கொல்கத்தா: கொரோனா வைரஸ் தொற்றுநோயால் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் பலர் உள்ளனர். அவர்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் (Migrant Workers) நிலை மிகவும் மோசமான நிலையாக இருந்தது.
லாக்டௌன் போடப்பட்டிருந்த நிலையில், தங்கள் வீடுகளைச் சென்றடைய மூட்டை முடிச்சுகளுடன், குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நடந்தே அவரவர் கிராமங்களை நோக்கி புறப்பட்ட காட்சி இன்னும் நம் கண் முன் உள்ளது. அந்த நினைவு இன்னும் நம்மை பதட்டப்பட வைக்கிறது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் இருந்த பெண் தொழிலாளர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், அவர்கள் அனுபவித்த வலியை வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையிலும், கொல்கத்தாவில் உள்ள ஒரு துர்கா பூஜா பந்தலின் அமைப்பாளர்கள் துர்கா தேவியின் (Goddess Durga) பாரம்பரிய சிலையை வைக்கும் இடத்தில், துர்கையின் அம்சமாக, குழந்தையை சுமந்து செல்லும் ஒரு புலம் பெயர்ந்த பெண் தொழிலாளியின் சிலையை வைக்க முடிவு செய்துள்ளனர்.
Pallab Bhowmick's Ma Durga for the Pujo this year, as a migrant worker with her children.
Very evocative. pic.twitter.com/aAlJVI9XKO— Joy Bhattacharjya (@joybhattacharj) October 16, 2020
சேலை அணிந்திருக்கும் அப்பெண், சட்டை கூட அணியாத ஒரு குழந்தையை ஏந்தி நடந்து செல்கிறார். சரஸ்வதி தேவி, லட்சுமி தேவி உள்ளிட்ட பிற தெய்வங்களுக்கு பதிலாகவும் அவர்களது அம்சங்களாக புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
கொல்கத்தாவின் (Kolkata) பெஹாலாவில் உள்ள பாரிஷா கிளப் துர்கா பூஜா கமிட்டி, கொரோனா காரணமாக வேலை இழந்து, பிழைக்க வழியில்லாமல், நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் நடந்தே தங்கள் சொந்த ஊர்களுகுச் செல்ல கட்டாயப்படுத்தப்பட்ட புலம்பெயர்ந்த ஊழியர்கள் பட்ட கஷ்டங்களை கோடிட்டுக் காட்ட இந்த சிலைகளை வைக்க முடிவு செய்துள்ளது.
Migrant Mother as Goddess Durga at a Durga Puja Pandal this year
The idol of a migrant worker mother, a shirtless toddler (Kartick) in her arms, that will be worshipped as Goddess Durga at Barisha Club in Behala, West Bengal
Heart-touching! https://t.co/RsCm4L2D91 pic.twitter.com/eHej5ymX8R
— Dheeraj Aap ( Fan Of Ak & Ms ) (@AapActive123) October 15, 2020
"அந்தப் பெண்தான் அன்னை துர்கை. தனது குழந்தைகளுடன் சேர்ந்து வெயிலையும், பசியையும் எதிர்கொள்ளும் துணிச்சலான பெண். அவர் தனது குழந்தைகளுக்கு உணவு, தண்ணீர் மற்றும் சிறிது நிவாரணம் தேடுகிறார்,” என்று இதைச் செய்த கலைஞர் டெலிகிராப் இந்தியாவிடம் கூறினார்.
"லாக்டௌன் காலத்தில், டிவியில் பார்த்ததும், செய்தித்தாள்களில் படித்ததும் எனக்கு நினைவிருக்கிறது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நடந்தே வீடு திரும்பினர். அவர்களில் சிலர் சாலையிலேயே இறந்தும் போனார்கள்….அப்போது நவராத்திரி வர இன்னும் நேரம் இருந்தது. ஆனால் குழந்தைகளுடன் வீட்டிற்கு நடந்து செல்லும் பெண்களின் அழியாத துணிவு என்னை உலுக்கியது. என் மனதில், அவர்களை தெய்வங்களாக உருவகப்படுத்தினேன்” என்று அவர் மேலும் கூறினார்.
ALSO READ: கொரோனாவுக்கு மத்தியில் நவராத்திரி கொண்டாட்டங்களுக்கு தயாராகும் மேற்கு வங்காளம்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR