ஊரையே சுற்றி வரும் நியூஸ் பேப்பரால் கொரோனா பரவுமா?.. உண்மை என்ன?

உலகெங்கிலும் உள்ள செய்தி தாள், வார இதழ்களால் COVID-19 பரவுவதாக எந்த அறிக்கையும் இல்லை என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளார்!!

Last Updated : Mar 25, 2020, 09:28 PM IST
ஊரையே சுற்றி வரும் நியூஸ் பேப்பரால் கொரோனா பரவுமா?.. உண்மை என்ன? title=

உலகெங்கிலும் உள்ள செய்தி தாள், வார இதழ்களால் COVID-19 பரவுவதாக எந்த அறிக்கையும் இல்லை என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளார்!!

கொடிய கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுநோயால் உலகம் முழுவதும் பயத்தில் உறைந்து கிடக்கும் நேரத்தில், பல்வேறு வதந்திகளும் பரவி வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டுக்குலேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் குறித்த பல கேள்விகளுக்கும் சந்தேககங்களுக்கும் WHO பதில் அளித்து வருகிறது. 
 
அந்த வகையில் செய்தித்தாள்கள் மூலம் கொரோனா பரவுமா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளது. பல்வேறு சூழ்நிலைகள், தடப்வெப்ப நிலைகளில் எடுத்து வரும் பொருட்கள் மூலம் கொரோனா பரவ குறைவான சாத்தியமே உள்ளது. எனவே, செய்தித்தாள்களும் இது போன்றது தான் என தெரிவித்துள்ளது. 

பாதிக்கப்பட்ட நபருக்கு வணிகப் பொருட்களை மாசுபடுத்துவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது மற்றும் COVID-19 ஐ ஏற்படுத்தும் வைரஸைப் பிடிக்கும் அபாயம் உள்ளது நகர்த்தப்பட்ட, பயணித்த, மற்றும் வெவ்வேறு நிலைமைகள் மற்றும் மிதமான வெப்பநிலைக்கு வெளிப்படும் ஒரு தொகுப்பிலிருந்து குறைவாகவும் உள்ளது. ”

ஹார்ட்ஃபோர்ட் ஹெல்த்கேர் இதை இன்னும் அப்பட்டமாகக் கூறுகிறது: “உங்கள் வீட்டிற்கு வழங்குவதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். கொரோனா வைரஸ்கள் பொருள்களில் நீண்ட காலம் நீடிக்காது. ”

"ஒரு நபர் வைரஸ் கொண்ட ஒரு மேற்பரப்பைத் தொட்டு COVID-19 ஐப் பெறுவது" சாத்தியமாகலாம் "என்று அமெரிக்க நோய்களுக்கான கட்டுப்பாட்டு மையங்கள் (சி.டி.சி) கூறுகிறது," ஆனால் இது வைரஸ் பரவுவதற்கான முக்கிய வழியாக கருதப்படவில்லை . ”
 
ஆனால், இந்திய மருத்துவ சங்கம், செய்தித்தாளும் மற்ற பொருட்களை போன்றது தான். ஆதலால செய்தித்தாள் வாசிக்கும் முன்பும் வாசித்த பின்னரும் கைகளை சுத்தம் செய்வது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Trending News