ஜோதிட சாஸ்திரப்படி பிப்ரவரி மாதம் மொத்தம் 4 கிரகங்களின் ராசி மாற்றங்கள் சிறப்பாக இருக்கும். பிப்ரவரி 4 ஆம் தேதி, புதன் கிரகம் கும்ப ராசிக்கு நகர்ந்தது.
பிப்ரவரி 13 ஆம் தேதி சூரிய பகவான் கும்ப ராசிக்குள் நுழைகிறார். இதற்குப் பிறகு, பிப்ரவரி 19 ஆம் தேதி, குரு பகவான் கும்பத்தில் அஸ்தமிப்பார்.
பிப்ரவரி 26 ஆம் தேதி மகர ராசியில் செவ்வாய் சஞ்சரிக்கிறார், மேலும் செல்வத்தின் காரகரான சுக்கிரன் பிப்ரவரி 27 ஆம் தேதி மகர ராசியில் நுழைகிறார்.
இந்த நான்கு கிரகங்களின் ராசி மாற்றத்தால் சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர். இதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | புதன் கிரகத்தால் இன்று முதல் பெரிய மாற்றம்: 4 ராசிக்காரர்கள் மீது நேரடி தாக்கம்
மேஷம்
தற்போது மேஷ ராசிக்கு பத்தாம் வீட்டில் புதனும் சனியும் அமர்ந்துள்ளனர். இதன் காரணமாக பணியிடத்தில் மகத்தான வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் புதிய பொருளாதார உயர்வை அடைவீர்கள்.
இருப்பினும் குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படும். அதுமட்டுமல்லாமல், உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களின் ஜாதகத்தில் ராகு கிரகம் உள்ளது. இதனால் தொழில், வியாபாரம் பாதிக்கப்படும். மேலும், பொருளாதார நிலையேயிலும் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படலாம்.
இருப்பினும், மாத இறுதியில் நிதி நிலைமை மேம்படும். திருமண வாழ்வில் சிரமங்களை சந்திக்க நேரிடலாம்.
மேலும் படிக்க | இந்த 3 ராசியில் பிறந்த பெண்களுக்கு அதிக கோபம் வரும்
மகரம்
இந்த மாதத்தில் 4 கிரகங்களின் சஞ்சாரம் மகர ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகளை உண்டாக்கும். குருவும் சனியும் இணைவதால் உத்தியோகத்தில் ஏற்ற, இறக்கம் ஏற்படும். மாணவர்களுக்கு படிப்பில் சிக்கல்கள் ஏற்படும். குடும்ப பிரச்சனைகளில் கவனமாக இருக்க வேண்டும். இது தவிர வியாபாரத்தில் பண நஷ்டம் ஏற்படும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இருப்பினும், ஜாதகத்தின் ஏழாவது வீட்டில் குரு இருப்பதால், வணிகத்தில் பொருளாதார வெற்றியைப் பெறலாம். திருமண வாழ்க்கையில், துணைவருடன் தகராறு ஏற்படலாம். கிரகப் பெயர்ச்சியின் போது கவனமாக இருக்க வேண்டும்.
மேலும் படிக்க | Numerology: புதனின் பரிவர்த்தனையால் பணமழையில் நனையப் போவது நீங்களா?
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR