பிபிஎஃப் திட்டம் சமீபத்திய புதுப்பிப்பு: பொது மக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் மத்திய அரசால் நடத்தப்படுகின்றன. அதில் பிபிஎஃப் திட்டமும் ஒன்றாகும். இதில் பணத்தை முதலீடு செய்வதன் மூலம் சந்தாதாரர்கள் பெரும் நன்மைகளைப் பெற முடியும். பொதுவாக அனைத்து அரசு திட்டங்களிலும் உத்தரவாதமான வருமானம் கிடைக்கும். இதனுடன் பனத்தை இழக்கும் அபாயமும் இவற்றில் இருப்பதில்லை. பிபிஎஃப் திட்டமும் அப்படி ஒரு மிக பாதுகாப்பான முதலீட்டுத் திட்டமாகும்.
அரசின் பெரிய அறிவிப்பு
பிபிஎஃப் அதாவது பொது வருங்கால வைப்பு நிதியில் பணத்தை முதலீடு செய்பவர்கள் இப்போது அரசாங்கத்திடமிருந்து பெரிய பலனைப் பெறுவார்கள். இந்த திட்டம் குறித்து அரசு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வட்டி எவ்வளவு கிடைக்கும்?
பிபிஎஃப் சந்தாதாரர்கள் இந்த நேரத்தில், இந்தத் திட்டத்தில் 7.1 சதவீத வட்டியின் பலனைப் பெறுவீர்கள். இதில் கூட்டு வட்டியின் (காம்பவுண்ட் இண்ட்ரஸ்ட்) பலன் கிடைக்கும் என்பது சிறப்பு. வட்டி விகிதங்கள் ஒவ்வொரு ஆண்டும் நிதி அமைச்சகத்தால் நிர்ணயிக்கப்படுகின்றன. இது மார்ச் 31 அன்று செலுத்தப்படும். அதாவது, இந்த முறை மார்ச் 31-ம் தேதி அரசிடமிருந்து உங்கள் கணக்கில் பெரிய தொகை வரப் போகிறது. ஒவ்வொரு மாதமும் 5 ஆம் தேதி வட்டி கணக்கிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | PPF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சி: நினைத்தது நடக்கவில்லை!!
500 ரூபாய் முதல் துவங்கலாம்
இந்த திட்டத்தில் ஒரு நபர் 500 ரூபாய்க்கான முதலீட்டிலிருந்து தொடங்கலாம். அதே சமயம் நிதியாண்டில் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை இதில் முதலீடு செய்யலாம். இது மட்டுமின்றி, பிபிஎஃப்-ல் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு கடன் வசதியும், பார்சியல் வித்ட்ராயல் (பகுதியளவு தொகையை திருப்பி எடுப்பது) வசதியும் உள்ளது.
பிபிஎஃப் மீதான வரி விலக்கு
பிபிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்தால், வரி விலக்கு பலன் கிடைக்கும். இதில் பெறப்படும் வட்டி மற்றும் முதிர்வு நிறைவடையும் போது பெறப்படும் பணம் ஆகிய அனைத்துக்கும் முற்றிலும் வரிவிலக்கு உண்டு.
பிபிஎஃப்-இல் பாதியிலேயே பணத்தை எடுக்க முடியுமா?
நீங்கள் பிபிஎஃப்- இல் 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும். எனினும், நீங்கள் முதலீடு செய்து 6 ஆண்டுகள் ஆன பிறகு அதில் சேர்ந்துள்ள தொகையை எடுக்க முடியும். பிபிஎஃப் கணக்கில் பகுதியளவு தொகையை எடுக்கும் வசதி உள்ளது. இந்த வசதியின் பலனை 7வது நிதியாண்டிலிருந்து பெறலாம். அதாவது நீங்கள் பிபிஎஃப்-ல் டெபாசிட் செய்யத் தொடங்கி 6 ஆண்டுகள் ஆன பிறகு இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ