Life certificate வாங்கலையா.. கவலை வேண்டாம்.. வீடு தேடி வரும் சேவை..!!!

ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆண்டுதோறும் நவம்பர் மாதம், அரசின் கருவூல அலுவலகங்களுக்கு நேரில் சென்று, தாங்கள் உயிருடன் இருப்பதற்கான ஆயுள் சான்றிதழை மின்னணு முறையில் பதிவு செய்ய வேண்டும். 

Last Updated : Nov 13, 2020, 06:46 PM IST
  • ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆண்டுதோறும் நவம்பர் மாதம், அரசின் கருவூல அலுவலகங்களுக்கு நேரில் சென்று, தாங்கள் உயிருடன் இருப்பதற்கான ஆயுள் சான்றிதழை மின்னணு முறையில் பதிவு செய்ய வேண்டும்.
  • உங்கள் உயிர் வாழ் சான்றிதழை (Life Certificate) நீங்கள் சமர்ப்பிக்கவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம்.
  • உங்கள் பகுதியில் உள்ள போஸ்ட் ஆபீஸை அழைக்கவும்.
Life certificate வாங்கலையா.. கவலை வேண்டாம்.. வீடு தேடி வரும் சேவை..!!! title=

ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆண்டுதோறும் நவம்பர் மாதம், அரசின் கருவூல அலுவலகங்களுக்கு நேரில் சென்று, தாங்கள் உயிருடன் இருப்பதற்கான ஆயுள் சான்றிதழை மின்னணு முறையில் பதிவு செய்ய வேண்டும். ஓய்வூதியர்கள் உயிர் வாழ் சான்றிதழை (Life certificate) வழங்கவில்லை என்றால், ஓய்வூதியம் (Pension)  நிறுத்தப்பட்டு விடும்.

கொரோனா நெருக்கடி காலத்தை கருத்தில் கொண்டு, ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க, வரும் டிசம்பர் மாதம் வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

உங்கள் உயிர் வாழ் சான்றிதழை (Life Certificate) நீங்கள் சமர்ப்பிக்கவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். உங்கள் பகுதியில் உள்ள போஸ்ட் ஆபீஸை அழைக்கவும். இந்த வேலையில் அவர் உங்களுக்கு உதவுவார். அஞ்சகங்கள் அதாவது, போஸ்ட் ஆபீஸ்கள்  இப்போது ஓய்வூதியதாரர்களுக்கு தங்கள் உயிர் வாழ் சான்றிதழ்களை ஆன்லைனில் சமர்ப்பிப்பதற்கு வீட்டிற்கு வந்து சேவை வழங்கும். இந்த சேவைக்கு 70 ரூபாய் வசூலிக்கப்படும். இந்த சேவை மத்திய அரசு அனைத்து ஊழியர்களுக்கும் கிடைக்கும்.

ALSO READ| Google Drive-ல் உள்ள புகைப்படங்கள் காணாமல் போகலாம்.. நீங்கள் செய்ய வேண்டியது என்ன..!!!

இது தவிர, அருகிலுள்ள தபால் நிலையத்திற்குச் (Post Office) சென்று ஆதார் அடிப்படையிலான டிஜிட்டல் வாழ்க்கை சான்றிதழையும் சமர்ப்பிக்கலாம்.

தற்போதைய தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, ஓய்வூதியம் பெறுவோர் வீட்டில் இருந்த படியே உயிர் வாழ் சான்றிதழ்களை சமர்ப்பிக்க உதவும் இந்த சேவை ஓய்வூதியர்களுக்கு பெரும் நிவாரணம் அளித்துள்ளது. இந்த சேவையை இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி (India Post Payments Bank -IPPB) மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெற்றிகரமாக தொடங்கியுள்ளது.

Jeevanpraman.gov.in

ஜீவன் பிரமான் போர்ட்டலில் இருந்து உயிர் வாழ் சான்றிதழை ஆன்லைனில் சமர்ப்பிக்கும் வசதி 2014 நவம்பரில் பிரதமர் நரேந்திர மோடியால் (PM Narendra Modi)  தொடங்கப்பட்டது. வயதான ஓய்வூதியதாரர்களுக்கு இந்த முறை எளிதாகவும் வசதியாகவும் இருக்கும் இந்த சேவையை ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறை ஆண்டுதோறும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அளித்து வருகிறது.

உமங் (Umang) செயலியிலும் இந்த சேவையை பெறலாம்

உமாங் செயலியின் உதவியுடன், வீட்டில் இருந்த படியே உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து உங்கள் டிஜிட்டல் லைப் சர்டிபிகேட்டை சமப்ர்பிக்கலாம். உமாங் செயலியில் ஆன்லைன் டிஜிட்டல் லைப் சர்டிபிகேட்டை பெற, நீங்கள் ஆதாரில் உள்ள 12 இலக்க ஆதார் எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை கொடுக்க வேண்டும் மேலும், உங்கள் ஆதார் எண் ஓய்வூதிய வழங்கும் நிதி நிறுவனத்தில் (வங்கி, தபால் அலுவலகம் அல்லது ஏதேனும் ஒரு நிறுவனம்) பதிவு செய்யப்பட்டதாக இருக்க வேண்டும்.

ALSO READ | பென்ஷன் பெறுபவர்கள் இனி வீட்டிலிருந்த படியே உயிர்வாழ் சான்றிதழை பெறலாம்..!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News