அவர்கள் பரிவர்த்தனை செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

ALSO READ: SBI வாடிக்கையாளர்கள் கவனம்! 30 செப்டம்பர் 2021 க்குள் ஆதார்-பான் இணைக்கவும்

பிற தொலைபேசி எண்களைப் பயன்படுத்த முடியாது

இப்போது இந்த புதிய விதியின் கீழ், நீங்கள் மற்ற தொலைபேசியிலிருந்து இந்த செயலியில் லாக் இன் செய்ய முடியாது. முன்னர் வாடிக்கையாளர்கள் எந்த போனிலிருந்தும் லாக் இன் செய்ய முடியும் என்றிருந்தது.

இப்போது வாடிக்கையாளர்கள், அவர்கள் பதிவு செய்த மொபைல் எண் இருக்கும் மொபைலில் இருந்து மட்டும்தான் யோனோ வசதியைப் பயன்படுத்த முடியும். இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கான பாதுகாப்பு அம்சங்களை அதிகரித்து வருவதாக வங்கி தெரிவித்துள்ளது.

ALSO READ: SBI Customers Alert: எஸ்பிஐ டிஜிட்டல் வங்கி சேவைகள் இரண்டு நாட்களுக்கு இருக்காது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News