PM Kisan: ‘இதை’ செய்யாத விவசாயிகளுக்கு 10வது தவணை கிடைப்பதில் தாமதம் ஆகும்!

பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் 10வது தவணை தொகையை, விவசாயிகளின் கணக்கில், பிரதமர் நரேந்திர மோடி நாளை அதாவது ஜனவரி 1, 2022 அன்று வெளியிடுகிறார். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 31, 2021, 12:25 PM IST
  • புத்தாண்டில் 10வது தவணை பணம் கிடைக்கும்.
  • பிரதமர் மோடி 10வது தவணையை வெளியிடுகிறார்.
  • 2 கோடி விவசாயிகளுக்கு பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
PM Kisan: ‘இதை’ செய்யாத விவசாயிகளுக்கு 10வது தவணை கிடைப்பதில் தாமதம் ஆகும்! title=

PM Kisan Samman Nidhi: பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி (PM Kisan) திட்டத்தின் கீழ் 10வது தவணை தொகையை, விவசாயிகளின் கணக்கில், பிரதமர் நரேந்திர மோடி நாளை அதாவது ஜனவரி 1, 2022 அன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் வெளியிடுகிறார். இதன் கீழ், 10 கோடிக்கும் மேற்பட்ட பயனாளி குடும்பங்களுக்கு சுமார் ரூ.20,000 கோடிக்கு மேல் வழங்கப்படும். ஆனால் 2 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு புத்தாண்டில் 2 ஆயிரம் ரூபாய் தவணை கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம் என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஊழலை தடுக்க மத்திய அரசு இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள் E-KYC செய்ய வேண்டியது கட்டாயம் என கூறியுள்ள நிலையில், உங்கள் இ-கேஒய்சி செயல்முறையை நீங்கள் முடிக்கவில்லை என்றால், ஜனவரி 1 ஆம் தேதி தவணையாக ரூ.2,000 கணக்கில் வராது, இ-கேஒய்சி செய்த பிறகே பணம் உங்கள் கணக்கில் வரும். எனவே பணம் கிடைப்பதில் தாமதம் ஆகலாம்.

ALSO READ | GSTR Filing: வரி செலுத்துவோருக்கு முக்கிய செய்தி, இந்த காலக்கெடுவை நீட்டித்தது அரசு 

2 கோடி விவசாயிகளுக்கு பணம் கிடைப்பதில் தாமதம்

பிரதமர் கிசானின் கீழ் 12 கோடி விவசாயிகள் பதிவு செய்துள்ள நிலையில், 10 கோடி விவசாயிகளுக்கு மட்டுமே அரசாங்கம் தவணைத் தொகையை செலுத்த உள்ளதாக, பிரதமர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, இரண்டு கோடிக்கும் அதிகமான விவசாயிகள் 10வது தவணைக்காக சிறிது காலம் காத்திருக்க வேண்டி நிலை ஏற்பட்டுள்ளது. 

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றும் நிகழ்ச்சியின் போது, ​​சுமார் 351 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு (FPOs) 1.24 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் பயன்பெறும் வகையில், 14 கோடி ரூபாய்க்கு மேல் பங்கு மானியத்தையும் பிரதமர் வெளியிடுவார். நிகழ்ச்சியின் போது, ​​பிரதமர் FPOக்களுடன் உரையாடுவார், மேலும் நாட்டு மக்களிடையேயும் உரையாற்றுவார். இந்த நிகழ்ச்சியில் மத்திய விவசாய அமைச்சரும் கலந்து கொள்கிறார்.

பயனாளிகளின் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என சரிபார்க்கும் முறை

1. பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள விவசாயிகள் 10வது தவணையின் நிலையைச் சரிபார்க்க https://pmkisan.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

2. அதற்குப் பிறகு, விவசாயிகள்  'Farmers Corner' என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

3. இதற்குப் பிறகு, இணையதளத்தில் கிடைக்கும் 'Beneficiaries List'என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

4. இதற்குப் பிறகு நீங்கள் உங்கள் மாநிலம், மாவட்டம், துணை மாவட்டம், தொகுதி மற்றும் கிராமத்தை இணையதளத்தில் தேர்ந்தெடுக்க வேண்டும்.
இதற்குப் பிறகு, 'Get Report' என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு விவசாயின் கணக்கிலும் 2 ஆயிரம் ரூபாய்

PM-கிசான் திட்டத்தின் கீழ், தகுதியான பயனாளி விவசாயி குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.6000 நிதிப் பலன் வழங்கப்படுகிறது. இது 4 மாத இடைவெளியில் தலா ரூ.2000 வீதம் மூன்று சம தவணைகளில் செலுத்தப்படும்.

ALSO READ | செல்போன் தொலைந்து போனால் UPI விவரங்களை பாதுகாப்பது எப்படி 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News