நோர்வே தமிழ் திரைப்படவிழா அழைப்பிதழ் - விவரம் உள்ளே!

9வது நோர்வே தமிழ் திரைப்படவிழா-விற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என விழாக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Last Updated : Dec 21, 2017, 12:46 PM IST
நோர்வே தமிழ் திரைப்படவிழா அழைப்பிதழ் - விவரம் உள்ளே! title=

தமிழ் திரையுலக வளர்ச்சியின் அடுத்த கட்டத்தனை நோக்கி நகர்வாக சிறந்த கலைஞர்களுக்கு "தமிழர் விருது" வழங்கி, சிறந்த மதிப்பளிக்கும் பணியினை, ஒசுலோ நகரசபை முதல்வர் மரியான்னே போர்கன் தலைமையில் "நோர்வே தமிழ் திரைப்பட விழா" செய்து வருகின்றது.

நோர்வே தமிழ் திரைப்பட விழாவில் வழங்கப்படுகின்ற "தமிழர் விருது" தமிழ் திரைப்படங்களுக்கு மட்டும் அல்லாது சர்வதேச திரைப்படங்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றது.

தமிழ் மொழியின் சிறப்புகள் பற்றி எடுத்துச் சொல்லி, கலை, பண்பாடு, வரலாறு அடையாளம் தொடர்பாக வேற்று இனத்தவர்கள் கற்றுக்கொள்ளக்கூடிய சூழ்நிலைகளை உருவாக்கி, நெருக்கிய தொடர்புகளை நோர்வே தமிழ் திரைப்பட விழா வளர்த்து வருகின்றது.

அடுத்தாண்டு ஏப்ரல் 26-ஆம் நாள் முதல் 29-ஆம் நாள் வரை நடைப்பெறவுள்ள இந்த 9வது நோர்வே தமிழ் திரைப்படவிழா-விற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என விழாக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

விண்ணப்பம் தொடர்புக்கு:- www.ntff.no / tamilfilmfestival@gmail.com  

Trending News