உங்க குழந்தை கணக்கில் வீக்கா...கவலை வேண்டாம்.. இந்த டிப்ஸ் கை கொடுக்கும்..!!

சில குழந்தைகள் பிற பாடங்களில் மிகவும் திறமையானவர்களாக இருந்தாலும் கணக்கு என்ற பெயரைக் கேட்டவுடனே வியர்த்துவிடும். சில குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே கணிதத்தில் ஆர்வம் இருக்காது. உங்கள் குழந்தையும் இவர்களில் ஒருவராக இருந்தால், அவருக்கு கணிதம் கற்பிக்கும் முறையை மாற்ற வேண்டும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 27, 2024, 11:16 AM IST
  • கணிதத்தை ஒரு பாடமாக மட்டும் பார்க்காமல், உங்கள் தினசரி பழக்க வழக்கத்திலும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
  • புத்தகத்தை தாண்டி புதுமையான முயற்சிகளை மேற்கொள்ளுதல்.
  • அடித்தளம் வலுவாக இருந்தால் கற்பது மிகவும் எளிதாகும்.
உங்க குழந்தை கணக்கில் வீக்கா...கவலை வேண்டாம்.. இந்த டிப்ஸ் கை கொடுக்கும்..!! title=

சில குழந்தைகள் பிற பாடங்களில் மிகவும் திறமையானவர்களாக இருந்தாலும் கணக்கு என்ற பெயரைக் கேட்டவுடனே வியர்த்துவிடும். சில குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே கணிதத்தில் ஆர்வம் இருக்காது. கணிதக் கேள்விகளைப் பார்த்தாலே பயப்படத் தொடங்குகிறார்கள். உங்கள் குழந்தையும் இவர்களில் ஒருவராக இருந்தால், அவருக்கு கணிதம் கற்பிக்கும் முறையை மாற்ற வேண்டும். 

கணக்கை பொறுத்தவரை, அடித்தளம் மிகவும் நன்றாக இருக்க வேண்டிய ஒரு பாடம். இல்லை என்றால் எதிர்காலத்தில் அவர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும். எனவே, உங்கள் குழந்தை சிறிய வகுப்பில் இருக்கும் போதெ, அவர்களுக்கு கணிதத்தில் ஆர்வத்தையும் ஏற்படுத்த தொடங்குங்கள். இன்று நாங்கள் உங்களுக்கு எளிய கூறும் சில எளிய டிப்ஸ்களை (Parenting Tips)பின்பற்றுவதன் மூலம், உங்கள் குழந்தைகளுக்கு எளிதாகக் கணிதம் கற்பிக்க முடியும்.

கணிதத்தை ஒரு பாடமாக மட்டும் பார்க்காமல், உங்கள் தினசரி பழக்க வழக்கத்திலும் சேர்த்துக்கொள்ளுங்கள்

குழந்தைகளுக்கு புத்தகத்தில் உள்ள கணிதத்தை மட்டும் கற்பிக்காமல், அவர்களின் அன்றாட வழக்கத்திலும் சேர்த்துக்கொள்ளுங்கள். உதாரணமாக நீங்கள் அவர்களுக்கு எண்ணுவதற்கு பணம் கொடுக்கலாம். குழந்தைகளை உங்களுடன் சந்தைக்கு அழைத்துச் சென்று பாக்கி பணத்தை கணக்கிடுதல், பொருட்களை அளவிடுதல் மற்றும் எண்ணுதல் போன்றவற்றைச் செய்ய ஊக்கப்படுத்துங்கள். இதன் மூலம், குழந்தை படிப்படியாக கணிதத்தில் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளும். மேலும் அவரது கணித அறிவு மட்டுமல்லாது, சமூக அறிவும் கூட மேம்படும்.

மேலும் படிக்க |  உங்கள் குழந்தையின் தன்னம்பிக்கை வளர... நீங்கள் செய்ய வேண்டியவை..!!

புத்தகத்தை தாண்டி புதுமையான முயற்சிகளை மேற்கொள்ளுதல்

உங்கள் பிள்ளைக்கு கணிதம் கற்பிக்க புத்தகப் பிரதிகளை மட்டும் பயன்படுத்தாதீர்கள். படிப்பை சுவாரஸ்யமாக்க நீங்கள் பல்வேறு வகையான புதுமையான விஷயங்களைப் பயன்படுத்தலாம். குழந்தை வயதில் மிகவும் சிறியவராக இருந்தால், அபாகஸ் உதவியுடன் கூட்டல் மற்றும் கழித்தல் ஆகியவற்றைக் கற்பிக்கலாம். இதனுடன், எந்தவொரு கடினமான கருத்தையும் எளிதாக விளக்கக்கூடிய சில வீடியோக்களின் உதவியையும் நீங்கள் பெறலாம். உங்கள் குழந்தையின் வகுப்பிற்கு ஏற்ப நீங்கள் வெவ்வேறு வெர்க் ஷீட்டுகள்  மற்றும் சில பலகை விளையாட்டுகளையும் பயன்படுத்தலாம்.

அடித்தளம் வலுவாக இருந்தால் கற்பது மிகவும் எளிதாகும்

ஒரு குழந்தை கணித பாடத்தை கண்டு பயப்படுகிறதென்றால், அதனுடைய அடித்தளம் வலுவாக இல்லாதது ஒரு காரணமாக இருக்கலாம். ஒரு குழந்தைக்கு கணிதம் கற்பிக்க முற்படும் போது, அடிப்படைக் கருத்துகளைப் பற்றி கண்டிப்பாக அவரிடம் பேசுங்கள். அந்தக் கருத்து அவருக்குத் தெரியாவிட்டால் ஆரம்பத்திலிருந்தே அவருக்குக் கற்றுக் கொடுங்கள். நினைவில் கொள்ளுங்கள், கணிதத்தில் குறுக்குவழிகளை கடைபிடிப்பது புத்திசாலித்தனம் அல்ல. இது வலுவான அடித்தளத்தை உருவகக உதவாது. குழந்தைக்கு ஒரு நல்ல அடித்தளம் இல்லையென்றால், அவர் நிச்சயமாக சிக்கல்களை எதிர்கொள்வார்.

சிறிய இலக்குகள் மற்றும் தினசரி திருத்தம் அவசியம்

உங்கள் குழந்தைக்கு கணிதம் கற்பதை சுமையகா ஆக்க வேண்டும். அவர் இன்னும் புரிந்து கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன. அவசரப்படாமல் மெதுவாக கற்றுக்கொள்ளலாம்.  அவர்கள் மீது எந்த அழுத்தத்தையும் கொடுக்காதீர்கள். வற்புறுத்தி செய்வதன் மூலம் அவர் கணிதத்திலிருந்து இன்னும் விலகி ஓடிவிடுவார். தினமும் உங்கள் குழந்தைக்கு சிறிய இலக்குகளை நிர்ணயிக்கவும். அவை ஒரு கருத்தை தெளிவாக புரிந்துகொள்வதையும் நடைமுறைப்படுத்துவதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதனுடன், அதன் தினசரி திருத்தத்திலும் கவனம் செலுத்துங்கள். தினசரி மறுபரிசீலனை இல்லை என்றால், குழந்தை சில விஷயங்களை மறந்துவிடலாம்.

மேலும் படிக்க |  துரித உணவை அதிகம் சாப்பிடும் குழந்தைகளை கட்டுப்படுத்துவது எப்படி...!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News