இனி டிஜிட்டல் ஆதார், ஓட்டுனர் உரிம பயன்படுத்தலாம்: ரயில்வே

ரயிலில் பயணிப்பவர் டிஜிட்டல் ஆதார் மற்றும் ஓட்டுனர் உரிமத்தை அடையாளமாக பயன்படுத்த ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

Last Updated : Jul 6, 2018, 09:11 AM IST
இனி டிஜிட்டல் ஆதார், ஓட்டுனர் உரிம பயன்படுத்தலாம்: ரயில்வே title=

ரயிலில் பயணிப்பவர் டிஜிட்டல் ஆதார் மற்றும் ஓட்டுனர் உரிமத்தை அடையாளமாக பயன்படுத்த ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

ரயில்களில் பயணிப்பவர் அரசு வழங்கிய ஏதாவது ஒரு ஒரிஜினல் அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும். அதில்ஆதார், பான் கார்டு, வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிமைம் உள்ளிட்டவைகள் அடங்கும். 

தற்போது இந்த ஒரிஜினல் அட்டைகள் தொலையாமல் இருக்க டிஜி லாக்கர் எனப்படும் இணயப் பெட்டகங்களில் பலர் சேமித்து வைத்துள்ளனர். இந்த ஆவணங்களை அடையாளமாக காட்ட அனுமதி அளிக்க வேண்டி பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.  இதனால் ஒரிஜினல் அட்டைகள் தொலைவதை தவிர்க்கலாம் என தெரிவித்தனர்.

இதையொட்டி ரயில்வே துறை, டிஜி லாக்கரில் சேமிக்கப்பட்டுள்ள டிஜிடல் ஆதார் மற்றும் ஓட்டுனர் உரிமங்களை பயணிகள் தங்கள் பயணத்தின் போது காட்டலாம். ரயில்வே அதிகாரிகள் அதை ஆதாரமாக ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அவை ஆவணங்களாக இல்லாமல் படமாக இருந்தால் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என அறிவித்துள்ளது.

Trending News