Railway Recruitment 2022: ரயில்வேயில் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 27

மேற்கு ரயில்வேயில் அப்ரண்டிஸ் காலியிடங்களுக்கான பணிகள் நிரப்பப்படுகிறது. விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஜூன் 27, 2022

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 1, 2022, 01:50 PM IST
Railway Recruitment 2022: ரயில்வேயில் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 27 title=

புதுடெல்லி: இந்திய ரயில்வேயில் காலியிடங்கள் பூர்த்தி செய்யப்படவிருக்கின்றன. அதற்கான அறிவிப்பு வெளியாகியிருகிறது. மேற்கு ரயில்வேயில் காலியாக இருக்கும் இந்த பணியிட்ங்களுக்கு  rrc-wr.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ ரயில்வே ஆட்சேர்ப்பு மேற்கு ரயில்வே (RRC WR) இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

3612 அப்ரண்டிஸ் காலியிடங்களை நிரப்பும் இந்த ஆட்சேர்ப்பில் எழுத்துத் தேர்வு அல்லது விவா எதுவும் நடத்தப்படாது. மேற்கு ரயில்வேயில் பம்பர் அப்ரண்டிஸ் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் படிக்க | தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வழங்கும் வேலைவாய்ப்பு

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ ரயில்வே ஆட்சேர்ப்பு செல் மேற்கு ரயில்வே (RRC WR) இணையதளத்தில் rrc-wr.com இல் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஜூன் 27, 2022 ஆகும்.

2022-23 ஆம் ஆண்டிற்கான மேற்கு ரயில்வேயின் கீழ் வரும் பல்வேறு பிரிவுகள் மற்றும் பணிமனைகளில் பயிற்சி சட்டம் 1961 இன் கீழ் மொத்தம் 3612 அப்ரண்டிஸ் காலியிடங்களை நிரப்ப ஆட்சேர்ப்பு இயக்கம் நோக்கமாக உள்ளது.

மேற்கு ரயில்வே ஆட்சேர்ப்பு 2022: வயது வரம்பு
2022 ஜூன் 27ம் நாளன்று விண்ணப்பதாரர்களின் வயது குறைந்தபட்சம் 15ஆக இருக்கவேண்டும். மற்றும் அதிகபட்ச வயது வரம்பு 24.

மேற்கு ரயில்வே ஆட்சேர்ப்பு 2022: கல்வித் தகுதி

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் 10+2 தேர்வு முறையில் மெட்ரிகுலேசன் அல்லது 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், என்சிவிடி/எஸ்சிவிடியுடன் இணைந்த ஐடிஐ சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும்.

மேலும் படிக்க | பட்டதாரி பொறியாளர்களை வேலைக்கு எடுக்கும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம்

மேற்கு ரயில்வே ஆட்சேர்ப்பு 2022: விண்ணப்பக் கட்டணம்
SC/ST/PWD/பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. பிற விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்.

மேற்கு ரயில்வே ஆட்சேர்ப்பு 2022: தேர்வு செயல்முறை

"மெட்ரிகுலேஷனில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன், விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்களின் சதவீதத்தின் சராசரியை எடுத்து, இரண்டிற்கும் சமமான வெயிட்டேஜ் கொடுத்து பணிச்சேர்க்கை நடைபெறும். ஐடிஐ தேர்வில், தகுதிப் பட்டியலின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்" என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 

மேற்கு ரயில்வே ஆட்சேர்ப்பு 2022: எப்படி விண்ணப்பிப்பது
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான www.rrc-wr.com மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் அவர்கள் விண்ணப்பம்/ சான்றிதழ்கள்/ஆவணங்களின் நகல்களை RRC/WR க்கு தபால் மூலம் அனுப்பக்கூடாது, ஆனால் அதை ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும்.

மேலும் படிக்க | இந்தியாவில் 2 லட்சத்துக்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் தயார்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQ

Trending News