புது டெல்லி: தொலைபேசி பயனர்கள் யுபிஐ (UPI) எண்களை பயன்படுத்தி தங்கள் தொலைபேசி எண்களுக்கு ரீசார்ஜ் செய்யலாம். அதோடு, நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்.பி.சி.ஐ - NPCI) உடன் இணைந்துள்ளதாக செவ்வாய்க்கிழமையன்று Paytm தெரிவித்துள்ளது.
Paytm இப்போது தொலைபேசி பயனர்கள், தங்களுடைய வோடஃபோன் ஐடியா எண்களை சரியான யுபிஐ ஐடி (UPI ID) மூலம் ரீசார்ஜ் செய்ய அனுமதி கொடுக்கிறது. இந்த சேவையை நாடு முழுவதும் விரிவுபடுத்த நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவுடன் (National Payments Corporation of India) இணைந்திருக்கிறோம் என்று பேடிஎம் (Paytm) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த அனுமதியால் கோடி கணக்கான பயனர்கள் பயன்பெறுவார்கள். இனி கடைகளுக்குச் செல்லாமலே, தங்களின் தொலைபேசி மூலமாகவே, தங்களின் தொலைபேசி எண்களுக்கு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
பிற செய்தி படிக்கவும்: இனி வீட்டிலேயே இருந்தபடியே ₹.5 ஆயிரம் வரை Paytm மூலம் பணம் எடுக்கலாம்!
இந்த சேவை NPCI இன் கட்டண சேவையை அடிப்படையாகக் கொண்டது என்று Paytm கூறியது *99# எண் கட்டமைப்பற்ற கூடுதல் சேவை தரவு (USSD) சேனல் மூலம் வேலை செய்கிறது.
யு.எஸ்.எஸ்.டி (USSD) அடிப்படையிலான வங்கிச் சேவையைப் பயன்படுத்துவதற்கு மொபைல் இணைய தரவு வசதி இல்லாமல் அடிப்படை தொலைபேசி சேவைகளை பயன்படுத்தி மொபைல் வங்கி பரிவர்த்தனைகளையும் இந்த சேவை அனுமதிக்கிறது.
பிற செய்தி படிக்கவும்: ரூபாய் நோட்டில் கொரோனா வைரஸ்... Paytm பயன்படுத்த விரும்பும் மக்கள்...
நாட்டில் 550 மில்லியனுக்கும் அதிகமான தொலைபேசி பயனர்கள் உள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் புலம்பெயர்ந்தோர் மற்றும் தினசரி ஊதியம் பெறுபவர்கள். தற்போதைய லாக் டவுன் காரணமாகவும், முக்கியமாக மொபைல் போன் கடைகளை நம்பியிருக்கும் பலர், ரீசார்ஜ் கியோஸ்க்களில் இணைய தரவு வசதி அரிதாக இருக்கும் அடிப்படை அம்ச தொலைபேசிகளை டாப்-அப் செய்வது கடினம்” என்று Paytm மூத்த துணைத் தலைவர் அபய் ஷர்மா கூறினார்.
என்.பி.சி.ஐ.யின் தலைமை நிர்வாக அதிகாரி பிரவீணா ராய் கூறுகையில், யு.எஸ்.எஸ்.டி-அடிப்படையிலான சேவையானது, யுபிஐ ஐடியைக் கொண்ட சிறப்பு தொலைபேசி பயனர்கள், தங்கள் வட்டாரங்களில் மொபைல் ரீசார்ஜ் கடைகள் இல்லாவிட்டாலும் கூட, தங்கள் போன்களுக்கு ரீசார்ஜ் செய்து கொள்வதற்கு உதவும்.
"BHIM யுபிஐ-யில் தங்களுடைய யுபிஐ ஐடிகளை பதிவுசெய்து யு.எஸ்.எஸ்.டி சேவையையும், தடையில்லாமல் மொபைல் ரீசார்ஜ் செய்துக் கொள்ளலாம்" என்றும் ராய் கூறினார்.
பிற செய்தி படிக்கவும்: ரிலையன்ஸ் ஜியோவின் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் தரவுகளின் மலிவான திட்டங்கள்
கடந்த இரண்டு மாதங்களில், நுகர்வோர் தொடர்ந்து இணைந்திருக்க உதவும் வகையில் நிறுவனம் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்று வோடஃபோன் ஐடியா லிமிடெட் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் இயக்குநர் அவ்னேஷ் கோஸ்லா தெரிவித்தார்.
"Paytm உடனான இந்த ஒப்பந்தமானது, டிஜிட்டல் இணையத்துடன் இணைக்கப்படாத ஏராளமான வாடிக்கையாளர்களுக்கு மொபைல் இணையம், டிஜிட்டல் பயன்பாடு மற்றும் பிஸிக்கல் ரீடைல் டச் பாயிண்டையும் சார்ந்து இல்லாமல் யு.எஸ்.எஸ்.டி மூலம் ரீசார்ஜ் செய்ய உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று அவர் கூறினார்.
ஒரு வாடிக்கையாளரின் யுபிஐ ஐடி BHIM யுபிஐ உடன் பதிவு செய்யப்படவில்லை என்றால், அவர்கள் *99# என்ற எண்ணை டயல் செய்ய வேண்டும், அதன் பிறகு யு.எஸ்.எஸ்.டி டயல் செய்யப்பட்ட மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட அனைத்து வங்கி கணக்குகளும் அதில் தோன்றும்.
(மொழியாக்கம் அருள்ஜோதி அழகர் சாமி)