உங்கள் வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்ளக்கூடிய சரியான வாழ்க்கை துணையை கண்டுபிடிப்பது என்பது ஒன்றும் அவ்வளவு எளிதான செயல் கிடையாது. தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்துவிட்ட நிலையில், ஆன்லைன் டேட்டிங் தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது. முன் பின் அறிமுகமில்லாத நபர்களுடன் ஒரு உறவை ஏற்படுத்துவதற்கு இதுபோன்ற சமூக ஊடகங்கள் உதவுகின்றது. உறவு பற்றி பொதுவாக கூறப்படும் கட்டுக்கதைகளில் ஒன்று தான், அனைவருக்கும் சரியான நேரத்தில் சரியான வாழ்க்கை துணை கிடைக்கும் என்பதும். அனைவருக்குமே சரியான வாழ்க்கை துணை அமைந்துவிடுவதில்லை, பலரது வாழ்க்கை அவர்களின் துணையாலேயே சீரழிந்து இருக்கிறது. ஒரு உறவை நாம் கொண்டுப்போகும் விதத்தில் தான் அந்த உறவு இனியமானதா அல்லது கசப்பானதா என்பது உள்ளது. டேட்டிங் செய்யும் போது ஒருவர் செய்யக்கூடிய மிக முக்கியமான விஷயம், அவரது துணையிடம் உண்மையானதாகவும், மரியாதையாகவும் இருக்க வேண்டும்.
1) உறவில் எதிரெதிர் துருவங்கள் ஈர்க்கப்படும் என்று கூறுவது பொதுவாக டேட்டிங் பற்றி கூறப்படும் கட்டுக்கதை, இருப்பினும் அதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை. உறவில் ஒற்றுமை என்பது இருக்க வேண்டும். வேறுபாடுகள் ஒரு உறவில் சில உற்சாகத்தைக் கொண்டுவரும் போது, ஒரு வலுவான அடித்தளத்தை நிறுவுவதற்கு சில பொதுவான காரணங்களைப் பகிர்ந்து கொள்வது முக்கியம்.
2) உறவில் பொய்யாக விளையாடுவது விரும்பத்தக்கதாக மாற்றங்களை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. ஆரோக்கியமான மற்றும் நேர்மையான உறவை நிறுவுவதற்கு, உங்கள் வாழ்க்கை துணையிடம் நீங்கள் உண்மையானதாகவும் தெளிவாகவும் தொடர்புகொள்வது முக்கியம்.
3) முதல் பார்வையில் வரும் காதல் நீடிக்கும் என்று கூறப்படுகிறது. முதல் பார்வையில், காதல் போல் தோன்றினாலும், அது உண்மையிலேயே காதலாகிவிடாது. ஒருவரை நீங்கள் உண்மையாக அறிந்துகொள்ளவும, அவர்களுடன் ஆழமான தொடர்பை ஏற்படுத்தவும் கட்டாயம் நேரம் எடுக்கும். உடனடி ஈர்ப்பு மற்றும் மோகம் சக்திவாய்ந்ததாக இருக்கலாம், ஆனால் நீடித்த உறவை உருவாக்குவதற்கு புரிதல் அவசியமாகிறது.
4) திரைப்படங்கள் மற்றும் புத்தகங்களில் பார்க்கும் காதல் உறவுகளை வைத்து நாம் நிஜ வாழ்க்கையில் காதலை எதிர்பார்த்துவிட கூடாது. திரைப்படங்கள் மற்றும் புத்தகங்களில் உள்ள விஷயங்கள் நம்பத்தகாத எதிர்பார்ப்புகளை உருவாக்கலாம் மற்றும் உறவுகளின் மீது தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்தும். நிஜ வாழ்க்கையில் உறவில் எது சாத்தியமோ அதை மட்டும் எதிர்பாருங்கள். அதைவிடுத்து கதைகளில், படங்களில் வருவது போன்ற உறவுகளை எதிர்பார்க்காதீர்கள்.
5) ஆன்லைன் டேட்டிங் ஆபத்தானது என்றும், இதில் பலரது வாழ்க்கையே போய்விடும் என்கிற கருத்துக்கள் நிலவுகிறது. டேட்டிங் பயன்பாடுகள் மற்றும் இணையதளங்களின் வளர்ச்சியுடன், ஆன்லைன் டேட்டிங் இப்போது புதிய நபர்களைச் சந்தித்து ஒரு வலுவான உறவை ஏற்படுத்த இது மிகவும் உதவிகரமானதாக இருக்கிறது. உங்கள் ஆர்வங்கள், விருப்பங்கள், எண்ணங்கள் என அனைத்தையும் பகிர்ந்து கொள்வதற்கு ஆன்லைன் டேட்டிங் சிறந்த வழியாக கருதப்படுகிறது.
மேலும் படிக்க | வயதில் மூத்த பெண்களை விரும்பும் மெஜாரிட்டி ஆண்கள்... ஏன் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ