இதை செய்யாவிட்டால் பான் கார்டு அம்போ... உடனே கவனிங்க!

வரும் 2023 மார்ச் 31ஆம் தேதிக்குள் உங்கள் பான் கார்டில் இதை செய்யாவிட்டால், ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து பான் கார்டு செயலிழந்துவிடும்.

Written by - Sudharsan G | Last Updated : Dec 25, 2022, 08:27 AM IST
  • பான் கார்டு செயலிழந்தால் பல்வேறு பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்.
  • வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
  • பான் கார்டு அனைத்து சேவைகளிலும் ஒரு முக்கியமான ஆவணமாக பார்க்கப்படுகிறது.
இதை செய்யாவிட்டால் பான் கார்டு அம்போ... உடனே கவனிங்க! title=

அடுத்த ஆண்டு, அதாவது 2023 மார்ச் 31ஆம் தேதிக்குள் ஆதாருடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் செயல்படாது என்று வருமான வரித்துறை நேற்று (டிச. 24) அறிவித்துள்ளது. வருமான வரித்துறை தனது அறிவிப்பில்,"இது கட்டாயம், அவசியம். தாமதிக்காதீர்கள், இன்றே இணைத்துவிடுங்கள்!" என குறிப்பிட்டுள்ளது.

மேலும், "வருமான வரிச் சட்டம் 1961இன் படி, விலக்கு வகையின் கீழ் வராத அனைத்து பான் கார்டு பயனாளர்களும் 2023ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதிக்கு முன் தங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது கட்டாயமாகும். ஆதாருடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் 2023, ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து செல்லாது" என்று தெரிவித்துள்ளது. 

2017ஆம் ஆண்டு மே மாதம், மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி 'விலக்கு வகை' என்பது அசாம், ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களில் வசிக்கும் நபர்களுக்கானது.  வருமான வரிச் சட்டம், 1961இன்படி மேற்குறிப்பிட்ட இடங்களில் வசிக்காத முந்தைய ஆண்டில் 80 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர், இந்தியக் குடிமகன் அல்லாதவர்களும் இதில் அடக்கம்.

மேலும் படிக்க | ரயிலில் டிக்கெட் செக் செய்யக்கூடாது! இந்த விசேஷ விதிமுறை உங்களுக்கு தெரியுமா?

மத்திய நேரடி வரி வசூல் வாரியம் (CBDT) வெளியிட்ட ஒரு சுற்றறிக்கையில், ஒரு பான் கார்டு செயலிழந்தவுடன், I-T சட்டத்தின்கீழ் அதன் அனைத்து விளைவுகளுக்கும் அந்த பயனாளர்தான் பொறுப்பாவார் மற்றும் பல விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

செயல்படாத பான் எண்ணைப் பயன்படுத்தி, அந்த நபர் வருமான வரி விவரங்களை தாக்கல் செய்ய முடியாது, நிலுவையில் உள்ள வருமானம் செயலாக்கப்படாது. செயல்படாத பான் கார்டு மூலம் நிலுவையில் உள்ள பணத்தைத் திரும்பப் பெற முடியாது. பான் கார்டு செயலிழந்தவுடன், குறைபாடுள்ள வருமானம் தொடர்பான நிலுவையில் உள்ள நடைமுறைகளை முடிக்க முடியாது மற்றும் அதிக விகிதத்தில் வரி கழிக்கப்பட வேண்டும்.

மேலே குறிப்பிடப்பட்டதை தவிர, அனைத்து வகையான நிதி பரிவர்த்தனைகளுக்கும் பான் கார்டு முக்கியமான ஆவணமாக உள்ளது. KYC (உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்) அளவுகோல்களில் ஒன்றாக இருப்பதால், வங்கிகள் மற்றும் பிற நிதி இணையதளங்கள் போன்ற பல்வேறு தளங்களில் வரி செலுத்துவோர் சிரமத்தை சந்திக்க நேரிடும்.

மத்திய நேரடி வரி வசூல் வாரியம்தான் வருமான வரித் துறைக்கான கொள்கையை உருவாக்குகிறது. இந்தியாவில் வசிப்பவருக்கு தனித்துவ அடையாள அட்டையாக ஆதார் வழங்கப்பட்டாலும், பான் என்பது ஒரு நபர், நிறுவனம் அல்லது நிறுவனத்திற்கு IT துறையால் ஒதுக்கப்பட்ட 10 இலக்க எண்ணெழுத்துகளாகும்.

மேலும் படிக்க | இனி இதற்கெல்லாம் பான் அட்டை தேவையில்லை... பட்ஜெட்டில் வருகிறது அப்டேட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News