பான், ஆதார் அட்டை இணைப்புக்கான காலக்கெடு மார்ச் 31, வரை நீட்டிப்பு..!

பான், ஆதார் அட்டை இணைப்பதற்கான காலக்கெடு மார்ச் 31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது..... ஆன்லைனில் எப்படி பான், ஆதார் அட்டையை இணைப்பது என தெரிந்து கொள்ளுங்கள்..!

Last Updated : Jun 25, 2020, 03:26 PM IST
பான், ஆதார் அட்டை இணைப்புக்கான காலக்கெடு மார்ச் 31, வரை நீட்டிப்பு..! title=

பான், ஆதார் அட்டை இணைப்பதற்கான காலக்கெடு மார்ச் 31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது..... ஆன்லைனில் எப்படி பான், ஆதார் அட்டையை இணைப்பது என தெரிந்து கொள்ளுங்கள்..!

நிரந்தர கணக்கு எண் (PAN) அட்டையை ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கான காலக்கெடுவை நீட்டிப்பதற்கான அறிவிப்பை மத்திய நேரடி வரி வாரியம் (CBDT) புதன்கிழமை (ஜூன் 24) வெளியிட்டுள்ளது. அதில், பான் கார்டை ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கான தேதி மேலும் மார்ச் 31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

2018-19 நிதியாண்டிற்கான வருமான வரி அறிக்ககை (ITR) தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மத்திய அரசு 2020 ஆம் ஆண்டு ஜூலை 31 வரை, ஒரு மாதத்திற்கு நீட்டித்துள்ளது. அத்துடன், ஆதார் அட்டையை, பான் நம்பருடன் இணைப்பதற்கான கால வரம்பையும் மத்திய அரசு நீட்டித்துள்ளது. பான் கார்டுடன் ஆதார் நம்பரை இணைக்க, 2021 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை, காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலையடுத்து, அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

ஆன்லைனில் எப்படி பான், ஆதார் அட்டையை இணைப்பது....  

படி 1: முதலில் ஆன்லைன் வழியாக வருமான வரித்துரையில் அதிகாரபூர்வமான இ-ஃபில்லிங் வலைத்தளத்திற்குள் (https://www.incometaxindiaefiling.gov.in) செல்ல வேணடும். 

படி 2: அடுத்து வலைதளத்தின் இடது பக்கதில் உள்ள Link Aadhaar எனும் விருப்பத்தை தேர்வு செய்யவும். 

படி 3: அதன்பின்பு உங்களிக் பான் மற்றும் ஆதார் விவரங்களை பதிவிடும் பக்கத்திற்குள் நுழைவீர்கள். அதில், பான், ஆதார் எண் மற்றும் ஆதாரில் குறிப்பிட்டுள்ளதை போன்ற பெயர் போன்ற விவரங்களை பதிவிட வேண்டும்.

READ | 'நான் தற்கொலை செய்து கொண்டால் அதிர்ச்சி ஆக வேண்டாம்' பகீர் கிழப்பிய மாணவர்..!

படி 4: பின்னர் I have only year of birth in Aadhaar card என்ற விருப்பமும், அதன் அருகில் ஒரு டிக் பாக்ஸ் ஒன்றும் இருக்கும். இது உங்களின் ஆதார் அட்டையில் நீங்கள் பிறந்த ஆண்டு மட்டுமே குறிப்பிடப்பட்டு இருப்பின் அந்த டிக் பாக்ஸை கிளிக் செய்ய வேண்டும். 

படி 5: அதன்பின்பு வலைதள பக்கத்தில் இருக்கும் Captcha code-யை நிரப்பவும், பின்னர் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP ஒன்றை அனுப்பச் சொல்லியும் நீங்கள் கோரிக்கை விடுக்கலாம். கடைசியாக எல்லாம் முடிந்த பின்னர் Link Aadhaar என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

Trending News