SBI அற்புதமான சலுகை, ஷாப்பிங் செய்து 70% தள்ளுபடி பெறுங்கள்

எஸ்பிஐ யோனோ ஆப் ஷாப்பிங் ஆஃபர்: நீங்களும் எஸ்பிஐயின் வாடிக்கையாளராக இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு மகிழ்ச்சியை தரும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 19, 2022, 07:22 AM IST
  • எஸ்பிஐ வழங்கிய முக்கிய தகவல்
  • தள்ளுபடி எவ்வாறு பயன் பெறலாம்
  • எஸ்பிஐ யோனோவின் நன்மைகள்
SBI அற்புதமான சலுகை, ஷாப்பிங் செய்து 70% தள்ளுபடி பெறுங்கள் title=

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி. ஷாப்பிங் செய்ய வங்கி உங்களுக்கு வாய்ப்பளிக்கிறது (எஸ்பிஐ ஷாப்பிங் சலுகைகள்). நீங்களும் கோடை சீசனுக்காக ஷாப்பிங் செய்ய விரும்பினால், இன்றே செய்யுங்கள். எஸ்பிஐயின் வங்கிச் செயலியான யோனோ மூலம் ஆர்டர் செய்தால், பெரிய தள்ளுபடிகள் கிடைக்கும். இந்த சலுகை பற்றி தெரிந்து கொள்வோம்.

எஸ்பிஐ வழங்கிய முக்கிய தகவல்
இந்தத் தகவலை அளித்து, எஸ்பிஐ தனது ட்விட்டர் பக்கத்தில், சிறந்த ஃபேஷன் பிராண்டுகளில் பல தள்ளுபடி சலுகைகளை நீங்கள் பெறலாம். நீங்கள் யோனோ செயலி மூலம் ஆர்டர் செய்தால், பிராண்டின் அடிப்படையில் பெரிய தள்ளுபடிகள் கிடைக்கும். இதில், வாடிக்கையாளர் அதிகபட்சமாக 70 சதவீதம் வரை தள்ளுபடி பெறுவார்கள் என்று வங்கி ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | UPI Payment Mistakes:இதை செய்யத் தவறினால் உங்கள் கணக்கு காலியாகிவிடும்

 

 

தள்ளுபடி எவ்வாறு பயன் பெறலாம்?
இந்தச் சலுகையை நீங்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

* இதைச் செய்ய, நீங்கள் முதலில் எஸ்பிஐ இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் சென்று அதன் செயலியான யோனோ ஐப் பதிவிறக்கவும்.
* இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரிலும் பதிவிறக்கம் செய்யலாம்.
* அதன் பிறகு உங்கள் மொபைல் எண்ணுடன் பதிவு செய்யுங்கள்.
* இதற்குப் பிறகு, இந்த செயலியில் இருந்தே டைட்டன், லைஃப்ஸ்டைல், ட்ரெண்ட்ஸ், அஜியோ, பிபா போன்ற பிராண்டுகளிலிருந்து ஷாப்பிங் செய்வதற்கான விருப்பத்தைப் பெறுவீர்கள்.
* இங்கே நீங்கள் ஆர்டர் செய்யலாம் மற்றும் ஷாப்பிங் செய்யலாம், ஏனெனில் இங்கே உங்களுக்கு ட்ரெண்டுகளில் 70% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

எஸ்பிஐ யோனோவில் பல நன்மைகள் கிடைக்கும்
இதில் நீங்கள் எப்படி அதிக பலன் பெறலாம் என்பதை ஏபிசிஐ தனது ட்வீட்டில் மூலம் விளக்கியுள்ளது. அதன்படி யோனோ செயலி மூலம் வெவ்வேறு பிராண்டுகளுக்கு ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, பயன்பாட்டில் கிடைக்கும் அனைத்து தள்ளுபடிகளுடன் தனித்தனியாகச் சேமிக்கும் வாய்ப்பு வழங்கப்படும். இது தவிர, எஸ்பிஐ டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள் மூலம் செயலியில் ஷாப்பிங் செய்ய பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு தனித்தனி தள்ளுபடிகள் மற்றும் வெகுமதிகள் வழங்கப்படும். அதாவது, இந்தச் சலுகையில் அதிக நன்மைகளையும் நீங்கள் பெறலாம் என்று விளக்கியுள்ளது.

மேலும் படிக்க | வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு ஷாக்: விவரம் இதோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News