PF Account: எளிய வழியில் உங்கள் புதிய வங்கிக் கணக்கை பிஎஃப் கணக்குடன் சேர்க்கலாம்

PF Account Update: பிஎஃப்  கணக்கில் புதிய வங்கிக் கணக்கை எவ்வாறு சேர்ப்பது என்பதை இந்த பதிவில் காணலாம். சுலபமான வழிமுறைகளின் மூலம் இதை செய்து முடிக்கலாம். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 11, 2022, 04:02 PM IST
  • வங்கிக் கணக்கை பிஎஃப் கணக்குடன் இணைப்பது அவசியம்.
  • எளிய வழியில் இதை செய்ய முடியும்.
  • இந்த இணைப்பு மிக அவசியமாகும்.
PF Account: எளிய வழியில் உங்கள் புதிய வங்கிக் கணக்கை பிஎஃப் கணக்குடன் சேர்க்கலாம் title=

பொதுவாக, அனைத்து பணியாளர்களின் சம்பளத்திலும் ஒரு பகுதி வருங்கால வைப்பு நிதி, அதாவது பி.எஃப் ஆக டெபாசிட் செய்யப்படும். இதற்காக இபிஎஃப்ஓ எனப்படும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ​​சந்தாதாரர்களின் பிஎஃப் கணக்கை திறக்கிறது. 

பிஎஃப் கணக்குடன் ஊழியர்களின் ஏதாவது ஒரு வங்கிக் கணக்கு இணைக்கப்படுகின்றது. ஆனால் சில சமயம் சந்தாதாரர்கள் ஏற்கனவே பிஎஃப் கணக்குடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கை மூடிவிட்டு புதிய வங்கிக் கணக்கை பிஎஃப் கணக்குடன் இணைக்க மறந்துவிடுவது பல நேரங்களில் நடக்கிறது. 

வங்கிக் கணக்குத் தகவல்களைப் புதுப்பிக்காததால், பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் பிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க முடியாமல் போகிறது. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் புதிய வங்கிக் கணக்கின் தகவலை பிஎஃப் கணக்குடன் புதுப்பிக்க வேண்டியது அவசியமாகும். அதை எப்படி செய்வது என இந்த பதிவில் காணலாம். 

இந்த வழிமுறைகளை பின்பற்றவும்

ஸ்டெப் 1. முதலில் இபிஎஃப்ஓ ​​உறுப்பினர் ஒருங்கிணைந்த உறுப்பினர் போர்ட்டலுக்கு (https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/) சென்று பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல் கொண்டு லாக் இன் செய்ய வேண்டும். 

ஸ்டெப் 2. இதற்குப் பிறகு 'மேனேஜ்' டேபை கிளிக் செய்ய வேண்டும்.

ஸ்டெப் 3. இதற்குப் பிறகு, கீழ்தோன்றும் மெனுவிலிருந்து 'KYC'-ஐத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

மேலும் படிக்க | PF New Rules: ஏப்ரல் 1 முதல், PF கணக்கில் பெரிய மாற்றம் 

ஸ்டெப் 4. அதன் பிறகு உங்கள் வங்கியைத் தேர்ந்தெடுத்து வங்கிக் கணக்கு எண், பெயர் மற்றும் ஐ.எஃப்.எஸ்.சி குறியீட்டை உள்ளிட்டு 'சேவ்' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

ஸ்டெப் 5. இப்போது உங்களின் இந்தத் தகவல், முதலாளியால் அங்கீகரிக்கப்பட்டதும், அங்கீகரிக்கப்பட்ட KYC பிரிவில் (அப்ரூவ்ட் KYC செக்ஷன்) தோன்றும். இந்த வகையில் உங்கள் புதிய வங்கிக் கணக்குத் தகவல் இபிஎஃப் கணக்குடன் இணைகப்பட்டு அது புதுப்பிக்கப்படும். 

PF கணக்கு இருப்பை இந்த வழியில் தெரிந்துகொள்ளலாம்

- முதலில், இபிஎஃப்ஓ ​​உறுப்பினர் www.epfindia.gov.in என்ற இணையதளத்துக்கு செல்ல வேண்டும்.
- பின்னர், உறுப்பினர் 'சர்வீசஸ்' டேபில் இருந்து 'ஃபார் எம்பிளாயீஸ்' என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- அதன் பிறகு உறுப்பினர் 'சர்வீசஸ்' டேபில் இருந்து 'மெம்பர் பாஸ்புக்' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
- இதற்குப் பிறகு, உறுப்பினர் லாக் இன் செய்ய உங்கள் UAN மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும். இதன் பிறகு உங்களால் உங்கள் பிஎஃப் கணக்கின் பாஸ்புக்கைப் பார்க்க முடியும்.

மேலும் படிக்க | EPFO: 24 கோடி ஊழியர்களின் PF கணக்கில் வந்த வட்டிப் பணம் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News