SBI வங்கியில் புதிய மாற்றம், வங்கி வாடிக்கையாளர்களுக்காக முக்கிய தகவல்

அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முக்கியமான பணிகள் இருந்தால் மட்டுமே வங்கி கிளைக்கு செல்லவும் என்று வாடிக்கையாளர்கள் கூறப்பட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 18, 2021, 10:31 PM IST
SBI வங்கியில் புதிய மாற்றம், வங்கி வாடிக்கையாளர்களுக்காக முக்கிய தகவல் title=

புதுடெல்லி: நாட்டில் கொரோனா தொற்றுநோய் அதிகரித்து வருகிறது. இருப்பினும் வங்கி சேவைகளில் எவ்வித இடையூறும் இன்றி பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், நாட்டின் மிகப்பெரிய அரசாங்க வங்கியான எஸ்பிஐ அதன் சேவைகள் தொடர்பாக சில மாற்றங்களைச் செய்துள்ளது. அதன்படி எஸ்பிஐ இனி தனது வங்கிக் கிளைகளின் நேரத்தை மாற்றியுள்ளது.

அகில இந்திய வங்கி (All India Bank Employees Association) அதிகாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முக்கியமான பணிகள் இருந்தால் மட்டுமே வங்கி கிளைக்கு செல்லவும் என்று வாடிக்கையாளர்கள் கூறப்பட்டுள்ளது. மேலும், மே 31 ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் அதிகாலை 1 மணி வரை மட்டுமே வங்கிகள் இயங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ALSO READ | SBI Debit Card PIN: வீட்டில் இருந்தபடி இந்த வேலையை செய்யலாம்!

இந்நிலையில் SBI கிளை இனி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மட்டுமே திறக்கப்பட்டு இருக்கும். அத்துடன் வங்கியின் நிர்வாக அலுவலகங்களும் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்பட்டும் என்று தெளிவாகக் கூறப்பட்டு உள்ளது. மேலும் SBI ட்விட்டரில் கொடுத்த தகவல்களின்படி, வங்கியில் இந்த 4 பணிகளுக்கு மட்டுமே செயல்படும். அவை.,

(1) பண வைப்பு மற்றும் திரும்பப் பெறுதல்

(2) செக் தொடர்புடைய வேலைகளைச் சரிபார்க்க

(3) டிடியுடன் இணைக்கப்பட்ட வேலை அதாவது தேவை வரைவு / RTGS / NEFT 

(4) அரசு சலான்

கூடுதல தகவலுக்கு எஸ்பிஐ தொலைபேசி வங்கி சேவையின் பயனை வாடிக்கையாளர்கள் பெறலாம்.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News