இனி ரயில் பயணத்தில் இந்த தொல்லைகள் இருக்காது!

காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே ரயில் பயணிகளின் டிக்கெட்டுகளை சரிபார்க்க TTE-க்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.   

Written by - RK Spark | Last Updated : Apr 1, 2022, 02:26 PM IST
  • இந்தியன் ரயில்வே புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது.
  • தூங்கும் பயணிகளை எழுப்ப அதிகாரம் இல்லை.
  • இரண்டு நிறுத்தங்கள் வரை பயணிக்காக சீட் வெயிட்டிங்கில் இருக்கும்.
இனி ரயில் பயணத்தில் இந்த தொல்லைகள் இருக்காது!  title=

அன்றாடம் ரயில்களில் பணி நிமித்தமாகவோ அல்லது சொந்த வேலையாகவோ சுமார் 40 கோடி பேர் பயணம் செய்கின்றனர்.  ரயிலில் பயணம் செய்யும் ஒவ்வொரு பயணிகளுக்கும் அவர்களது பயணம் சிறந்த முறையில் அமைய வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு நிச்சயம் இருக்கும்.  ரயிலில் பயணம் செய்யும்போது தேவையற்ற இரைச்சல், இருக்கை சரியாக அமையாதது, டிக்கெட் பரிசோதனை என பயணிகள் சில அவஸ்தைகளை சந்திக்கின்றனர்.  இனிமேல் இதுபோன்ற சில விஷயங்களால் உங்களுக்கு தொந்தரவு ஏற்படாமல் இருக்க இந்தியன் ரயில்வே உங்களுக்கான சில விதிமுறைகளை வகுத்துள்ளது.

மேலும் படிக்க | Indian Railways: டிக்கெட் முன்பதிவு விதிகளில் மாற்றம், இதை செய்தால் அதிக நன்மைகள் கிடைக்கும்
 
இந்திய ரயில்வேயின் விதிகளின்படி, பயணத்தின் போது நீங்கள் தூங்கினால் கூட, இனி உங்களை TTE எழுப்பக்கூடாது.  காலையிலிருந்து நீங்கள் ரயிலில் பயணம் செய்தால், இரவு 10 மணிக்குப் பிறகு TTE உங்களை தொந்தரவு செய்யகூடாது.  அதோடு இரவு 10 மணிக்குப் பிறகு ரயில் டிக்கெட்டையோ அல்லது உங்களது அடையாள அட்டையையோ காண்பிக்குமாறு TTE பயணிகளிடம் கேட்கவும் கூடாது.  காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே ரயில் பயணிகளின் டிக்கெட்டுகளை சரிபார்க்க TTE க்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. 

காலை நேரத்தில் பயணம் செய்யும் பயணிகள் தூக்கத்தில் இருந்தால் அவர்களை எழுப்பி டிக்கெட்டுகளை , TTEக்கு அதிகாரம் உண்டு.  ஏனெனில் ரயிலில் பயணம் செய்யும் அனைத்து பயணிகளின் விவரங்களும்  TTEயிடம் தெளிவாக இருக்கும்.  அந்த பயணியின் இருக்கை, எந்த நிறுத்தத்தில் ஏறினார்கள், எந்த நிறுத்தத்தில் இறங்குவார்கள் என்பது குறித்த அனைத்தும் அவருக்கு தெரிந்திருக்கும்.  அதேபோல இரவு 10 மணிக்குப் பிறகு ஒரு பயணி ரயிலில் ஏறினால், அவர்களின் ரயில் டிக்கெட் அல்லது அடையாள அட்டையை சரிபார்க்க TTEக்கு முழு உரிமையும் உள்ளது.

ரயில் பயணத்தின் போது கீழ் பெர்த்தில் பயணம் செய்யும் சில பயணிகள் பெரும்பாலும் இரவு 10 மணிக்கு மேல் தூங்காமல் சக பயணி யாரிடமாவது பேசிக்கொண்டு இருப்பார்கள்.  இதனால் நடுப்பெர்த்தில் முன்பதிவு செய்துள்ள பயணிகள் அவர்கள் தூங்க செல்லும் வரை காத்திருந்து அதன் பின்னரே நடுபெர்த்திற்கு உறங்க செல்கின்றனர்.  ரயில்வே விதிகளின்படி, நடு பெர்த்தில் பயணிக்கும் பயணிகள் இரவு 10 மணிக்கு மேல் அவர்களின் இருக்கையைத் திறந்து கொண்டு தூங்கலாம், அதேபோல காலை 6 மணிக்கு பிறகும் இருக்கையை திறந்துகொள்ளலாம்.

அடுத்ததாக ரயிலில் ஏற்கனவே தனக்கான இருக்கையை பதிவு செய்துள்ள பயணி குறிப்பிட்ட நிறுத்தத்தில் ஏறவில்லையெனில், 1 மணி நேரத்திற்கு அந்த பயணியின் இருக்கையை மற்ற பயணிக்கு ஒதுக்க மாட்டார். TTE அடுத்தடுத்த இரண்டு நிறுத்தங்கள் அல்லது அடுத்த மணி நேரத்திற்கு அந்த பயணியின் இருக்கையை மற்ற பயணிக்கு ஒதுக்க மாட்டார்.  மேலும் குறிப்பிட்ட பயணியின் போர்டிங் ஸ்டேஷனின் அடுத்த இரண்டு  நிறுத்தங்கள் வரை பயணி அவருக்கான இருக்கையை அடையாவிடில், பயணி ரயிலைப் பிடிக்கவில்லை என கருதி TTE மூன்றாவது நிறுத்தத்தைக் கடந்ததும் இருக்கையை வேறு ஒருவருக்கு ஒதுக்கிவிடுவார்.

மேலும் படிக்க | ஸ்மார்ட்ஃபோன் மூலம் இலவசமாக ரயிலை கண்காணிப்பது எப்படி?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News