டெல்லி: கடந்த மாதம் 5 ஆம் தேதி 2019-2020 ஆம் ஆண்டுக்கான மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு நடத்தப்பட்டது. அப்பொழுது போனி புயல் ஏற்ப்பட்டதால், புயலால் மிகவும் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்தில் மட்டும் நீட் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் மே 20 ஆம் தேதி நடைபெற்றது.
மருத்துவப் படிப்புகான நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகிறது. எப்படி? எங்கே? எந்த இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்துக்கொள்ளலாம் என்று பார்போம்.
இந்தியா முழுவதும் நீட் தேர்வு சுமார் 14 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் எழுதினர். அனைவரும் எதிர்நோக்கி உள்ள நீட் தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணி அளவில் வெளியாகவுள்ளது.
எவ்வாறு தேர்வு முடிவை தெரிந்துக்கொள்வது....!!
ஸ்டேப் 1: ntaneet.nic.in & www.nta.ac.in அல்லது mcc.nic.in என்ற வலைதளத்தை அணுகவும்.
ஸ்டேப் 2: அந்த வலைதளத்தில் NEET Result 2019 கிளிக் செய்யுங்கள்.
ஸ்டேப் 3: கிளிக் செய்த பின்பு புதிய பக்கத்தில் கேட்டகப்படும் விவரங்கள் உள்ளிடவும்.
ஸ்டேப் 4: விவரங்களை பதிவு செய்தவுடன், உங்களுக்கான தேர்வு காட்டப்படும். அதை பதிவிறக்கவும் செய்க்க்கொள்ளவும்.