வகுப்பறைக்குள் புர்கா அணிய தடை; பாட்னா கல்லூரி நிர்வாகம்!

பாட்னாவில் உள்ள புகழ்பெற்ற கல்லூரிகளில் ஒன்றான JD மகளிர் கல்லூரி தனது மாணவருக்கு ஒரு புதிய சர்ச்சைக்குறிய ஆடைக் குறியீட்டை அறிமுகப்படுத்தியது...

Last Updated : Jan 25, 2020, 04:44 PM IST
வகுப்பறைக்குள் புர்கா அணிய தடை; பாட்னா கல்லூரி நிர்வாகம்! title=

பாட்னாவில் உள்ள புகழ்பெற்ற கல்லூரிகளில் ஒன்றான JD மகளிர் கல்லூரி தனது மாணவருக்கு ஒரு புதிய சர்ச்சைக்குறிய ஆடைக் குறியீட்டை அறிமுகப்படுத்தியது...

இந்த புதிய விதிமுறையின் படி கல்லூரியின் மாணவிகள் கல்லூரி வளாகத்திற்குள் புர்கா அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. என்றபோதிலும், வகுப்பறைக்குள் புர்கா தடை குறித்த அறிக்கையை வெளியிட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, கல்லூரி தனது உத்தரவை வாபஸ் பெற்றது.

சனிக்கிழமை (ஜனவரி 25), கல்லூரி புரோக்டர் மற்றும் அதிபர் கையெழுத்திட்ட அறிவிப்பானையில், JD மகளிர் கல்லூரி மாணவர்கள் புதிய ஆடைக் குறியீட்டை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். மேலும் மாணவ, மாணவிகள் இந்த ஆடைக் குறியீட்டை மீறியதாகக் கண்டறியப்பட்டால் ரூ.250 அபராதம் விதிக்கப்படும் என்று கல்லூரி பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

மேலும், "அனைத்து மாணவர்களும் சனிக்கிழமை தவிர ஒவ்வொரு நாளும் பரிந்துரைக்கப்பட்ட ஆடைக் குறியீட்டில் கல்லூரிக்கு வர வேண்டும். மாணவிகள்  கல்லூரியில் ‘புர்கா’ அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது", என கல்லூரியின் முதல்வரும், ப்ரொக்டரும் கையெழுத்திட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், பிற்பகுதியில், கல்லூரி நிர்வாகம் வகுப்பறைகளுக்குள் புர்கா அணிந்த மாணவர்கள் மீதான தடையை வாபஸ் பெற்றது. 

இந்நிலையில் ANI உடன் பேசிய கல்லூரி முதல்வர் டாக்டர் ஷியாமா ராய் இதுகுறித்து தெரிவிக்கையில்., "கல்லூரியில் மொபைல் போன் பயன்படுத்துவதை நாங்கள் தடை செய்துள்ளோம். மொபைல் பயன்பாட்டிற்கு ஒரு குறிப்பிட்ட மண்டலத்திற்கு நாங்கள் வசதி செய்துள்ளோம். கல்லூரி வளாகத்தில் புர்கா அணிவதற்கு தடை இல்லை, ஆனால் மாணவர்கள் விரும்பினால் வகுப்பறைகளில் அவர்கள் புர்காவை அகற்றலாம். எங்கள் ஒரே நோக்கம் கல்லூரியில் ஒழுக்கம் காப்பாற்ற பட வேண்டும் என்பது மட்டும் தான்" என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கல்லூரியின் சமஸ்கிருதத் துறையின் தலைவரும் தேர்வுக் கட்டுப்பாட்டாளருமான டாக்டர் அசோக் குமார் யாதவ் தெரிவிக்கையில்., "மாணவர்கள் நிர்ணயிக்கப்பட்ட ஆடைக் குறியீட்டில் வர வேண்டும். அவர்கள் பரிந்துரைக்கப்பட்ட ஆடைக் குறியீட்டில் வரவில்லை என்றால் அவர்கள் மீது ரூ.250 அபராதம் விதிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கல்லூரியில் 'புர்கா' அணிவது தடைசெய்யப்பட்டுள்ளது என்று கூறி, வளாகத்தில் பரிந்துரைக்கப்பட்ட ஆடைக் குறியீட்டைப் பின்பற்றுமாறு கல்லூரி மாணவர்களுக்கு அறிவுறுத்தியது. பின்னர் புர்கா குறித்தான தடையினில் மட்டும் திருத்தம் கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது.

Trending News