குழந்தைகள் எந்த வயது வரை பெற்றோருடன் தூங்கலாம்? இதை தெரிஞ்சிக்கோங்க..

Up To What Age Should Children Sleep With Parents : குழந்தைகள் பலர், வளர்ந்த பின்பும் கூட தங்களின் பெற்றோர்களுடன் உறங்குவர். எந்த வயது வரை அவர்கள் பெற்றோருடன் உறங்கலாம் தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Dec 9, 2024, 04:30 PM IST
  • எந்த வயது வரை குழந்தைகள் பெற்றோருடன் உறங்க வேண்டும்?
  • குழந்தைகள் தனியாக உறங்குவதால் ஏற்படும் நன்மைகள்!
  • நீங்கள் அறியாத விஷயங்கள் பல..
குழந்தைகள் எந்த வயது வரை பெற்றோருடன் தூங்கலாம்? இதை தெரிஞ்சிக்கோங்க.. title=

Up To What Age Should Children Sleep With Parents : நம்மில் பலர் குழந்தையாக இருக்கும்போது, பெற்றோர்களுடன் இரவில் உறங்கி இருப்போம். ஒரு குறிப்பிட்ட வயது வந்தவுடன் அவர்கள் வீட்டில் இருக்கும் இன்னொரு அறையில் நம்மை உறங்க வைப்பர். இது அனைத்து இனங்களையும் நடக்காது என்றாலும், பெரும்பாலான வீடுகளில் பெற்றோர்களும் குழந்தைகளும் வெவ்வேறு அறையில்தான் உறங்குகின்றனர். குழந்தைகள் எந்த வயது வரை பெற்றோர்களுடன் உறங்கலாம் தெரியுமா?

எந்த வயது வரை உறங்கலாம்?

குழந்தைகள் பிறந்த போதிலிருந்து தங்களின் தேவைகளை வெளியில் சொல்லத் தெரியாத வயது வரை, அவர்கள் பெற்றோருடன் தூங்கலாம். இந்தியாவைப் பொறுத்தவரை பிறந்த போது இருந்து, 5 வயது வரை குழந்தைகள் பெற்றோருடன் உறங்குவதாக கூறப்படுகிறது. இந்த மாதத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு அவ்வப்போது தாய் தந்தையின் அரவணைப்பு இரவில் தேவைப்படும். அல்லது ஒரு சில குழந்தைகள் ஒன்றரை வயது வரை பால் குடிக்கும் குழந்தைகளாக இருக்கும். அதற்காக குழந்தைகளை ஐந்து வயது வரை பெற்றோர்கள் அவர்களுடன் உறங்க வைத்துக்கொள்வர். வெளிநாடுகளில் இனிய பிறந்தநாள் வேறு அறையில் உறங்க வைப்பது வழக்கம். ஆனால் இந்த நடைமுறை இந்தியாவில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

பள்ளிக்கு செல்லும் வயது: 

இந்தியாவைப் பொறுத்தவரை 6-10 வயதில் இருக்கும் குழந்தைகள் பெற்றோர்களை விடுத்து, தனி அறையில் உறங்க பழகிக் கொள்கின்றனர். இந்த வயதில் பெரும்பாலான குழந்தைகள் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்து விடுவர். அவர்கள், தனித்து செயல்பட வேண்டும் என்பதற்காக தனியாக அல்லது தனியான மெத்தை இவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. கொஞ்சம் பெரிதாக இருக்கும் குடும்பமாக இருந்தால் குழந்தைகள் அவர்களது உடன் பிறந்தவர்களுடன் ரூமை ஷேர் செய்ய நேரிடும். இதனால், இந்த வயதில் பெரும்பாலான பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களுடன் உறங்காமல் இருப்பர். 

டீன் ஏஜ்: 

டீன் ஏஜ் வருவதற்கு முன்னாள் இருக்கும் 10 வயது அல்லது 11 வயதில், பெற்றோர்களே பிள்ளைகளை தனி அறையில் உறங்க ஊக்குவிப்பராம். ஆனால், இந்த வயதிலும் ஒரு சில குழந்தைகள் தனியாக உறங்க பயப்படுவார்களாம். இதனால் இந்த நிலை அவ்வப்போது மாறலாம். ஆனால், முழு டீன்-ஏஜ் வந்த பிறகு அவர்கள் கண்டிப்பாக தனி அறையில்தான் உறங்குகின்றனர். 

மேலும் படிக்க | பெற்றோர்கள் சொல்லாமலேயே குழந்தைகள் கற்றுக்கொள்ளும் 7 விஷயங்கள்!!

ஏன் தனியறையில் உறங்க வேண்டும்? 

  • குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை வளரவும் மன உறுதி மேம்படவும் பெற்றோர்கள் அவர்களை தனியறையில் உறங்க வைக்கின்றனர். 
  • குழந்தைகளுக்கு நிம்மதியான உறக்கம் கிடைக்க அவர்களை தனியறையில் உறங்க வைக்கலாம். சில பெற்றோர்களுக்கு இரவில் குறட்டை விடும் பழக்கம் இருக்கலாம், அல்லது இரவில் தாமதமாக உறங்கும் பழக்கம் இருக்கலாம். குழந்தைகள் இதனால் பாதிக்கப்படாமல் இருப்பர். 
  • பெற்றோர்களால் குழந்தைகள் முன்னிலையில் நெருக்கத்தை காட்ட இயலாமல் இருக்கும். இதனால் இவர்கள் குழந்தைகளை தனியறையில் உறங்க வைக்கலாம். 
  • குழந்தைகள், தனியாக உறங்க ஆரம்பிக்கும் போது அவர்களுக்கு சுதந்திர உணர்வு அதிகரிக்கும். இது, அவர்கள் வளர வளர வாழ்வில் வரும் பிற பிரச்சனைகளையும் தாண்டி வர உதவும்.
  • குழந்தைகளை தனியாக உறங்க வைப்பது, அவர்களை எதிர்காலத்திற்கு ஏற்றவாறு முன்னேற்றும். இதனால் அவர்கள், “யாரேனும் என்னுடன் இருந்தால்தான் உறக்கம் வரும்” என்ற நிலைமை இல்லாமல் இருக்கும். 

மேலும் படிக்க | பெற்றோர்கள் கவனத்திற்கு! குழந்தைகள் உங்களிடமிருந்து கொள்ளும் முக்கிய விஷயங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News