பிங்க் சிட்டி ஜெய்ப்பூர் உலக பாரம்பரிய தளமாக யுனெஸ்கோ அறிவிப்பு!!

பிங்க் சிட்டி ஜெய்ப்பூரை உலகின் பாரம்பரிய நகரமாக யுனெஸ்கோவின் அறிவிப்புக்கு பிரதமர் மோடி மகிழ்ச்சி!!

Last Updated : Jul 7, 2019, 08:20 AM IST
பிங்க் சிட்டி ஜெய்ப்பூர் உலக பாரம்பரிய தளமாக யுனெஸ்கோ அறிவிப்பு!! title=

பிங்க் சிட்டி ஜெய்ப்பூரை உலகின் பாரம்பரிய நகரமாக யுனெஸ்கோவின் அறிவிப்புக்கு பிரதமர் மோடி மகிழ்ச்சி!!

பிங்க் சிட்டி ஜெய்ப்பூர் இப்போது யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாகும். ஐ.நா. அமைப்பு - ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு, உலக பாரம்பரியக் குழுவின் 43 வது அமர்வில், நகரம் இப்போது உலக பாரம்பரிய தளமாக இருப்பதாக தனது முடிவை அறிவித்தது.

ராஜஸ்தானின் தலைநகரான ஜெய்ப்பூர் 1727 ஆம் ஆண்டில் இரண்டாம் சவாய் ஜெய் சிங் அவர்களால் நிறுவப்பட்டது, இது தங்க முக்கோணத்தின் ஒரு பகுதியாக இருக்கும் ஒரு முக்கிய சுற்றுலா தலமாகும் - இது டெல்லி, ஆக்ரா மற்றும் ஜெய்ப்பூரை இணைக்கும் சுற்றுலா தளம். 

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் நகரம் ‘மதில் சூழ்ந்த நகரம்’ என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள தனித்துவமான கட்டிடங்களும், உற்சாகமான கலாசாரமும், மக்களின் விருந்தோம்பலும் உலகளவில் சுற்றுலா பயணிகளை கவரும் இடமாக உள்ளது. இந்த நகரை நினைவிடங்கள் மற்றும் தலங்களுக்கான சர்வதேச குழு கடந்த ஆண்டு ஆய்வு செய்து, யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய இடத்துக்கான பட்டியலில் சேர்க்க விண்ணப்பித்தது.

அஜர்பைஜான் நாட்டில் உள்ள பாகு நகரில் கடந்த ஜூன் 30-ந் தேதி தொடங்கி நடைபெற்றுவரும் யுனெஸ்கோ உலக பாரம்பரிய கமிட்டியின் 43-வது மாநாட்டில் இந்த விண்ணப்பம் நேற்று பரிசீலனை செய்யப்பட்டது. பரிசீலனைக்கு பின்னர் ஜெய்ப்பூரை உலக பாரம்பரிய இடங்கள் பட்டியலில் யுனெஸ்கோ சேர்த்தது.

பிரதமர் நரேந்திர மோடி, “ஜெய்ப்பூர் நகரை உலக பாரம்பரிய இடமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்” என்று டுவிட்டர் மூலம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட், ‘பிங்க் சிட்டி’ ஜெய்ப்பூரை யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்திருப்பது மிகவும் பெருமைக்குரிய தருணம். இது ராஜஸ்தான் தலைநகருக்கு கிடைத்துள்ள மற்றொரு மகுடம் என்றார்.

இதுகுறித்து ANI செய்தி நிருவனத்திடம் பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் கூறுகையில்; 'ராஜஸ்தான் மக்களின் இந்த சாதனைக்கு வாழ்த்துக்கள். இது ஒரு பெரிய சாதனை, ராஜஸ்தான் மக்களுக்கும், முழு நாட்டிற்கும் வாழ்த்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன்' என்று ராஜ்நாத் கூறினார்.

இதுவரை 167 நாடுகளில் உள்ள 1,092 இடங்கள் உலக பாரம்பரிய இடங்கள் பட்டியலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Trending News