Currency Note Latest News: கள்ள நோட்டு என்பது சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட நாணய தாள்களைக் குறிக்கிறது. இது மக்களை மட்டுமின்றி, ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் ஏமாற்றகிறது. கள்ளநோட்டின் புழக்கத்தால் பணவீக்கம், பணமதிப்பிழப்பு, நிதி அமைப்பில் பொதுமக்களின் நம்பிக்கை இழப்பு, பொருளாதாரச் சீர்குலைவு போன்ற பல எதிர்மறையான விளைவுகள் ஏற்படும்.
கள்ள நோட்டுப் பிரச்சினை காலங்காலமாக பொருளாதாரத்தை தொடர்ந்து வரும் பிரச்சனையாகும். எனவே, இதில் இந்திய ரிசர்வ் வங்கியும் (RBI) மத்திய அரசும் இணைந்து இந்தியாவில் கள்ள நோட்டுகள் சிக்கலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கள்ள நோட்டுகளை மிகவும் கடினமாக்கும் வகையில், ரூபாய் நோட்டுகளில் பாதுகாப்பு அம்சங்களை ரிசர்வ் வங்கி நுணுக்கமாக்கியுள்ளது.
புதிய வழிகாட்டுதல்கள்
கூடுதலாக, கள்ள நோட்டுகளின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை எதிர்த்துப் போராடுவதற்கு அரசாங்கம் பல சட்டங்களையும் ஒழுங்குமுறைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது. ரூபாய் நோட்டின் சிறப்பு அம்சங்களைக் கண்டறியவும், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை அறிந்து கொள்ளவும், அவர்களுக்கு கள்ள நோட்டுகள் கிடைத்தால் அதன்மீது வங்கி அல்லது காவல்துறை அதிகாரிகளுக்கு புகாரளிக்க உதவும் வழிகாட்டுதல்களையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் ரூபாய் நோட்டுகள் நாட்டின் வளமான மற்றும் மாறுபட்ட கலாச்சாரம், சுதந்திரத்திற்கான போராட்டம், பெருமைமிக்க சாதனைகள் ஆகியவற்றை பிரதிபலிக்கின்றன. இந்திய ரிசர்வ் வங்கி சில ஆண்டுகளுக்கு முன்பு, ரூபாயில் மகாத்மா காந்தி (புதிய) தொடரின் ஒரு பகுதியாக ரூ. 2000 மதிப்பில் புதிய வடிவமைப்பு கொண்ட நோட்டுகளை அறிமுகப்படுத்தியது.
தனது முதல் முயற்சிலேயே செவ்வாய் கிரகத்திற்கு மங்கள்யான் செயற்கைகோளை அனுப்பிய இந்தியாவின் சாதனையை குறிக்கும் வகையில் செயற்கைகோளின் சின்னம் தலைகீழாக இருக்கும். நோட்டின் அடிப்படை நிறம் மெஜந்தா. 2000 ரூபாய் நோட்டு மற்ற பல வடிவமைப்புகளைக் கொண்டுள்ளது. இந்த நோட்டின் அளவு 66 மி.மீ., x 166 மி.மீ., ஆகும்.
ரூ. 2000 நோட்டை எப்படி சரிபார்ப்பது?
1. 2000 எண்ணை, படத்தில் சுட்டிக்காட்டியிருக்கும் இடத்தில் சரி பார்க்கவும்
2. 2000 எண் கொண்ட மறைந்த படம்.
3. தேவநாகரி எழுத்துருவில் 2000 என்ற எண் குறிக்கப்பட்டிருக்கும்.
4. மையத்தில் மகாத்மா காந்தியின் உருவப்படம்
5. மைக்ரோ எழுத்துக்கள் மூலம் இந்தியில் भारत (பாரத்) மற்றும் ஆங்கிலத்தில் India (இந்தியா) என குறிப்பிடப்பட்டிருக்கும்.
6. ரூபாய் நோட்டை சாய்த்து பார்த்தால், भारत (பாரத்), 'RBI' மற்றும் '2000' மறைமுக எழுத்துகளின் நிறத்தில் மாற்றம் ஏற்படும். பாதுகாப்புகாக கொடுக்கப்பட்ட பச்சை நிற கோடு, பச்சை நிறத்தில் இருந்து நீலமாக மாறும்.
7. பணம் குறித்த அரசின் உத்தரவாதப் பிரிவு, மகாத்மா காந்தியின் உருவப்படத்தின் வலதுபுறத்தில் உறுதிமொழிப் பிரிவு மற்றும் ரிசர்வ் வங்கியின் சின்னத்துடன் ஆளுநரின் கையொப்பம்.
8. மகாத்மா காந்தியின் உருவப்படம் மற்றும் எலக்ட்ரோடைப் (2000) வாட்டர்மார்க்ஸ்
9. மேல் இடது பக்கம் மற்றும் கீழ் வலது புறத்தில் ஏறுவரிசை (Ascending) எழுத்துருவில் எண்கள் கொண்ட எண் குழு.
10. நோட்டின் கீழ் வலதுபுறம் ரூபாய் சின்னத்துடன் கூடிய மதிப்பு எண், (₹2000) நிறம் மாறும் மையில் (பச்சையில் இருந்து நீலத்திற்கு மாறும்)
11. வலதுபுறம் அசோக தூண் சின்னம்
பார்வையற்றோருக்கான சில அம்சங்கள்:
12. மகாத்மா காந்தியின் உருவப்படம் (4), அசோக தூண் சின்னம் (11), வலதுபுறம் கிடைமட்ட செவ்வகத்தில் ₹2000 எண், இடது மற்றும் வலது பக்கங்களில் ஏழு கோண கோடுகள்
13. இடதுபுறத்தில் நோட்டு அச்சடிக்கப்பட்ட ஆண்டு
14. ஸ்லோகத்துடன் ஸ்வச் பாரத் லோகோ
15. இந்திய மொழிகளின் பெயர்
16. மங்கள்யானின் மையக்கருத்து
17. தேவநாக்ரி எழுத்துருவில் 2000
மேலும் படிக்க | எழுதினால் ரூபாய் நோட்டுகள் செல்லாது? - உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ