வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வோர் குறிப்பிட்ட நாடுகளில் தங்களது இந்திய ஓட்டுநர் உரிமத்தையே வாகனங்கள் ஓட்டும் போது பயன்படுத்திக் கொள்ளாலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, நார்வே, அமெரிக்கா, சுவிட்ஸ்ர்லாந்து, நியூசிலாந்து தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளுக்கு இந்திய ஓட்டுநர் உரிமத்தை வாகனங்கள் ஓட்டும் போது பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இந்தியர்கள் தங்களது இந்திய ஓட்டுநர் உரிமத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால் ஒரு வருடம் வரை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் இந்திய ஓட்டுநர் உரிமைத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் ஒரு வருடம் வரை மட்டுமே அனுமதி அத்துடன் இது குறிப்பிட்ட சில வாகங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் தங்களது ஓட்டுநர் உரிமைத்தை பயன்படுத்திகொள்ளலாம். ஆனால் குறிப்பிட்ட சில வாகங்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.
சுவிட்சர்லாந்து மற்றும் நியூசிலாந்தில் இந்திய ஓட்டுநர் உரிமத்தை ஒரு வருட காலத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் வாகனம் ஓட்டுபவர்கள் குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தி ஆகி இருக்க வேண்டும்.
ஜெர்மனி மற்றும் தென் ஆப்ரிக்கா நாட்டில் இந்திய ஓட்டுநர் உரிமைத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
நார்வே நாட்டில் இந்திய ஓட்டுநர் உரிமத்தை பயன்படுத்தி 3 மாதங்கள் வாகனங்களை இயக்க முடியும்.